காதல் என்று வந்து விட்டாலே, கவிதையும் கூடவே சேர்ந்து கொள்ளும். யாராக இருந்தாலும், மனதில் காதல் சற்று எட்டி பார்த்து விட்டாலே, கவிதைகளும், கற்பனைகளும் அருவிபோல ஊற்றத் தொடங்கி விடும். இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணோ, ஆணோ, காதலில் விழுந்து விட்டாலே அது ஒரு அற்புதமான அனுபவமாக அவர்களது வாழ்க்கையில் இருக்கும். இது காதலர்களுக்கு மட்டும் அல்ல, கணவன் மனைவிக்கும் தான்.
Table of Contents
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் காதல் கொண்டிரிருந்திருப்பார்கள். அந்தச் சமயங்களில், தான் விரும்பும் காதலிக்கோ அல்லது காதலனுக்கோ ஏதாவது ஒன்றை பரிசளிக்க எண்ணுவார்கள். இந்த வகையில், மிக எளிதாக மற்றும் உடனடியாகவும் தரக்கூடிய ஒரு அருமையான பரிசு, காதல் கவிதையாக மட்டும் தான் இருக்க முடியும்.
அனைவரும் நிச்சயம் பல காதல் கவிதைகளைக் கேட்டிருந்திருப்பார்கள் அல்லது படித்திருந்திருப்பார்கள். ஏன் எழுதவும் செய்திருந்திருப்பார்கள். காதல் கவிதைகளை இரசிக்காதவர்கள் யாராவது உண்டா. காதலோ, ஊடலோ, காதல் என்ற ஒன்று சம்பத்தப் பட்டு விட்டாலே, அங்குக் கவிதையின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
காதல் கவிதைகளின் முக்கியத்துவம் என்ன? (Significance of Love Quotes)
இதற்கு ஒவ்வொரு தனி மனிதரின் அனுபவமே பதில் கூறும். எனினும், ஒரு நல்ல காதல் கவிதை, அந்தக் காதல் (love) உறவை மேலும் பலப்படுத்த உதவும். இது அந்தக் காதலன் தன் காதலி மீது வைத்திருக்கும் அன்பை வெளி படுத்த உதவும். அப்படி கவிதைகள் மூலம் காதலியை வர்ணனையோடு கவிதை மூலமாகக் காதலை காட்டும் போது, அவள் மேலும் நாணம் கொண்டு, காதலன் மீது அதிகம் அன்பு கொள்கிறாள்.
இது காதலுக்கு மட்டுமல்லாது, ஊடலில் இருக்கும் காதலர்களை ஒன்று சேர்த்து, ஒருவரது உணர்வை மற்றவருக்குப் புரிய வைக்கவும் இத்தகைய காதல் கவிதைகள் உதவுகின்றது.
பல ஊடலில் இருக்கும் காதலர்கள், தங்கள் உறவு இதனோடு முடிந்து விடுமோ என்ற ஐயத்தில் இருக்கும் போது, ஒரு அருமையான மற்றும் ஆழ் மனதில் இருந்து உணருவுகளோடு வரும் கவிதைகள், அந்த உறவை ஒன்று சேர்த்து மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வாழ்க்கையைத் தொடர உதவும்.
Also Read வாழ்க்கை மேற்கோள்கள்
எப்படி காதல் கவிதைகள் உறவைப் பலப்படுத்துகின்றது?
Pexels
ஒரு நல்ல காதல் கவிதை ஒருவரின் மனதில் இருக்கும் ஆசைகளையும், எண்ணங்களையும் அழகாக வெளி படுத்த உதவுகின்றது. கவிதைகள் நீளமாகப் பல வரிகளில் இருக்க வேண்டும் என்று இல்லை. சுருக்கமாக ஒரு வரி அல்லது இரண்டு வரி கவிதைகளும் ஒருவரின் எண்ணங்களை வெளி கூற உதவுகின்றது.
ஒரு அர்த்தமுள்ள காதல் கவிதை, புதிதாகத் தன் காதலை கூறி, உறவைத் தொடங்கிய காதலர்களுக்கோ அல்லது எதோ ஒரு காரணத்திற்க்காக ஊடலில் இருக்கும் காதலர்களுக்கோ அல்லது சில கருத்து வேறுபாடால் பிரியும் நிலையில் இருக்கும் காதலர்களுக்கோ மனதில் உள்ள என்னத்தை அப்படியே வெளி படுத்த உதவும். மேலும் இதில் இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால், அப்படி அந்தக் காதலன் அல்லது காதலி கூற எண்ணுவதை அந்தக் காதலி அல்லது காதலன் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக வெளிப் படும். இதுவே காதல் கவிதை அழகு என்றும் கூறலாம்.
Also Read About உற்சாகமூட்டும் வார்த்தைகள்
சிறந்த தமிழ் காதல் கவிதைகள் (Best Love Quotes In Tamil)
காதல் கவிதைகளை அனைத்து இடங்களிலும் காணலாம். இன்று பல மாத இதழ்கள், திரைப் படப் பாடல்கள், திரைப் பட வசனங்கள், பிரபலமான கவிஞர்களின் புத்தகங்கள் என்று பல இடங்களில் அழகான காதல் கவிதைகள் பல பார்க்கலாம். பிரபலமான அனைத்தும் பெரும்பாலும் சிறந்த மற்றும் அனேக மக்களால் அதிகம் நேசிக்கப் பட்ட கவிதையாக இருக்கும். எனினும், பிரபலமாகாத கவிதைகள் சிறப்பகா இல்லை என்று கூற முடியாது. மாறாக அதனைப் பற்றின அறிதல் பலருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த வகையில், நீங்கள் அறிந்து கொள்ள, சில சிறந்த காதல் கவிதைகள், உங்களுக்காக, பின் வருமாறு:
Also Read Children’s Day Wishes
காதலனுக்கு காதல் கவிதைகள் (Cute Love Quotes for Boyfriend)
காதலுனுக்கு காதலி எழுதும் ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக வெளிபடுகின்றது, அவள் மனதில் அதிகம் அன்பு நிறைந்திருக்கும் போது. இந்த வகையில், நீங்கள் தெரிந்து கொள்ள, சில அழகான காதல் கவிதைகள் (romantic quotes) காதலி காதலனுக்கு எழுதியது
1. “உன்கூடதான் இருப்பேன்
இப்ப மட்டுமல எப்பவும்…”
2. “நான்கு திசை இருப்பது தெரியும்.
நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே…
அது ஏன் என்று தான் தெரியவில்லை.
இது தான் காதலா? இல்லை இதுவும் காதலா?
3. “முதலில் நட்பு கொண்டேன் பிறகு காதல் கொண்டேன்
நட்பு கொண்டது உன்னிடம்
காதல் கொண்டது உன் நட்பிடம்.”
4. “கண்ணுக்குள் என்னவர்
கனவே கலையாதே”
5. “துணை என்பது என்னோடு நிற்பவன் அல்ல.
எனக்காக வாழ்க்கை முழுவதும் நிற்பவன்.
ஏன் மீது தவறே இருந்தாலும்
என்னை பிறரிடம் விட்டுக்கொடுக்காமல் நிற்பவன்.”
மேலும் படிக்க – நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !
சுவாரசியமான தமிழ் காதல் கவிதைகள் (Romantic Love Quotes)
1. “ஒவ்வொரு ஆண்மகனும் ஆலமர விழுது போல….
யாரோ ஒருத்தி ஊஞ்சல் ஆடிப் போயிருப்பா….!”
2. “நீ என்னை நேசிக்கிறாய் என்று சொல்வதை விட..
நீ என்னை பிரியமாட்டாய் என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன் தோழி…!”
3. “பிரிக்க முடியாத சொந்தம்…
மறக்க முடியாத பந்தம்…
தவிர்க்க முடியாத உயிர்…
எல்லாமே உன் அன்பு மட்டுமே…”
4. “உனக்குள் நானும் எனக்குள் நீயுமாய்
கரையும் இம் மணித்துளிகள்
நம் மரணம் வரை நம்மோடு வேண்டும்”
Also Read Motivational Quotes For Success In Tami
திரைப்படத்தில் இருந்து காதல் கவிதைகள் (Love Quotes From Movies)
1. “நீண்ட இடைவெளிக்கு பிற்கான நம் சந்திப்பு
மீது கொடுத்தது உனக்குள் தொலைந்த என்னை”
2. “காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும்
என்றும் பிரியாது”
3. “நீ தூரத்தில் இருந்தாலும் உன் நினைவு என்
இதயத்தில் இருக்கும்.நான் உன்னிடம் வர முடியாத போது என்
கவிதை வந்து உன்னை நான் நினைப்பதை சொல்லும்!”
மேலும் படிக்க – தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல் வசனங்கள்!
காதலை கூறும் காதல் கவிதைகள் (I Love You Quotes)
1. “பக்கத்தில் நீ இல்லாததால்
இமைகள் கூட என்னிடம் சண்டையிடுகிறது
இமைகளை மூடுவதற்கு!”
2. “நீ பேசும் வார்த்தையின் அர்த்தம் எல்லோருக்கும் புரியும்
உன் மௌனத்தின் அர்த்தம் உன்னை நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்”
3. “உன் பார்வையை தானே கடன் வாங்கினேன்
அதற்காக என் இதயத்தை எடுத்துகொண்டாய் வட்டியாக!”
4. “மொத்த பிடிவாதத்தையும் உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்திற்கு உண்டு…!!”
5. “உன் இதழோரம் வழிந்தோடும் புன்னகைக்கு
போக்கலும் கூட ஈடில்லை அழகே!!”
நண்பர்களுக்காக அழகான கவிதைகள் (Love Quotes For Friends)
1. “காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும்
இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும்
இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு.”
2. “தினம் ஒரு முறை தோல்வி பெற விரும்புகிறேன்…!
என் தோழன் ஏன் தொழில் தட்டி ஆறுதல்
சொல்வதை எதிர்பார்த்து…!”
3. “நாம் போகும் இடம் எல்லாம் நமக்கு நண்பர்கள்
கிடைக்கலாம் ஆனால் சில நண்பர்கள் மட்டுமே இதயத்தில்
இறுக்கமாக இடம் பிடித்து விடுவார்கள் உங்களை போல”
4. “விடாமல் பேசுவது காதல்
விட்டு கொடுக்காமல் பேசுவது நட்பு”
5. “பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை
பிரிவு என்பதோ கொடுமை பிரிந்தால் தான்
தெரியும் நட்பின் அருமை!!”
Also Read About செல்ஃபி மேற்கோள்கள்
சோகமான காதல் கவிதைகள் (Sad Love Quotes)
1. “மிகபெரிய வலி நான் உன்னிடம் பேச நினைக்கையில்
பேச முடியாமல் இருப்பதே.”
2. “அன்பில் சுகம் தந்து சோகங்களை தரும் உறவுகளை விட,
நம் சோகங்களை சுகமாக்கும் உறவுகளை நேசி அன்று
வாழ்க்கை உன் வசமாகும்…”
3. “வேறெதுவுமே வேண்டாமென்று நினைக்க
வைக்கும் வல்லமை உண்மை அன்பிற்கு மட்டுமே உண்டு”
4. “என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே
பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?
5. “ஒருவரின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னும் வேதனையை விட முழுமையாக மனதை
வெளிபடுத்தியும் ஒருவர் புரிந்து கொள்ளவில்லை
என்னும் வேதனை அதிகம்!”
6. “எபோதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல…
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான்
உண்மையான அன்பு…!!”
7. “விலகி போனாய் நெருங்கி வந்தேன்
வெறுத்து போனாய் விரட்டி வந்தேன்
இனி நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்
உன்னை மட்டுமல்ல உன் நிழலையும்”
சுவாரசியமான கலாட்டா காதல் கவிதைகள் (Funny Love Quotes)
1. “எப்படா இவ பேசுவா என்பதற்கும்
எப்படா இவ பேச்ச நிறுத்துவா என்பதற்கும்
இடைப்பட்ட காலம் தான் “காதல்”
2. “அறுவையான நாவலுக்கு போடப்படும்
அழகான முன்னுரையே திருமணம்…!
இரசிக்க வைக்கும் காதல் கவிதைகள்
3. “உண்மையான அன்பினைத் தேடுகிறேன்
ஒவ்வொரு மணித் துளியும் முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது…”
4. “ஒரு பெண்ணின் மனதை மட்டுமே நேசி…!
உயிர் உள்ளவரை… உண்மையாய் இருப்பாள் அன்பாய்…!!
நண்பர்களுக்கு இனிய காலை வாழ்த்துக்களையும் படியுங்கள்
கணவனுக்கு காதல் கவிதைகள் (Love Quotes For Husband)
1. “கணவனின் சிறந்த தோழியாக மனைவியும்
மனைவியின் சிறந்த தோழனாக கனவும்
இருக்கும் போது, அவர்கள் சிறந்த
தம்பதியாகிரார்கள்!!!”
2. “உன்னை போல் ஒரு அன்பான கணவன்
கிடைக்க மாட்டானா என தவம் கிடக்கும்
பல பேர் இந்த உலகில் இருக்க…..
எனக்கு மட்டும் நீ கிடைத்த வரத்தை
ஆண்டவன் மட்டுமே அரிவார்…..!”
3. “நீயா-நானா பட்டிமன்றம் அல்ல வாழ்க்கை!
நீயும், நானுமாய் இணங்கிச்செயல்படுதல் என்பதே
வாழ்க்கை!”
4. “திருமணத்திற்கு முன்பான
காதல் அவசியமோ, இல்லையோ,
திருமணத்திற்குப் பிறகான காதல் அதி அவசியம்!”
5. “என்னில் நீ மாறுபட்டிருப்பதாலேயே,
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கிறதே!”
6. “உன் உடன்பிறந்தவரை நேசிக்கையில் அழகாகத்
தெரிகிறாய் நீ! என் குடும்பத்தை உன்னதாக
நினைக்கையில் இன்னும் அழகாகிறாய் நீ!”
7. “எதிர்பார்ப்பற்ற அன்பினால்,
குறைகள் குணாதிசயங்கள் ஆகின்றன”
பிரபலமான கவிஞர்களின் தமிழ் காதல் கவிதைகள் (Love Quotes by Famous Tamil Authors)
காதல் கவிதைகள் ஒருவர் மனதில் இருக்கும் விடயத்தை, எதிர் பார்ப்பை மற்றும் அன்பை நாகரீகமாகவும், கலை நயத்தோடும் மற்றொருவருக்கு எடுத்துக் கூற உதவுகின்றது.ஒரு நல்ல காதல் கவிதை, எந்த ஒரு பெண்ணையும் அல்லது ஆணையும் மயங்க வைத்து விடும் என்று கவிஞர்களும் தெரிவித்துளார்கள்!
வள்ளுவனின் காதல் கவிதைகள் (Thiruvalluvar Quotes on Love)
Pexels
1. “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
பொருள்: இதை கண்ணதாசன் கவிதையோடு ஒப்பிட்டு கூறலாம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே”
2. ”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.”
பொருள்: பெண்ணின் முகத்தை நிலவோடு ஒப்பிட்டு இந்த வரிகள் கூறுகின்றது.
3. ”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”
பொருள்: கவிதை நயத்தோடு – அத்தோடு விட்டானா? நிலவே…! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?
4. ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.
பொருள்: கணவனும் மனைவியும் நட்போடு பழகும் அழகை வர்ணிக்கும் வரிகள் இவை.
45. ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
டந்தையொடு எம்மிடை நட்பு.”
பொருள்: காதலன் காதியிடம் கொண்ட அன்பு உடலுடன் இருக்கும் உயிரைப் போன்றது என்று இந்த வரிகள் விளக்குகின்றது.
6. ”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.”
பொருள்: பொருள் தேடும் பொருட்டு தலைவியை தலைவன் பிரிய நேரும் போது, தலைவி மனம் தாங்காமல் அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவள் மனதில் அப்போது வேதனை நிறைந்திருக்கும். இந்த உணர்வை ஒன்றாக சேர்ந்திருக்கும் காலத்தில் அவள் அறியவில்லையே என்று வருந்துகின்றாள்.
7. “மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.”
பொருள்: மாலை பொழுதில் தலைவி கனவு காண்கிறாள். அதில் தலைவனை கண்டு மகிழ்ச்சி அடைகிறாள். கண் விளித்து பார்க்கும் போது, அது வெறும் கனவு மட்டும் தான் என்று ஏமாற்றம் அடைகின்றாள்.
பாரதியின் காதல் கவிதைகள் (Bharathiyar Quotes on Love)
1. “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்”
2. “பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா…”
3. “தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!
பாரதிதாசன் காதல் கவிதைகள் (Bharathidhasan love Quotes)
Pexels
1. “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.”
2. “காதலினால் மானிடர்க்குக் கலவி யுண்டாம்……
ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்!”
3. “காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்.”
4. “மோனத் திருக்குதடீ – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?”
5. “…… என்றன்
வாயினிலே அமுதூறுதே – கண்ணம்மா என்ற
பேர்சொல்லும் போதிலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே!”
6. “தாமரை பூத்த குளத்தினிலே — முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! — அந்தக்
கோமளவல்லியைக் கண்டு விட்டான் — குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை!”
7. “காதல் அடைதல் உயிரியற்கை – அது
கட்டில் அகப்படும் தன்மையதோ – அடி
சாதல் அடைவதும் காதலிலே – ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.”
8. “கமலம் அடுக்கிய செவ்விதழால் — மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் — கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் — மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் — மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி — அப் பூஞ்சோலை — எனைத்
தன்வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.”
வைரமுத்துவின் காதல் கவிதைகள் (Vairamuthu Love Kavithai)
1. “உனக்குத் தெரியுமா?
உன் அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன். “
2. “என் பெயரே
எனக்கு மறந்து போன ஒரு
வனாந்தரத்தில் என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்? நீயா ?”
3. ” ஒற்றை இறகு – காதல்
உன் காதலைப் பெற
ஏதாவது செய்யலாமென்று நினைத்து
ஏதேதோ செய்து பார்கிறேன்.
இப்பொழுதுதான் தெரிகிறது…
உன்னைக் காதிப்பதைத் தவிர வேறொன்றும் சியத்
தெரியவில்லை எனக்கு!”
4. “என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன் பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை ஒளிச் சேர்க்கை
செய்யாமலே உதிர்ந்திருக்கும்.”
5. “எனக்கு மட்டும் தெரிந்த வலி
பொன்னந்தி மாலையிலும்
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்
கவிதை என்னும் பேய் பிடித்து
ஆட்டுதடி என்னை-என்
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காண்பதில்லை உன்னை”
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.