வாழ்க்கையில் ஒரு உத்வேகம் இல்லையா? உங்களை எப்போதும் ஊக்குவிக்க 32 சுவாரசியமான மேற்கோள்கள் !

வாழ்க்கையில் ஒரு உத்வேகம் இல்லையா? உங்களை எப்போதும் ஊக்குவிக்க 32 சுவாரசியமான மேற்கோள்கள் !

வாழ்க்கையில் பல தருணங்களில் குழப்பத்தில், தெளிவு இல்லாமல், நம் சிந்தனைகளில் திணறி தொலைந்து விடலாம். இதுபோன்ற சமயங்களில் ,உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ள , முன்னோக்கி செல்ல ,உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் சில மேற்கோள்கள் (inspirational quotes) இங்கு  உள்ளது.


1. " புதிதாக ஒரு விஷயத்தை செயும்போது நிச்சயம் தவறுகள் நடக்கும், அதை ஏற்றுக்கொண்டு, நமது மற்ற புதிய விஷயங்களை மெருகேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்" - ஸ்டீவ் ஜாப்ஸ் , ஆப்பிள் .


2. " பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்யவேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான் " - விவேகானந்தர்.


3. " குணம், பொறுப்பு, தன்னம்பிக்கை, மரியாதை தைரியம் இருந்தால் போதும். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும்" - ஷிவ் கேரா


4. " வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும்" - டிஸ்ரேலி


5. "தவறு செய்பவர்களை மன்னித்து விடு ஆனால் அவர்களைத் திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே" - புத்தர்.


3


6. " பகை, கோபம் ஆகியவற்றை யார்மீதும் திணிக்காதீர்கள். அது வட்டியும் முதலுமாக உங்களிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்" - விவேகானந்தர் 


7. " வன்முறை என்பது மோசமானது ஆனால் அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானதும்" - சுபாஷ் சந்திர போஸ்


8. " கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை" - புத்தர்


9. " உன் கடமையை செய்தால் யாருக்கும் தலை வணங்க தேவையில்லை. உன் கடமையை செய்யத் தவறினால் எல்லோருக்கும் தலை வணங்க வேண்டும்" - அப்துல் கலாம்


10. " ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு . காரணமின்றி விளைவில்லை .இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது" - புத்தர்


தமிழில் தந்தையர் தின பரிசு ஆலோசனைகளையும் படியுங்கள்


4


11. " ஒளிமயமான மலர்கள் இருளான வேர்களிலிருந்து தான் மலர்கின்றன " - ஓஷோ


12. " நல்ல தொடக்கம் பாதி வேலை முடிந்ததற்கு சமம்" - ஹோரஸ்


13. " நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும், நீ நீயாக இரு" - அப்துல் கலாம்


14. " உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது " - சார்லி சாப்ளின்


15. " தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள் அதேநேரம் தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்" - அப்துல் கலாம்


5


Also Read : ஆண்களுக்கான ஆபரணங்கள்


16. " அதிகாலையில் நீ நினைக்கும் நேரத்தில் எழுந்து விட்டாள் தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் "- அப்துல் கலாம் 


17. " நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன ஆனால் அனுபவமோ தவறான முடிவில் இருந்து தான் கிடைக்கிறது" - பில்கேட்ஸ் 


18. "ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே" - அப்துல் கலாம்


19. " பிறக்கும் போது உன்னோடு இல்லாத உன் பெயர் நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும். அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு" - ஹிட்லர்


20. "எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால் அதில் ஆறு மணி நேரம் கோடாரியை பெருமைப்படுத்துவேன்" - ஆபிரகாம் லிங்கன்


6


21. " அறிவு மிக்கவனாக ஒருபோதும் ஆகிவிடாதே எப்போதுமே கற்றுக் கொண்டே இருக்கின்ற செயல்பாட்டில் இரு .அறிவுஜீவித்தனம் மக்களை மனநோயாளிகளாக ஆக்கிவிடுகிறது. கற்றுக் கொள்கின்ற திறன் படைத்த ஒரு மனிதன் ஒருபோதும் மனநோயாளியாக ஆகமாட்டான் " - ஓஷோ


 


22. " அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம் குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும் " - ப்ரூஸ்லி


23. "தேடு கண்டுபிடி, பல தவறுகள் நிகழும், ஆனாலும் வேறு வழி இல்லை. பயிற்சியும் தவறுகளும்தான் வழி . மெல்ல மெல்ல தவறுகள் குறையும், மேலும் மேலும் தெளிவு பிறக்கும். இடையில் நிறுத்தி விடாதே! " - ஓஷோ


மேலும் படிக்க - கேர்ள் பாஸ் (Girl Boss) : உங்களுக்கு யாரும் தெரிவிக்காத ஐந்து 'கேர்ள் பாஸ்' விஷயங்கள்


24. " தோல்வி இல்லாத வாழ்வால் பயனும் உண்டாகாது. வாழ்வின் சுவையை போராட்டத்தில் தான் இருக்கிறது " - விவேகானந்தர்


25. "எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்" - ஆப்ரஹாம் லிங்கன்


7


26.  " பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய். செடிகளாக இரு அப்போதுதான் பூத்துக் கொண்டே இருப்பாய் " - விவேகானந்தர் 


27. "முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன் வரும் தயக்கம். 'முடித்தே தீருவேன்' என்பது வெற்றிக்கான தொடக்கம் " - கலைஞர் கருணாநிதி


28. " பயத்தின் முடிவே வாழ்க்கையின் ஆரம்பம் " - ஓஷோ


29. "எனது வெற்றிகள் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள் .எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் வந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள் " -நெல்சன் மண்டேலா


30. "ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது" - ஆபிரகாம் லிங்கன்


Untitled design %2813%29


31. " வேலையை வெறுத்து செய்பவன் அடிமை , வேலையை விரும்பி செய்பவன் அரசன் " - ஓஷோ 


32. " மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்!" - கவுதம புத்தர் 


மேலும் படிக்க - அலுவலக வேலையை சாமார்த்தியமாக கையாள : வெற்றிகரமான பெண்மணிகள் அலுவலகத்தில் முதல் மணிநேரத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் ?


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


You Might Like This


சுதந்திர தின வாழ்த்துக்கள்