இப்போதெல்லாம் எல்லா உறவுகளும் ஒரு எக்ஸ்பயரி தேதி உடன்தான் நமது கைக்கு கிடைக்கின்றன. சமூக வலைதளமெங்கும் மலிந்து கிடைக்கும் இன்ஸ்டண்ட் அன்புகளால் எப்படி முயற்சித்தாலும் விட்டு விலகுவதற்கான நாளைக் குறித்துக் கொண்டே உறவுகள் உருவாகின்றன என்று கூட சொல்லலாம்.
ஆனால் நீண்ட காலம் ஒரே உறவுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நல்லவேளையாக இன்னும் இருக்கிறார்கள். அதற்கு காரணமாக அவர்களிடம் உள்ள சில நல்ல குணங்கள் என்று கூறப்படுகிறது. அப்படியான குணங்களை நம்மளும் வளர்த்துக் கொள்ள முடிந்தாலும் எத்தனை உறவுகள் (relationship) வந்தாலும் உங்கள் உறவு உங்களை விட்டு விலகாமல் இருக்கும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
ஒரு நல்ல மற்றும் புத்திசாலி மனைவியாக மாறுவது எப்படி?
Youtube
நிதானம்
நாம் அனைவருக்குமே சில தனித்தன்மைகள் உண்டு. அனைவரும் சில நோக்கங்களை கொண்டுதான் படைக்கப்பட்டிருக்கிறோம். அனைவருக்குமே தனியான பாதைகள் உண்டு. காதலின் பாதையில் இரண்டு தனித்தனி ஜீவன்கள் ஒன்றிணைந்து செல்ல முதலில் தேவையானது நிதானம்தான். உங்கள் காதல் துணையின் குணங்களை முழுமையாக அறிந்து கொள்ளும்வரைக்கும் நிதானமாக இருக்க வேண்டும்.
“லவ் ஹார்மோன்” கேள்விப்பட்டிருப்பீங்க ! அதன் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா!
Youtube
சரியான உரையாடல்
ஒரு நல்ல உறவிற்கு கவனித்தல் மிக முக்கியமான பண்பு. விவாதம் செய்யாமல் பேசுவதும் குறுக்கிடாமல் கேட்பதும் நல்ல உறவிற்கான அடிப்படை. உங்கள் காதல் உறவில் பிரச்னைகள் வந்தால் மனம் விட்டு பேச உதடுகளும் அதனை கேட்க காதுகளும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். நேசிப்பவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளாமல் அவரை புண்படுத்தி பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டு அழுவதில் என்ன பயன் இருக்க முடியும்? முதலில் பேச விடுங்கள். பின்னர் மென்மையாக விவாதியுங்கள். அதன் பின்னர் முடிவெடுங்கள்.
தாம்பத்ய பலம் தேவைப்படும் ஆண்களுக்கானது ! ரகசியங்கள் ரகசியமாக இருக்கட்டும்!
Youtube
மன்னிப்பு
எந்த விதமான உறவாக இருந்தாலும் மன்னித்தல் என்பது மிக முக்கியமான குணமாக பார்க்கப்படுகிறது. இங்கே மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் கச்சிதமானவர்கள் என்று சொல்ல முடியாது. அடுத்தவர் மனத்தைக் காயப்படுத்தாமல் இருப்பது மன்னித்தலின் முதல்படி. கசப்புகளை சுமக்காமல் தூக்கி எறிவது அதன் இரண்டாவது படி. இப்படி செய்யும் உறவுகள் நீண்ட காலங்கள் நிலைத்து வாழ்கின்றன.
Youtube
ஏற்றுக்கொள்தல்
எல்லா மனிதர்களும் கச்சிதமானவர்கள் அல்ல என்கிற உண்மையை ஏற்றுக் கொள்தல் வேண்டும். உங்கள் காதல் துணையை நிறைகுறைகளோடு அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்பு உங்களுக்கு அமைந்து விட்டால் காதல் வாழ்க்கை சொர்க்கம்தான். உங்கள் துணையின் எண்ணங்களுடன் உங்களால் ஒத்துபோகவே முடியாது என்றாலும் ஏற்றுக் கொள்வது உறவு நிரந்தரமாக இருக்க உதவி செய்யும்.
Youtube
மதித்தல்
ஒரு உறவு மிக சரியான பாதையில் செல்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்றால் பரஸ்பரம் மதித்து கொண்டிருக்கும் உறவுகள் எனும் அடையாளத்தை சொல்லலாம். மதித்தல் என்பது இருபக்கமும் நடக்க வேண்டும். உங்கள் காதல் துணை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எப்படி நடத்துகிறீர்கள் அவரைப் பற்றி மற்றவரிடம் பேசும்போது என்ன சொல்கிறீர்கள் என்பது கணக்குக்குள் வரும். உங்களிடம் பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்கும் உறவுகளை இழந்து விடாதீர்கள். மதிப்பளியுங்கள்.
Youtube
அன்பு என்பது அவ்வளவு சுலபமாக யாருக்கும் சொந்தமாவது கிடையாது. சுலபமாகவோ விரைவாகவோ கிடைக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது நம்மை விட்டு வெகு சீக்கிரம் மறைந்து விடும். உறவுகளை தக்க வைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதனை சிலர் நடிப்பதன் மூலம் நிலை நிறுத்துவது உண்டு, ஆனால் அது தற்காலிகமானது.
இந்த ஐந்து குணங்களை பின்பற்றி வந்தோம் என்றால் இந்த நவீன இன்ஸ்டன்ட் நேச யுகத்திலும் நம்மால் நமது ப்ரியத்துக்குரிய உறவுகளை பிரியாமல் காத்துக் கொள்ள முடியும்.
உங்கள் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்த சில சுவாரசியமான கேள்விகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!