உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!

உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!

காதல் எனும் வார்த்தை நிறைய அதிர்வுகளை தன்னுள்ளே கொண்டது. இதனை உச்சரிக்கும் யாரையும் தனக்குள் ஈர்த்து கொள்ளும் வலிமை கொண்டது. மனம் வெறுத்தவர்களையும் மகிழ வைக்க கூடிய ஒற்றை சொல் அது காதல் மட்டுமே.


நம்மில் நிறைய பேர் நினைக்கிறோம்.. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டவர்கள்.. அன்யோன்ய காதலர்கள் ஆதர்ஷ தம்பதிகள் என்று. ஒரு சிலருக்கு இது வெறும் நினைப்பாகவே முடிந்து போய் விடுகிறது


காரணம் இரண்டு மனங்கள் நேசித்தால் மட்டுமே அது காதல். அது இருவரின் செயல்களில் நன்றாக வெளிப்படலாம். இதற்கு பதிலாக காதல் படகில் நீங்கள் ஒற்றை ஆள் மட்டுமே பெடலிங் செய்து கொண்டிருந்தால் கரை சென்று சேர்ந்தாலும் கால் வலி மட்டுமே மிஞ்சும். இது ஒரு உவமை மட்டுமே.நீங்கள் வெளியே பார்ப்பதற்கு ஆதர்ஷ காதலர்களாக தெரிவீர்கள். உங்கள் நண்பர்கள் மத்தியில் உங்களை கண்டு பொறாமை கூட படலாம் ஆனால் உண்மையில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் மட்டும்தான் உணர முடியும்.


உங்கள் துணை உங்களை நேசிக்கவில்லை உங்களுடன் இருக்க விரும்பவில்லை என்பதை நீங்கள் சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் மனதை சரி செய்து கொள்ள முடியும். stages of love


நேரங்கள் குறையும்


உங்களோடு அவர் இருக்கும் நேரங்கள் குறைய ஆரம்பிக்கும். வெளியே சென்றாலும் அவரது தொடர்புகளோடு தொலைபேசுவதில் கவனம் செலுத்தலாம். உங்களை அவர் வந்து சந்திக்கும் நாட்கள் மெல்ல மெல்ல குறைய தொடங்கும். உங்களிடம் அதற்கான காரணங்களை கூற விரும்பாமல் இருப்பார். ஏன் என்றால் காரணமே இல்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உங்களை வெளியில் அழைத்து செல்லாமல் இருக்க தன்னால் முயன்ற எல்லாவற்றையும் முயற்சிப்பார்.உரையாடல்கள் தொடங்குமிடம்


உறவு என்பது உரையாடல்களால் வலு பெறுவது. உங்களிடம் பேசி தீர்க்க பல கோடி விஷயங்கள் இருக்கலாம். ஆனாலும் அதனை காது கொடுத்து கேட்க அவர் மனம் விரும்பாது. ஆரம்பங்களில் sms மழை பொழிந்த அவரது வானம் இப்போதெல்லாம் வறண்ட மேகங்களை மிதக்க விட்டிருக்கும். விடிய விடிய உங்களிருவருக்கும் இடையே நடந்த சங்கீத ஸ்வரங்கள் இப்போதெல்லாம் இரண்டே நிமிடத்தில் முடிந்து போகலாம். ஒரு போன் காலோ மெஸேஜோ எதுவாக இருந்தாலும் உரையாடல் என்பது உங்களிடம் இருந்துதான் தொடங்கும். நீங்கள்தான் அவரோடு தொடர்பு கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டி வரும்.காதல் திருமணத்தில் முடியாது என்பதற்கு  இது முக்கிய அறிகுறி.புறக்கணித்தல்


உங்கள் மீது நாட்டம் குறையும் சமயம் அவர்கள் உங்களோடு வெளியே செல்வதையோ உங்களோடு நேரம் செலவிடுவதையோ தவிர்க்க நினைப்பார்கள். அதற்கு பதிலாக உங்களிடம் சாக்கு சொல்லி கொண்டு அவர்கள் நண்பர்களோடு வெளியே செல்ல முடிவெடுப்பார்கள். சுற்றுலா செல்வார்கள். உங்களிடம் இருந்து அவர்கள் தங்களை மறைத்து கொள்ள பயன்படுத்தும் திரை தான் நண்பர்கள் உடன் இருக்கிறேன் என்பது. உங்களால் இதனை உணர முடிந்து நீங்கள் கேள்விகள் கேட்டால் அவர்கள் வாக்குவாதத்திற்கு தயார் ஆவார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் முதலில் வெளியே வருவது உங்கள் உறவிற்கு மனதிற்கும் நன்மை தரும்.முக்கியத்துவமின்மை


ஒரு உறவில் இருவரும் இணைந்த பின்னர் எந்த ஒரு முக்கிய முடிவையும் உங்களை கலந்து கொண்டுதான் அவர் எடுக்க வேண்டும். ஆனால் அவரோ உங்கள் மீது விருப்பமில்லை எனும்போது உங்களை எந்த முடிவுகளில் கலந்து கொள்ள விட மாட்டார். எதிர்கால திட்டங்களில் ரகசியம் காப்பார். ஆரம்பத்தில் அவரது எதிர்காலமாக இருந்த நீங்கள் இப்போது அவரது இறந்த காலமாகி கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான் இது குறிக்கிறது.மன்னிப்பு அவர்களுக்கு பிடித்த உணவு


உங்கள் மீது விருப்பம் இல்லாத போது அவர்கள் உங்களை அடிக்கடி மன்னிப்பு கேட்க வைப்பார்கள். உங்களை நிறைகுறைகளோடு ஏற்று கொள்ள மறுப்பவர்கள் உங்கள் குறைகளை பெரிது படுத்துவார்கள். சில சமயம் அவர்கள் தவறுகளுக்கும் உங்களை காரணம் காட்டுவார்கள். உறவு விரிசலடைவதை விரும்பாத நீங்கள் அவர்களிடம் அடிக்கடி மன்னிப்பு கேட்டு கொண்டே இருப்பீர்கள். உங்களை குற்றவாளியாக்கி அவர்கள் நிம்மதி காணுவார்கள். அப்படிப்பட்ட உறவு உங்களுக்கு எப்படி இருந்தாலும் அவசியமே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.அக்கறை இருக்காது


உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்கள் பற்றிய எந்த அக்கறையும் அவர்களிடம் தென்படாது. உங்களுக்கு விருப்பமான ஒன்றை செய்ய மாட்டார்கள். அதே சமயம் அவருக்கு விருப்பமானவைகளை நீங்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருப்பீர்கள். உங்கள் மீது அக்கறை இருந்தால் உங்கள் விருப்பு வெறுப்புகளில் அவர்களுக்கு கவனம் இருந்திருக்கும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு விலகுவது சிறந்தது.மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டவர்கள் அவர்கள் காதல் பற்றி மேலும் யோசிக்கலாம். இந்த வகை காதல் நிச்சயம் திருமணத்தில் முடியாது. சத்தமே இல்லாமல் நீங்களே உங்கள் காதலின் நடவடிக்கைகளை கவனித்து வரலாம். உங்களுக்கு சந்தோஷம் தராத எந்த விஷயமாக இருந்தாலும் அதனிடம் இருந்து நீங்கள் விலகி இருப்பது உங்களுக்கு நன்மை தரும். உங்களுக்கானவர் இவராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கானவர் உங்களை வந்து சேர வேண்டும் என்றால் நீங்கள் இந்த உறவில் இருந்து வெளியே வருவது முக்கியம்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.