திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !

திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !

காதல்.. கோட்டையில் இருப்பவருக்கும் ஏற்படும் குடிசையில் வாழ்பவருக்கும் ஏற்படும். பாகுபாடில்லாத காதல் காற்றை போல  இந்த உலகெங்கும் பரவி கிடக்கிறது. இந்த காதல் தென்னிந்திய பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. காதல் மூலம் வாழ்வில் ஒன்று சேர்ந்த ஜோடிகளின் காதல் கதைகளை இப்போது பார்க்க்கலாம். love.


விஜய் - சங்கீதா


தனது ரசிகையை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் விஜய். இவர்களின் காதல் முதலில் இவர்களுக்கே தெரியாமல் இருந்தது. இதனை அறிந்து அதனை அனுமதித்தது நடிகர் விஜயின் பெற்றோர்கள்தான். ஸ்ரீலங்கா தமிழ் பெண்ணான சங்கீதா லண்டனில் வசித்து வந்தார். அங்கிருந்து விஜயை பார்க்க பறந்து வருவார். அப்படி ஒருமுறை வரும்போது தனது விருப்பம் பற்றி விஜயிடம் கூறியிருக்கிறார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் விஜய் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதன் மூலம் இருவருக்குள்ளும் காதல் இருந்ததையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


விஜய் எவ்வளவு அமைதியானவரோ அதே அளவிற்கு ஆடம்பரங்களை விரும்பாதவர் சங்கீதா சொர்ணலிங்கம். ரோமன் கேத்தலிக் ஆன விஜய் சங்கீதா எனும் இந்து பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத விஜயை போலவே அவருடைய குணமும் எளிமையானது. இந்த ஒற்றுமைதான் இவர்கள் திருமணத்தை இன்று வரை வெற்றிகரமாக கொண்டு செல்கிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் சஞ்சய் (16) மற்றும் திவ்யா ஷாஷா (11)


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வைஅஜித் - ஷாலினி


விஜய் சங்கீதா திருமணம் நடந்த ஒரு வருடத்திற்கு பிறகு நடந்த காதல் திருமணம்தான் அஜித் ஷாலினி திருமணம். அமர்க்களம் திரைப்படத்தின் போதுதான் இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து கொண்டனர். இதனை பற்றி படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது சீக்கிரம் ஷாலினியை இங்கிருந்து கூப்டு போங்க இல்லைன்னா ஏதாவது நடந்துடும் என்றும் அஜித் விளையாட்டாக அவரிடம் கூறினாராம். அப்போது ஷாலினியும் உடன் இருந்திருக்கிறார்,


இப்படியாக ஷூட்டிங்கில் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். அதன் பின்னர் இப்படத்தின் முடிவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. ஷாலினியின் குடும்பத்தார் ஆரம்பத்தில் இதற்கு சம்மதிக்கவில்லை. விஜய் சங்கீதா வை போல அஜித் இந்து ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர் ஷாலினி கத்தோலிக்க கிறிஸ்துவர். குடும்பத்தார் சம்மதத்துடன் அவசரமாகவே இவர்கள் திருமணம் நடத்தப்பட்டது. ஷாலினி முறையில் ஒரு தடவையும் அஜித் முறைப்படி இன்னொரு தடவையும் திருமணம் நடந்தது. இப்போது இவர்களுக்கு அனோஷ்கா (11) மற்றும் ஆத்விக் (4) என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.


நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !ஜோதிகா-சூர்யா


பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவருக்கும் அறிமுகம் நடந்தது. அப்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்த சூர்யாவிற்கு ஜோதிகா நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இவர்கள் நட்பு காதலாக இதுவே முக்கிய காரணம். அதன் பின்னர் வேறொரு சூர்யாவாக திரையுலகை தனது கைகளுக்குள் வைத்து கொண்டார் சூர்யா. முந்தைய சூர்யாவை விட இவரது கம்பீரம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.


சூர்யாவின் திருமணத்திற்கு முதலில் அவரது அப்பா சம்மதம் தெரிவிக்கவில்லை. சூர்யாவின் குணம் அப்பா அம்மா சம்மதத்துடன் காதலையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்பதால் பொறுமையாக காத்திருந்தார். ஜோதிகா சமயங்களில் பொறுமை இழந்ததாக தகவல்கள் வெளியானாலும் அவரும் சூர்யாவிற்கு பக்கபலமாக நிற்க இருவர் திருமணமும் நல்லவிதமாக பெரியவர் ஆசியுடன் நடந்தது. இப்போது தியா மற்றும் தேவ் எனும் இரு குழந்தைகள் இருக்கின்றனர்.


த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..பஹத் - நஸ்ரியா


தமிழ் திரையுலகை தன்னுடைய சுட்டி தனத்தால் கட்டி போட்டவர் நஸ்ரியா. திடீரென ஒரு நாள் மலையாள நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர்கள் காதல் கதையும் திரையுலக செட்டுக்குள் ஆரம்பித்ததுதான். பெங்களூர் டேஸ் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர்.


பஹத்தை நடிகராகவும் தனிப்பட்ட மனிதராகவும் நேசிக்க ஆரம்பித்த நஸ்ரியா உடனடியாகவே தன்னுடைய காதலை பஹத்திடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறார். இதனை பற்றி பின்னொரு நாளில் பஹத் ஒரு நாளிதழில் பேட்டி கொடுக்கும்போது இருவருக்குமே விருப்பம் இருந்தாலும் நஸ்ரியா கொஞ்சம் துணிச்சலாக நேரடியாக தன்னிடம் வந்து கேட்டார். அவர் கேட்ட விதம் மறுக்க முடியாததாக இருந்தது என்கிறார்.


பெங்களூர் டேஸ் படப்பிடிப்பில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த காட்சிக்கு அடுத்த ப்ரேக்கில் இருவரும் ஒரு அறையில் தனித்திருந்த போது தனது காதலை கூறியிருக்கிறார் நஸ்ரியா. கொஞ்சம் கூட தயங்காமல் நஸ்ரியா நேரிடையாகவே கேட்டிருக்கிறார் என்கிறார் பஹத்.


அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !நாகசைதன்யா - சமந்தா


தமிழ் நடிகையான சமந்தாவிற்கு தெலுங்கு நடிகர் மேல் காதல் எப்படி என்கிற கேள்விகள் எல்லோருக்கும் வரலாம். சமந்தா தெலுங்கு திரைப்படத்திலும் பிஸியாகவே இருக்கிறார். ஏ மாயா சேஸவே படத்தின் மூலம் இருவரும் நண்பர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் 2015க்கு பிறகுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் ட்விட்டர் மூலம் இருவரும் பிளிர்ட் செய்துள்ள நிலையில் ஒரு நீண்ட விடுமுறைக்காக நாகசைதன்யா சமந்தாவுடன் சென்றிருக்கிறார்.


ஒரு அழகான கடற்கரை இயற்க்கை காட்சிகள் நடுவே நாகசைதன்யா முதலில் ப்ரொபோஸ் செய்ய அதற்கு சம்மதித்திருக்கிறார் சமந்தா. இப்போது இவ்விருவரின் கெமிஸ்ட்ரி மஜ்ஜிலியில் தெரிகிறது.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo