இனிய காலை வணக்கத்தோடு உங்கள் நாளை மகிழ்ச்சியோடு தொடங்குங்கள்!

இனிய காலை வணக்கத்தோடு உங்கள் நாளை மகிழ்ச்சியோடு தொடங்குங்கள்!

ஒவ்வொரு விடியலும் ஒரு புது தொடக்கத்தை உணர்த்துகின்றது. அன்றைய தினம் எப்படி இருக்குமோ, தெரியாது. நாம் திட்டமிடுவது ஒன்றாக இருந்தாலும், அன்று நடந்து முடிந்திருப்பது வேறொன்றாக இருக்கும். வெறும் “காலை வணக்கம்(morning)”, என்று இரு வார்த்தைகளில் முடித்து விடாமல், இன்றைய டிஜிட்டல் கலாசாரம், சற்று மாறு பட்டு சில போன்மொளிகளுடன் காலை வணக்கத்தை(morning) தெரிவிக்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் ஒரு படி மேலாகச் சென்று, அழகிய படங்களுடன் சேர்ந்த வாசகங்களையும் ஒருவருக்கொருவர் காலை வணக்கத்தோடு பகிர்ந்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினகளுக்கு அத்தகைய ஒரு சிறந்த காலை வணக்கத்தை(morning) பகிர விரும்பினால், இந்த தொகுப்பு உங்களுக்கானது!

Table of Contents

  அனைவருக்கும் காலை வணக்கம் பொன்மொழிகள்(Good Morning Quotes For Everyone)

  1. புதனை அனுப்பிவிட்டு
  வெள்ளியை வரவேற்க
  வியாழன் நடக்கிறது...
  நேற்றைய இனிமைகளை மனதில் வைத்து நாளைய இன்பங்களுக்கு வைவகுத்து
  இன்றைய பொழுதுகள் மகிழ்ச்சியாக செல்லட்டும்!
  இனிய காலை வாக்கம்(morning)!

  2. இரவென்னும் சோகம் மறைய
  கனவென்னும் உலகம் விடிய
  ஒளியென்னும் நன்மை பிறக்க
  காரிருள் எனும் பகை அகல
  சூரியன் எனும் புது உயிர் தொடங்க
  அனைவருக்கும்
  இனிய காலை வணக்கம்!

  3. கனவுகள் பூக்கும் நேரம் கவலைகள் மறக்கும் நேரம்
  இதயத்தை பூட்டி வைக்காமல் இமைகளை மட்டும் பூட்டி
  வைப்போம், விடியும் வரை!
  இனிய காலை வணக்கம்!

  4. கதிரவனின் கடைக்கண் பார்வையில்
  மலர்ந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்...
  புன்னகையுடன் தொடங்கு, பூக்களாக நிறையட்டும்
  இனிய காலை வணக்கம்(morning)!

  5. விடியும் என்ற எண்ணத்தில்
  உறங்க செல்லும் நீ...
  முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
  அனைத்தையும் சாதிக்கலாம்!
  இனிய காலை வணக்கம்!

  6. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.
  ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
  விளித்துடு, உனக்கான கதவு திறந்து விட்டது!
  இனிய காலை வணக்கம்!

  7. பனியில் நனைந்த ரோஜாபோல்
  அழகாக பூத்திருக்கு புதிய நாள்...!
  சுறுசுறுப்பாக மனதை வைப்போம்
  உற்சாகமாக உடலை வைப்போம்
  இன்றைய பொழுதை இனிய பொழுதாக
  மலர வைப்போம், நம் சிந்தனை சிறகுகளால்!
  இனிய காலை வணக்கம்!

  8. சந்திரன் மறைய, சூரியன் வானில் தோன்ற,
  மலர்கள் மலர, அழகியதொரு காட்சி தோன்ற...
  அனைவருக்கும் இனியதொரு காலை வணக்கம்!

  9. இந்த நாள் இனிதே அமையட்டும்!
  இதமான காலை வேளையில்
  இனிமையான காலை வணக்கம்!

  10. உள்ளம் இனிதானால்
  உலகமே இனிதாகும்
  எண்ணம் அழகானால்
  எல்லாமே அழகாகும்...
  இனிய காலை வணக்கம்

  நல்ல இரவு செய்திகளையும் படிக்கவும்

  pixabay

  நண்பனுக்கு காலை வணக்கம் – பொன்மொழிகள்(Good Morning Messages For Boyfriend)

  1. உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு
  உனக்காக உதவி செய்யும் எவரையும் எளிதில் நம்பி விடாதே!
  என் மனம் கவர்ந்த நண்பனுக்கு இனிய காலை வணக்கம்!

  2. இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால் அதை முதலில்
  உன்னிடமிருந்து தொடங்கு!
  இனிய காலை வணக்கம் நண்பா!

  3. வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை
  சிந்தனை தான் மனிதனை உருவாக்குகிறது.
  இனிய காலை வணக்கம்!

  4. பிறப்புக்கும் இறபுக்குமான தூரத்தை
  சோதனையாக எண்ணுபவன் வலிகளையே உணருகிறான்,
  சாதனையாக்க முயல்பவன் வழிகளை உண்டாக்குகிறான்.
  காலை வணக்கம்!

  5. இதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு...
  நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது!
  இனிய காலை வணக்கம்!

  6. என் நட்பு மூச்சை விட பெரியது, அது
  எப்போதும் எண்ணை நினைக்க வைக்கும்
  இந்த பூமியல் நட்பே பெரிது. நட்பு இருந்தால்
  எதையும் சாதிக்கலாம். நான் என் நட்பை உண்மையாக
  நேசிக்கிறேன். ஏன் உயிர் மூச்சு வரை. என்றும் எப்பொழுதும்.
  இனிய காலை வணக்கம்!

  7. போராடி வாழ வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
  அது பூ வனம். ரசித்து வாழ்வோம்!
  இனிய காலை வணக்கம்...!

  8. நட்புக்கு வயது அவசியமில்லை...
  பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு...!
  இனிய காலை வணக்கம்!

  9. இன்னுமொரு காலைப் பொழுது நமதானது,
  இன்னுயிர் மகிழ்ந்திட, எழுந்து வந்திட்டான்
  இளங்கதிரவன் அழகாக!
  அவனருளால், அவனியில் அனைத்தும் பெற்று
  பெருவாழ்வு வாழ்க!
  இனிய காலை வணக்கம்!

  10. சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட
  சோகங்களை பகிர்ந்து கொள்ளும் நட்பின் அன்பு
  என்றும் உண்மையானது...
  காலை வணக்கம்!

  ஊக்கவிக்கும் காலை வணக்கம் பொன்மொழிகள்(Motivational Good Morning Messages)

  1. விதைகள் தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை...!
  மாறாக கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ, மரமாகவோ, மாற்றிக் கொள்கின்றன!
  அதே போல் தான் நம் வாழ்க்கையிலும்.
  விழுந்த விட்டோமே என்று எண்ணாமல்,
  விழுந்த இடத்தில் இருந்து முன்னேறி செல்லுங்கள்..!
  இனிய காலை வணக்கம்!

  2. தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு எந்த கடவுளையும்
  நம்பி பயன் இல்லை!!
  தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எவனை கண்டும் பயம் இல்லை!!
  உன்னை நம்பு,
  நீ தான் உனக்கு கடவுள்!!
  இனிய காலை வணக்கம்!

  3. உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே...
  அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது...!
  இனிய காலை வணக்கம்!

  4. குணம், பொறுப்பு, திடநம்பிக்கை, மரியாதை, தைரியம்
  இருந்தால் போதும்,
  படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும் – சிவ் கேரா
  இனிய காலை வணக்கம்!

  5. உங்கள் பிரச்சனைக்கு காரணம் யாராகவும் இருக்கலாம்...
  ஆனால் அந்த பிரச்சனைக்கு தீர்வா... நீங்க தான் இருக்க முடியும்...
  நீங்கள் மட்டும் தான்...
  இனிய காலை வணக்கம்!

  6. உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை...
  அதைப் பற்றிய பயம் தான் மனதை கலக்கி
  அறிவையும் குழப்பி நம்மை நிலைக் குலையச் செய்து விடுகிறது...!
  இனிய காலை வணக்கம்!

  7. அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது.
  உதவு என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் இருந்து
  உனக்கு கிடைத்துக் கொண்டே இருக்காது.
  கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன் மேல் நீ கொண்ட
  தன்னம்பிக்கை மட்டுமே!
  அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே..!
  இனிய காலை வணக்கம்!

  8. தோற்றவனை கேவலப்படுத்தாதீர்கள்.
  அவன் இல்லை என்றால், நீங்கள் வெற்றி பெற்று இருக்க முடியாது....
  இனிய காலை வணக்கம்!

  9. பேசும் போது பயப்படாதீர்கள்!
  பயப்படும் போது பேசாதீர்கள்!
  இனிய காலை வணக்கம்!

  10. கிடைக்காததை துரத்துவதும்
  கிடைத்ததை மதிக்காததும் தான் வாழ்க்கை...!
  இனிய காலை வணக்கம்!

  pixabay

  நண்பர்களுக்கு காலை வணக்கம் பொன்மொழிகள்(Good Morning Wishes For Friends)

  1. என் நட்பு என் மூச்சை விட பெரியது
  அது எப்போதும் என்னை நினைக்க வைக்கும்
  இந்த பூமியில் நட்பே பெரிது
  நட்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்
  நான் என் நட்பை உண்மையாக நேசிக்கிறேன்
  என் உயிர் மூச்சு வரை என்றும் எபோழுதும்..!
  நட்புடன் இனிய காலை வணக்கம்...!

  2. இருளான வாழ்க்கை என்று கவலை கொல்லாதே
  கனவுகள் முளைப்பது இருளில் தான்.
  இனிய காலை வணக்கம் நண்பா...!

  3. ஆசை என்பது சில நாட்களில் மறந்து போகும்.
  ஆனால் பாசம் மட்டும் வாழ்நாள் முழுவதும்
  நிலைத்து இருக்கும்
  என் நட்பை போல...!
  நட்புடன் இனிய காலை வணக்கம்...!

  4. நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது
  வாழ்ந்து முடிந்த பின்பு நம்மை யாரும் மறக்கக் கூடாது
  அதுதான் வாழ்வின் வெற்றி..!
  இனிய காலை வணக்கம்...!

  5. பூவின் மொட்டுகள் போல மெளனமாக இருக்காமல்,
  மலர்ந்த பூக்கள் போல எப்போதும் சிரித்துக் கொண்டே இரு!
  நட்புடன் இனிய காலை வணக்கம்...!

  6. எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம்
  இருந்தால் மட்டுமே
  நாம் விலகி நின்றாலும் அது நம்மை விரும்பி வரும்...
  நட்புடன் இனிய காலை வணக்கம்...!

  7. விட்டு கொடுங்கள், விருப்பம் நிறைவேறும்!
  தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்!
  மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்!
  இனிய காலை வணக்கம்...!

  8. வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைப்பதில்லை.
  தொளிவ்யில் உயிர் ஒன்றும் போவதில்லை.
  போராடு!
  காலை வணக்கம், நண்பா...!

  9. கடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும்.
  அதை நல்ல நேரமாகவும், கெட்ட நேரமாகவும் மாற்ற
  மனிதனுக்கு மட்டுமே தெரியும்!
  இனிய காலை வணக்கம்...!

  10. கடந்த காலத்தை நினைக்காதே
  கண்ணீர் தான் வரும்..!
  எதிர் காலத்தை எதிர்பார்க்காதே
  பயம் தான் வரும்..!
  இந்த நிமிடம், இந்த நொடி தான் உண்மை...
  அதை அனுபவி, நல்லதையே நினை...
  நல்லதே நடக்கும்...!

  நட்புடன் இனிய காலை வணக்கம்...!(Good Thoughts Messages)

  1. வெற்றியை ஒரு போதும் தலைமேல் வைத்து பெருமிதம் கொல்லாதே
  தொளிவியை ஒரு போதும் புறம் தள்ளி ஒதுக்கி விடாதே!!

  2. சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும்
  பல நிஜங்களை கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை!

  3. பாய்வதும் பதுங்குவதும் வேங்கையின் குணம்
  அதை விமர்சிக்கும் தகுதி வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கிடையாது!!

  4. நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை
  எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வைப்போம்!!

  5. உன்னை கட்டுப்படுத்தும் வல்லமையை நீ கொண்டிருந்தால்
  உலகில் நீயும் ஒரு மாவீரனே!!

  6. செய்ய முடியும் என்று நம்பு.
  ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும் போது,
  உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.
  ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்த காரியத்தை
  முடிக்கும் வழியையும் காட்டுகிறது!

  7. எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்...
  எல்லாம் உள்ள போது நீ நடந்து கொள்ளும் முறையும்...
  உன் வெற்றியை தீர்மானிக்கிறது...!
  பிறப்பு இறப்பு, இவ்விரண்டு மட்டுமே நம்மை தேடி வரும்
  மற்றவற்றை நாம் தான் தேடி செல்ல வேண்டும்!

  8. நீ எதை நீனைகிராயோ அதுவாக ஆகிறாய்
  உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவம் ஆவாய்!

  9. ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை
  அன்பானவர்கள் நம்முடன் இருந்தால் போதும்....

  10. பூக்களாக இருக்காதே, உதிர்ந்து விடுவாய்
  செடியாக இரு அப்போது தான்
  பூத்துக் கொண்டே இருப்பாய்!

  pixabay

  பொதுவான காலை வணக்கம் பொன்மொழிகள்(General Good Morning Quotes)

  1. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!
  உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்!
  காலை வணக்கம்!

  2. இறைவன் அருளால் இன்றைய பொழுது இனிமையாக அமையட்டும்
  இனிய காலை வணக்கம்!!

  3. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
  ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்...
  இனிய காலை வணக்கம்!!

  4. நேற்றைய இழப்புகளை மறந்து
  நாளைய வெற்றியினை நோக்கி
  இன்றைய பொழுதினைத் தொடங்குவோம்
  நம்பிக்கையுடன்..!
  இனிய காலை வணக்கம்!!

  5. ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருக்குமா தெரியாது!
  ஆனால் ஒவ்வொரு நாளையும் நல்லதாக மாற்ற நம்மால் முடியும்!
  இனிய காலை வணக்கம்!!

  6. அன்பான நட்பு ஒன்று அருகில் இருந்தால்...
  சிறகுகால் இல்லாமலும் பறக்கலாம்...
  இனிய காலை வணக்கம்!!

  7. காலையில் உதிக்கும் சூரியனின் தூய்மையான கதிர்களை போல
  நம் மனதிலும் தெளிவான சிந்தனைகளுடன் தொடங்கலாம்
  இந்த பொன்னாலை!
  இனிய காலை வணக்கம்!!

  8. பறவைகளின் இனிமையான இசையோடு
  இளம் தென்றலின் வருடலோடு
  இன்றைய தினம் அழகாய் தொடங்க
  இனிய காலை வணக்கம்!!

  9. காலை எழும் போது சற்றே புன்னகைத்து உங்கள் முகத்தை
  கண்ணாடியில் பாருங்கள்
  அன்றைய தினம் உங்களுடையது என்ற நம்பிக்கை வரும்!
  இனிய காலை வணக்கம்!!

  10. காலையில் மனதில் உதிக்கும் நம்பிக்கை, அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மனதில் பலத்தைத் தரும்!
  இனிய காலை வணக்கம்!!

  மனைவிக்கு காலை வணக்கம் (Romantic Good Morning Wishes For Your Wife)

  1. எனது விடியலின் அர்த்தம் நீ!
  எனது வாழ்க்கையின் அர்த்தம் நீ!
  உன்னுடன் இந்த இனிய நாளைத் தொடங்க
  புன்னகை நிறைந்த மனதோடு!
  என் இனியவளுக்கு காலை வணக்கங்கள்!

  2. நீ என்னோடு இருகிறாய் என்கின்ற தைரியம்
  எண்ணை எந்த சவால்களையும் எளிதாக வெற்றி பெற செய்யும்!
  இனிய காலை வணக்கம் என்னவளே!

  3. காலையில் மலரும் பூக்களை விட,
  புன்னகையோடு என் முன் கண் விழித்தவுடன் தோன்றும் நீ
  எனக்கு என்றும் அழகு!
  இனிய காலை வணக்கங்கள்!

  4. எத்தனைப் பெண்களை நான் என் வாழ்க்கையில்
  சந்தித்தாலும், என்னுடன் வாழ் நாள் முழுவதும் பயணித்து வரும் நீயே எனக்கு சிறந்த பெண்ணாவாய்!
  இனிய காலை வணக்கம்!

  5. ஒவ்வொரு காலையும் எனக்கு நானே பெருமிதம் கொள்ளும் ஒரு விடயம் – நான் சரியான முடிவு எடுத்துள்ளேன்
  இவளை ஏன் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்ததற்கு!
  நன்றியுடன் காலை வணக்கம்!

  6. என் வாழ்க்கையில் ஒவ்வொரு விடியலுக்கும் அர்த்தம்
  உண்டு என்றால், அது நீ என்னவள் ஆன பின்பு தான்!
  என்னவளுக்கு இனிய காலை வணக்கம்!

  7. எந்த பொழுதாக இருந்தாலும், நீ என்னுடன் இருக்கும் வரை
  அது ரம்மியமான இளம் தென்றல் வீசும் காலை பொழுது தான்!
  இனிய காலை வணக்கம்!

  8. ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய இனிமையான நினைவுகளை எனக்குள் சேகரித்துக் கொண்டிருகின்றது.
  இதற்கு காரணம், என்னவள்!
  இனிய காலை வணக்கம்!

  9. உன் முகம் பார்த்த பின்பு தான் சூரியனும் அழகாய் தெரிகிறான்!
  இனிய காலை வணக்கம்!

  10. சற்றே ஒரு நொடி அசந்து போனேன்!
  என் முன் நிற்பது காலை இளம் கதிரவனா?
  இல்லை அன்பான என்னவளா?
  இனிய காலை வணக்கம்!

  pixabay

  காதலுடன் காலை வணக்கம் – கணவனுக்கு(Romantic Good Morning Wishes For Your Husband)

  1. என் கண்களை மூடினாலும், கதிரவன் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்
  என் மனதில் என்னவனை!
  இனிய காலை வணக்கம்!

  2. உன் கரம் பிடித்த நாள் முதல் உதிக்கும் ஒவ்வொரு விடியலும்
  என் நம்பிக்கையின் அஸ்திவாரம்!
  இனிய காலை வணக்கம்!

  3. எத்தனை துயரம் வந்தாலும், தூசி போல ஊதி விடுவேன்
  நீ என்னுடன் இருக்கும் போது!
  இனிய காலை வணக்கம்!

  4. ஒவ்வொரு விடியலும் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையை
  தருகின்றது - நீ என்னுடன் இருக்கும் போது
  இனிய காலை வணக்கம்!

  5. எங்கோ தூரத்தில் இருந்து இதமாய் தென்றல் வீச
  எங்கோ தூரத்தில் இருந்து குயில்கள் பாட
  எங்கோ தூரத்தில் இருந்து கதிரவன் மெதுவாய் எட்டி பார்க்க
  இங்கே அருகில் உன் கரம் பிடித்து அனைத்தையும் ரசித்துக் கொண்டு நான்!
  இனிய காலை வணக்கம்!

  6. ஒவ்வொரு விடியலுக்காகவும் காத்திருக்கிறேன்!
  இந்த அழகான அன்பை பகிரும் நொடிக்காக!
  இளம் கதிர் வீசும் இவ்வேளையில்
  என்னவனுக்கு இனிய காலை வணக்கம்!

  7. எத்தனை சண்டைகள் வந்தாலும், ஒரு அழகான விடியலின் போது, உதட்டோரமாய் ஒரு சிறிய புன்னகை - இப்போது அழகாய் தெரிவது சூரியனா, இல்லை என்னவனா?
  இனிய காலை வணக்கம்!

  8. விடியும் காலை பொழுது எப்போதும் எங்கேயும் அழகுதான்!
  ஆனால், அதை விட அழகு என்னவனின், அன்றைய முதல் புன்னகை!
  காலை வணக்கம்!

  தேர்ந்தெடுக்கப்பட்ட காலை வணக்கம்(Selective Tamil Good Morning Quotes )

  1. நேற்றைய சோகம் இருளோடு மறைய,
  துன்பத்தின் கண்ணீர் பணியோடு கரைய,
  இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,
  பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,
  புதியதொரு வாழ்க்கை விடியலோடு பிறக்க
  அனைவருக்கும்
  இனிய காலை வணக்கம்!

  2. கவிதையற்ற காலை வணக்கத்தை
  களிப்புடன் தூது அனுப்பினேன் உனக்கும்!
  இனிய காலை வணக்கம்!
  நம்பிக்கை என்பது தும்பிக்கை போல
  நம்பிக்கை தான் நட்பின் சுவரு
  நம்பிக்கை இருந்தால்
  அனைத்தும் நம் வசமாகும்!
  இனிய காலை வணக்கம்!

  3. சூரியன் உதித்தது!
  காலை பிறந்தது!
  ஞாயிறு விடிந்தது!
  எல்லோருக்கும் சிறந்த ஓய்வு நாளாக அமையட்டும்!
  இனிய காலை வணக்கம்!

  4. சந்திரன் மறைய, சூரியன் வானில் தோன்ற
  மலர்கள் மலர, அழகியதொரு காட்சி தோன்ற,
  இனிய காலை வணக்கம்!

  5. வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது!
  நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது!
  இனிய காலை வணக்கம்!

  6. கதிரவன் போல் உன் கடமையை செய்
  வானம் போல உன் புகழ் பரவும்
  வானவில் போல உன் வாழ்க்கை அழகாகும்!
  இனிய காலை வணக்கம்!

  7. இந்த அழகான காலை பொழுதை பார்க்கும் போது
  நம்பிக்கை பிறக்கின்றது!
  இந்த நாள் என்னுடையது என்று!
  இனிய காலை வணக்கம்!

  8. ஒவ்வொரு விடியலும் ஒரு புது நாளை பரிசளிப்பதோடு
  வாழ்க்கையின் அர்த்தத்தையும் புரிய வைக்கின்றது!
  இனிய காலை வணக்கம்!

  9. ஏதோ நேற்று போல இன்றும் ஒரு நாள் என்று தொடங்காமல்,
  இன்று ஒரு புதிய நாள், எனக்காக பிறந்திருக்கின்றது என்று தொடங்குங்கள்!
  வெற்றி நிச்சயம்!
  இனிய காலை வணக்கம்!

  10. நம்பிக்கையோடு தொடங்கும் ஒவ்வொரு நாளும் உன்னுடையது!
  முன்னேறி செல்! தடைகள் தானாக விலகும்!
  தெளிவான மனதோடு மேலும் தொடரு. வழிகள் தானாக பிறக்கும்!

  POPxo இப்போது 6 மொழிகளில்  வெளிவருகிறது!  ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.