சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று கெத்தாக வடிவேல் கேட்பது போலத்தான் சண்டை போடாத புருஷன் பொண்டாட்டி எங்கருக்காங்க என்று கேட்க தோன்றுகிறது. நிச்சயம் ஒருவருடன் அதிக நேரம் செலவழிக்கும் போது அவர் நமக்கு உயர் அதிகாரி அல்ல நமக்கு உரிமையானவர் அவரிடம் நமது கோபங்களை காட்டலாம் என்கிற வசதி இருக்கும் உறவாக இருக்கக் கூடிய பட்சத்தில் சண்டைகள் வருவது இயல்பானதுதான் (love fights).
எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணம் இருப்பதில்லை. ஒன்றாக பயணிக்க கூடிய இருவரின் குணங்கள் வெவ்வேறாகத்தான் இருக்கும். அதில் எவற்றை எல்லாம் நாம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் எவற்றை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ளலாம் என்கிற தெளிவு தம்பதிகளுக்குள் இருந்தால் வாழ்க்கை ஸ்வர்க்கம்தான்.
என்னதான் புரிந்து கொண்டாலும் உள்ளே குமைந்து கொண்டிருக்கும் கோப நெருப்புகள் ஏதாவது ஒரு நேரத்தில் வெடிக்கத்தான் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் தான் சாதாரண விஷயங்கள் கூட பெரும் சண்டையில் முடிகின்றன. அதன் பின்னர் நாம் அன்றாடம் செய்திகளில் படிக்கும் விஷயங்கள் நம்மை கவலை கொள்ள செய்கின்றன.
சண்டையிடுதல் ஆரோக்கியமான விஷயம்தான் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனாலும் சண்டையின் போது சில விஷயங்களை கவனமாக தவிர்ப்பது தாம்பத்தியத்திற்கு ஆரோக்கியம் அளிக்குமாம்.
Youtube
கடந்த காலத்தை கிளற வேண்டாம்
உங்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது உங்கள் வாழ்க்கைத் துணையை திசை திருப்ப நீங்கள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் கடந்த கால பிரச்னைகள். அது அப்போதே நடந்து அப்போதே முடிவுக்கு வந்தாயிற்று. அதனை இப்போது பேசுவது சண்டையை பெரிதுதான் ஆக்கும். தன்னுடைய கடந்த காலத்தை பற்றிய வருத்தம் கொண்டிருக்கும் வாழ்க்கைத் துணையிடம் மேலும் அதனைக் குத்திக் காட்டி பேசுவது மன உளைச்சலைத் தான் தரும். கணவனோ மனைவியோ கடந்த காலங்களை எதன் பொருட்டும் கையில் எடுக்காதீர்கள்.
மௌனம் வேதனை தரும்
ஒரு சண்டையில் பேசுவதால் பிரயோஜனம் இல்லை என்று நினைத்து நீங்கள் மௌனமாக செல்வது உங்கள் வாழ்க்கைத் துணையை காயப்படுத்தும். இது உங்கள் சிக்கலை மேலும் அதிகமாகவே ஆக்கும். எதுவும் பேசாமல் இருக்கும் உங்கள் உணர்வுகளை அவர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். ஆகவே உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியம் ஆகும். அப்போதுதான் அதற்கான தீர்வு கிடைக்கும்.
தவறான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம்
ஒரு விவாதம் வாக்குவாதமாக முற்றிப் போகும் போது எதிராளியை அடக்க நினைப்பவர்கள்தான் முதலில் தவறான வார்த்தைகளை ஆரம்பிப்பார்கள். இது அந்த வாக்குவாதத்தை வேண்டுமானால் முடித்து வைக்கலாமே தவிர உங்கள் வாழ்க்கையை அது பாதிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விட்டு விலகி போக நேரிடலாம்.
Youtube
குறை சொல்தல்
உங்கள் வாழ்க்கைத் துணையின் குறைகளை நேர்த்தியாக மிருதுவாக எடுத்துரைக்கலாமே தவிர ஒரு சண்டையின் போது அதனை முகத்தில் அடித்தாற்போல கூற கூடாது. நீ எப்பவும் இப்படித்தான்.. நீங்கள் எதுவுமே செய்ய லாயக்கில்லை போன்ற விஷயங்களை சண்டையின் போது பயன்படுத்தாதீர்கள். உங்கள் சக துணையின் மனதில் இது ஆழமாக பதிந்து விடும்.
கீழ்த்தரமாக நடக்க வேண்டாம்
உங்கள் வாழ்க்கைத் துணையின் பலவீனங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சண்டையின் போது உங்களை நம்பி அவர் சொன்ன விஷயங்களை உங்கள் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். அவரைக் காயப்படுத்தும் எனத் தெரிந்தே அந்த விஷயங்களை நீங்கள் செய்வது தரமான செயலாக இருக்க முடியாது.
தோற்றத்தை பழிக்காதீர்கள்
இது வாழ்க்கைத் துணையிடம் மட்டுமல்ல வேறு யாருடன் பேசும்போது இப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுக்க கூடாது. ஒரு விவாதத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையின் தோற்றத்தை குறிப்பிட்டு அவமானப்படுத்துவது அவர்களை கூனிக் குறுகி போக செய்யும்.
Youtube
ஒப்பிட வேண்டாம்
உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்குமான உறவு என்பது தனித்துவமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். அடுத்த தம்பதிகளை உதாரணம் காட்டி அவர்களோடு உங்கள் உறவை ஒப்பிடாதீர்கள். இது எப்போதும் மனதை ரணப்படுத்தும் செயலாகும்.
குடும்பங்களை இழுக்காதீர்கள்
எல்லா சண்டையும் உச்சக்கட்டத்திற்கு செல்லும்போது செய்யும் ஒரு பெரிய தவறு உங்கள் எதிரே நின்று சண்டையிட்டுக் கொண்டிருப்பவரின் குடும்பத்தை மரியாதைக் குறைவாக பேசுவதாகும். உங்கள் சண்டை உங்களுடன் மட்டுமே எல்லைகளோடு நிற்பதுதான் சண்டைக்கே அழகு.
மரியாதையான சண்டை
உங்களுடன் சண்டை இடுபவர் உங்களுடன் வாழ்நாள் முழுதும் வரப்போகிறவர் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு தவறான உணர்வுகளுக்காக அவரை அவமதிப்பது போல நடத்த வேண்டாம். கோபங்கள் எல்லாருக்கும் பொதுவானதுதான். அதற்காக மற்றவரை அவமானம் செய்து உங்கள் கோபத்தை நியாயம் செய்யாதீர்கள்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!