குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் பொன்மொழிகள்! (Children's Day Greeting In Tamil)

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் பொன்மொழிகள்! (Children's Day Greeting In Tamil)

அனைத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல, குழந்தைகள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு தினம், குழந்தைகள் தினம்! அன்று ஒரு நாலாவது, வழக்கமான பள்ளி வகுப்புகளில் இருந்து தப்ப முடியாதா என்று காத்திருக்கும் மழலை செல்வங்கள், உற்சாகத்தோடு கொண்டாட இந்த ஒரு நாள்!

ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவது ஒரு புறம் இருக்க, குழந்தைகள், தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள், வெற்றியின் பாதையை நோக்கி எப்படி பயணிப்பது, மனம் சோர்வடையும் போது உற்சாகப்படுத்துவது எப்படி, என்று அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள சில சுவாரசியமான குறிப்புகளையும் கற்றுக் கொடுப்பது சிறப்பு. இந்த வகையில், உங்கள் அருமை மழலை செல்வங்களுக்கு, வாழ்த்துக்களோடு, வாழ்க்கை நெறிகளையும் பகிர, இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகளும் (children wishes), பொன்மொழிகளும்! 

Table of Contents

  சிறந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள் (Best Childrens’ Day Wishes)

  1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட
  தோற்றே போகும்
  நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின்
  சிரிப்பின் முன்னால்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  2. ஒரு புன்னகை பூமியில் சொர்க்கம் காட்ட முடியும் என்றால், அது நீங்கள் மட்டுமே!
  ஒரு பார்வை அனைத்தையும் மாற்றி சொர்கத்தை கொண்டு வர முடியும் என்றால், அது உங்களால் மட்டுமே!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  3.பள்ளிக்கு செல்லத் தொடங்கி விட்டாய், அழுகையையும் நிறுத்தி விட்டாய்!
  ஆனால், இன்னும் ஏன் மனம் வரவில்லை, பொம்மைகளை விட்டு விட்டு, புத்தகத்தை கையில் எடுக்க!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  4.ஆயிரம் கவலைகள் இருந்தாலும்,
  ஒரே நொடியில் அவற்றை மறக்க வைத்து
  அனைவரையும் சுலபமாக சிரிக்க வைக்க முடியும் என்றால், அது குழந்தைகளால் மட்டுமே முடியும்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  5.உலகில் எத்தனை
  வர்ணங்கள் இருந்தாலும்
  அத்தனையும் தோற்றுதான் போகின்றது
  உந்தன் கரங்கள் முன்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  6.குழந்தைகள் செய்யும்
  குறும்புகளும் சுகமே
  பெரியவர்களின் பார்வையில்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  7.பல வருடம் வாழும் மனிதன்
  அழுது கொண்டேபிறக்கிறான்
  ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
  சிரித்து கொண்டே பூக்கிறது...!
  மழலையின் சிரிப்பும் தினமும் பூக்கும் பூக்களை போன்றது!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  8.என்னை பிடிக்க முடியாது என்று சிரித்துகொண்டே
  ஓடும் குழந்தையின் அழகு ஓர் அபூர்வம்...!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  9.குழந்தைகள் எல்லாமே அவதாரங்கள் தான்
  அவர்கள் போக்கில் நெறியோடு வளர்க்கும் போது, அவர்கள் மேன்மைப் பெறுகின்றார்கள்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  10.குழந்தைகளுக்கு மட்டுமே பொய்யாக சிரிக்க தெரியாது
  அதனால் தான் குழந்தைகளை பார்க்கும்போது மட்டும் மனிதர்களால்
  பொய்யாக சிரிக்க முடிவதில்லை...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  சிறப்பு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் (Special Children's Day Wishes)

  Pexels

  11. தடுமாறிடும் குழந்தைகளுக்கிடையே,
  தடம் மாறி தடுமாறிடும் முன்னாள் குழந்தைகள் நாம்…
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  12. விதை, அதை விதை
  பதியும் விதைகளெல்லாம் நாளைய பதில்கள்…
  விடை தேடி விடியும் நாட்களில்,
  விதை தேடி அலைவோம் ஒர் நாளில்…
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  13. சாத்தியமில்லை என்ற வார்த்தை இவர்களது ஏட்டில் சத்தியமாய் இல்லை.
  வானத்தை தாண்டிய வளிமண்டல கோட்டைக்குள்
  சிண்ட்ரல்லாவையும் வேதாள விபூஷகர்களையும்
  யதார்த்த ஹீரோக்கள் போல பாவித்து அவர்களின்
  ஏக்க தேக்கங்களின் நோக்கங்களோடு வாள்வீசும் வயது.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  14. நித்தியவாழ்வு எனும் பேரின்பபெருவாழ்வு போன்ற அவதானிப்பை
  இவர்களது கனவுகள் நமக்கு சொல்லாமல் செல்வதில்லை.
  ஏட்டறிவில் குறைந்திருப்பினும், வான்கோள்கள் கண்துஞ்சாது வட்ட இயக்கப்பாதையில் சுற்றி வருவதுபோல், தமது தேடல்வேட்டையை விமர்சனங்களை சட்டை செய்யாமல் தொடர்கிறார்கள்.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  15. எண்ணிய கருமத்தை எவை எதிர்வரினும்
  துணிந்தாற்றும் வீரவினோத வைராக்கியம்
  மழலைப் பட்டாளங்களின் தனிப்பெரும் சொத்து.
  இன்னும் எதை நான் சொல்ல இவர்களின், ஜகதலபிரதாபங்களை.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  16. ஒன்றுமட்டும் சொல்லுவேன், முடிந்தால் கற்றுக்கொள்வோம் நமது முன்பருவ வரலாறுகளை.
  ஆனாலும் முடக்கிவிடவேண்டாம், குழந்தைகளின் வான்துளைக்கும் கனவுகளை.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  17. குழந்தைகளே !
  இறந்த இல்லத்திற்கு சென்று திரும்பும்போது சொல்லும்
  "போய்கிறேன்" என்ற வார்த்தையை உன் இறந்தகாலத்திற்கு சொல்லி நகர்ந்துவிடுங்கள்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  18. குழந்தைகளே !
  ஒவொரு நொடியும் பிறந்திடுங்கள், வாழ்நாள் முழுவதும்
  குழந்தைகளாகவே வாழ்ந்துடுங்கள்,
  உங்களை செதுக்க நினைக்கும் உங்கள் சிற்பியிடம் நீங்கள் மாற நினைக்கும் அந்த அழகான தோற்றத்தை சொல்ல மறந்துவிடாதீர்கள்
  உங்கள் சிற்பியான ஆசியரிடம் சொல்லுங்கள் "உங்கள் அறிவு உளி
  எங்கள் கனவுகளை உடைக்கவேண்டாம் எங்கள் கனவுகளின் நிஜத்தை உருவாக்கட்டும்"
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  19.இருள் சூழ் உலகில் ஒளிமையமான எதிர்காலம் அமைத்திட
  புதிய சூரியனையே நிறுவுங்களே..
  இருளினுள் சூழ்ச்சி செய்யும் உலக மகா
  சூத்திரதாரிகளின் சூது நிறைபுத்தியை எரித்து சாம்பலாக்கி
  நல்லோர்களின் சோம்பல் நீக்கும் ஒளிமிகு சூரியனை நிறுவுங்களே
  தங்கள் மனமென்னும் பரந்த வானில்.

  20.நீர் நிறைந்தக் கடலாய் மனதின் ஆழம் நிரம்ப,
  அன்பால் நிறையுங்களே எனதன்பு குழந்தைகளே..
  நித்தம் நித்தம் புதிய புதிய பூக்களைப் பூக்கும் பூஞ்சோலையாய்,
  எங்கும் அன்பென்னும் நீரால் மழை பொழிந்து,
  காணும் காட்சியெல்லாம் பசுமையாய் மாற,
  குழந்தைகளே அன்புக்கடலாய் மாறுங்களே.

  வாட்ஸ் ஆப் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்(Whatsapp Children's Day Status)

  21. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறுஞ்சி மலரைவிட
  உன் அரை நொடிப் புன்னகை அதிசயம்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  22. ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து,
  கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  23. துன்பமின்றி பட்டாம் பூச்சிகளாய்
  சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும் சிறுவர்கள் அனைவருக்கும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  24. இறைவன் படைத்த இயல்பு கெடாமல்
  தொடரும் பட்டியலில் என்றும் இருக்கிறது
  குழந்தஈகளின் சிரிப்பு!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  25. காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாகவும்
  வேலையே இல்லாமல் மும்மரமாகவும்
  இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  26. துன்பத்திற்கு பின்னர் இன்பம் எனும் தத்துவம் புரிய வைத்த புத்தகம், குழந்தைகள்
  அற்புதங்கள் காட்டும் இறைவனின் பேரற்புதம், குழந்தைகள்
  உன் புன்னகை இதழ்களில் தேன் உண்ணத் துடிகின்றனர், வையகத்தின் வண்ணத்துப் பூசிகள், குழந்தைகள்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  27. மாலை நேரத்து தென்றல், மழைக்காலச் சாரல்
  பனிக்கால குளிர், கோடைக்கால வெயில் கொண்டதாய் மனதில் களிப்பு
  எதிரே குழந்தையின் சிரிப்பு - இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  28. உங்கள் தெவிட்டாத புன் சிரிப்பில், மனம் நிம்மதி பெறுகின்றது
  உங்கள் அந்த புன்னகை, பல்லாயிரம் கவிதைகளை ஊற்றெடுக்க வைக்கின்றது,
  நீங்கள் பேசும் அழகை கேட்டால், குயிலும் தோற்றுப் போகின்றது!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  29. செடியில் பூக்கும் மலரை விட
  நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  30. சிறு பிள்ளையாக இருந்த போது எப்போது தான் பெரியவனாவேன் என்று நினைப்பேன்
  ஆனால், பெரியவனான பின், சிறு குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்று சிந்திகின்றேன்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  உங்கள் நண்பர்களுடன் பகிர பொன்மொழிகள் (Children's Day Messages To Send)

  Pexels

  31. உலகம் போகும் பாதை, கற்பிக்கும் அநீதி,
  யாவற்றையும் அன்பைச் சாட்சியாக்கி பகுத்தறிவால் ஆராய்ந்து பாருங்களே
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  32. கொக்கரிக்கும் பயங்கரவாதிகளின் சிரிப்பொலியை மக்கி,
  ஒன்றுமில்லாதாக்கி அன்பால் நிறைந்த நல்லுள்ளங்களின் சிரிப்பொலி பரவ
  வழிவகை செய்யுங்களே, எதிர்காலத் தூண்களாகிய குழந்தைகளே.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  33. காரிருளிள் மூழ்காதிருக்கட்டும் தங்கள் மனம்.
  சூரிய ஒளியாய் பிரகாசிக்கட்டும் தங்கள் குணம்.
  பசுமையான புது உலகம் பிறக்கட்டும் உங்களாலே...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  34. குழந்தைகள், ஒவ்வொரு வீட்டின் கொடைகள்
  இவர்களை பட்டை தீட்டி வைரங்களாக்குவதும்
  கண்டிக்காகமல் அவர்கள் போக்கில்விட்டு பின் வருத்தப்படுவதும்
  பெரியவர்களில் கைகளில் தான் உள்ளது...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  35. குழந்தைகள் பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாலே
  மனம் நிறைவடையும் மகிழ்ச்சி பொங்கும்
  இருக்கும் வருத்தங்கள் கண்ணுக்கு தெரியாத பூச்சியாய் பறந்துபோகும்
  கோடையில் தென்றல்.... குளிரில் கதகதப்பு இவர்கள்...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  36. குழந்தைகள், அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
  எந்த வருத்தமின்றியும், பயமின்றியும், எந்த துன்பமின்றியும்
  நாளை என்ன எப்படி எங்கு என்று சிந்திக்காமல்
  சந்தோசமாய் வாழுமவர்களை வாழவிடுங்கள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  37. குழந்தைகள், உற்சாக அருவிகள்... பாடித்திரியும் குருவிகள்...
  நம் வாழ்வை வளமாக்க வந்த கருவிகள்...
  அவர்களோடு மகிழ்வாய் கழிக்கும் தருணங்களே நாம் வாழும் காலங்கள்
  மீதி நேரங்களில் வாழ்க்கை நம்மோடு மல்லுக்கட்டி கொண்டே இருக்கும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  38. குழந்தைகள் புத்தகப் பையுடன் புத்தர்கள்.
  கற்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
  ஆசிரியர்களுக்கு. பொறுமையை, அன்பை, சகிப்புத்தன்மையை,
  மன்னிப்பை.........
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  39. வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு முறிந்து போய் விடாதே
  பிரச்சனைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செல்ல
  பழகிக் கொள் சின்ன சின்ன ஆசைகள் தான் எதிர்பார்ப்பு தான்
  ஆனால் அவை நடந்தேரினால் வாழ்க்கை மகிழ்ச்சி
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  40. நாம் வெற்றி பெற வேண்டும் என்று உழையுங்கள்
  அடுத்தவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினையாதீர்கள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  ஊக்கவிக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் (Motivating Children's Day Wishes)

  41. குழந்தைகளே, நீங்கள்
  சிறகை விரித்து பறக்கும் சீட்டுக் குருவிகள்
  வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்து பூச்சிகள்
  துள்ளி ஓடும் மான்கள்
  மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  42. சேர்ந்துண்ணும் காக்கைகள் போல
  சிந்தனை பலம் கொண்ட எறும்புகள் போல
  நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள் போல
  சிற்பிக்குள் முத்துக்கள் போல
  இசைப் பாடும் குயில்கள் போல
  கற்பனைக்கு எட்டா அதிசயங்கள் மழலைகள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  43. நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
  நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
  உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
  உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  44. உங்களைப்போல் துள்ளி விளையாட ஆசை தான்
  விண்ணில் பறக்க ஆசை தான்
  மண்ணிலும் புரள ஆசை தான் - ஆனால்
  சிறகுகளோ உடல் வலிமையோ இல்லை என்னிடம்
  ஆனால் – இன்று ஒரு நாள் மட்டும்
  குழந்தையாகிறேன், உங்களுடன் சேர்ந்து!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  45. உங்களைச் சிரிக்க வைத்து என் கவலை மறக்கிறேன்
  மருந்துகளை துறக்கிறேன், மகிழ்ச்சியில் பறக்கிறேன்
  தினம் தினம் இத் திருநாள் கிடைக்காதா என ஏங்குகிறேன்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  46. இளமையிலே கல்விதனை கற்று
  இன்முகத்துடனே பழக அறிந்திட்டு
  தெளிவுடனே ஏடுகளைப்படித்திட்டு
  தேர்ந்த கல்வி கொண்டபின் அடக்கமாய் உயர்வை உன் வாழ்க்கையில்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  47. சொல்லும் செயலும் தூய்மையாய் இருக்க
  சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கி
  கடமையதை தவறாமல் செய்து
  காரியத்திலென்றும் நல்ல உறுதியுடன் முன்னேருவாயாக!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  48. வைகறையில் துயிலெழுந்து
  வாழும் வகைத் திட்டங்களை வகுத்து
  மெய் வளர விளையாடித் தீர்த்து
  மேன்மைமிகு கலைகளையும் கர்ப்பாய்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  49. இனிய சொல்லைமட்டும் நா இயம்பிட
  இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட
  கனிவுகொண்ட நெஞ்சம் கடைசிவரை இருந்திட
  கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல்
  என்றும் வாழ்த்துகிறோம்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  50. தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்து
  தாய்நாட்டின் சிறப்பதனை போற்றி
  அறிவுதந்த ஆசானையே வணங்கி
  அன்பினாலே உலகம் தன்னை ஆள வேண்டும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  உற்சாகமூட்டும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் (Encouraging Children's Day Wishes)

  Shutterstock

  51. நாடு நமது நாடு என்ற எண்ணத்தோடு
  நன்மையான செயல்கள் மட்டும் செய்து
  ஒற்றுமைப்பயிரினை வளர்த்து
  ஒப்பில்லா வாழ்க்கை வாழ, வாழ்த்துக்கள்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  52. நன்னெறிக்கு ஒளி கொடுக்கும் வள்ளுவர் வாக்கு- உயர்
  ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
  உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
  உணர்ந்து நடந்தால் உண்டு பல நன்மை நமக்கு!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  53. அழகெல்லாம்
  அழகாய் வந்து பிறந்த அழகு
  அழகு குழந்தைகள்.
  குழந்தை என்றாலே குதூகலம்
  கண்ணழகில் புன்னகை காட்டி
  காண்போரை சுண்டி இழுக்கும்
  காந்த வசீகரம்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  54. பூக்களைப் பறிப்போம் ஆனால்
  குழந்தைப் பூக்கள் நம்மைப் பறித்து விடும்.
  குழந்தைத்தனம் கொண்ட
  அனைவரும் குழந்தைகளே!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  55. ஆனந்த மழையை
  அளவின்றி சொரியும்
  அன்புக் குழந்தைகளுக்கு
  அன்பான வாழ்த்துகள்.
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  56. இந்த குழந்தை விதைகளை பண்படுத்தப்பட்ட செம்மண்ணிலே
  விதையுங்கள், நாளைய பாரதத்திற்கு நிழல் கொடுத்து தாங்கிபிடிக்கும்
  வலிமை மிக்க விருட்சங்கள் இவர்கள்...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  57. கள்ளிப்பாலுக்கு இரையாக்காமல் கல்வி கொடுங்கள்
  நாளைய பாரதத்தின் தூண்கள் இவர்கள்...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  58. குழந்தை தொழிளார்களை ஊக்கப்படுத்தாதீர்கள்
  இன்று கல்வி கொடுத்தால் நாளைய பாரதத்தின்
  மிகச்சிறந்த தொழிலதிபர்கள் இவர்கள்...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  59. குழந்தைகளை கனவு காணவிடுங்கள்
  நாளைய அப்துல் கலாம், நாளைய அன்னை தெரெசா
  நாளைய விவேகானந்தர், நாளைய நபிகள் நாயகம்
  இன்றைய பிஞ்சுகள் என்பதை மறவாதீர்கள்...
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  60. கற்பனை குதிரைகள் புல்லட் ட்ரெய்ன் வேகத்தில் ஓடும் பருவம்.
  அந்திசாயும் வண்ணங்கள் போல் புதிதாய் புதுமையாய்
  சிறகுகளில் கண்ணைப்பறிக்கும் இளம் தேவதைகள், குழந்தைகள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  மழலையர்களுக்கான வாழ்த்துக்கள் (Children's Day wishes for junior class children)

  61. வாழும் காலம் சிரிது என்பதால்
  நேரத்தை விரயம் செய்யாதே வெற்றியின்
  தொலைவு தூரம் என்பதால் முயற்றியை கைவிடாதே!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  62. நீ விரும்புவதை செய்வதில் உன்சுதந்திரம் அடங்கியுள்ளது
  நீ செய்வதை விரும்புவதில் உன்மகிழ்ச்சி அடங்கியுள்ளது
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  63. வாழ்க்கையில் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவோ, தெரியாது
  ஆனால் என்றும் குறையாத ஆர்வத்தோடு பயணித்து செல்!
  வாழ்க்கை அழகாகும், வெற்றியும் கைகூடும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  64. ஒருவரின் அன்பு உங்களை பெருமை படுத்தினால்
  அதன் கரம் பற்றி முன்னேறுங்கள்
  சிறுமை படுத்தினால் அதை விட்டு விட்டு முன்னேறுங்கள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  65. நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம்
  தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே
  வாழ்க்கை பெரியது, வாழ்வில் நதிபோல் ஓடிக்கொண்டே இருங்கள்
  என்றும் ஒரே இடத்தில் குளம்போல் தேங்கி வற்றிவிடாதீர்கள்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  66. லட்ச நட்சத்திரங்கள் கண்ணுக்கு தென்பட்டாலும்
  ஒற்றை நிலவே மனதில் நிலைத்து நிற்கிறது
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  67. விழுவதற்கு உன்கால்கள் முடிவு செய்யட்டும்
  எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார்
  படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்
  விழுவது உங்கள் கால்களாக இருந்தால்
  எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  68. தன்னம்பிக்கையோடு துவங்கப்படும்
  எல்லா வேலைகளுக்கும் நல்ல நேரங்கள் தேவைப்படுவது இல்லை
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  69. நான்கு பேர் உன்னை தலை நிமிர்ந்து பார்க்க வேண்டுமெனில்
  யாரையும் திரும்பி பார்க்காமல் உன் செயல்களில் மட்டும் கவனத்தைச் செலுத்து
  மற்றவர் வழியில் நீ உட்புகாத வரையில் உன்னைப் பிரச்சனைகள் பின் தொடராது
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  70. நற்குணங்களை தகுதியாக்கிக் கொண்டு
  நான் இப்படி தான் என்று நிலைத்து நில்லுங்கள்
  புரிபவர்கள் புரிந்து கொண்டால் போதும்!
  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

   

  மேலும் படிக்க - "ஹெலிகாப்டர் பெற்றோர்" - உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

  பட ஆதாரம்  - Youtube

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!