தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல்(Love) வசனங்கள்!

தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல்(Love) வசனங்கள்!

தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமான திரைப்பட டயலாக்குகள் ஓர் பார்வை. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு காதல்(love) திரைப்படங்கள் ஓர் மிக முக்கிய  பங்கு வகித்தது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறு அனைத்து இளைஞர்கள் மனதை கவர்ந்த காதல்(love) திரைப்பட டயலாக்குகள் தொகுப்பினை இங்கு பார்ப்போம்.


ராஜா ராணி
"எனக்கு எங்க அப்பாகிட்ட மட்டும் தான் பயம் மத்தபடி ஐ லவ் யூங்க" என்று நயன்தாராவிடம் ஜெய் காதலை வெளிப்படுத்தும் வசனம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.


love dialogues001


தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கியம் மற்றும் நன்மைகள்!


அஞ்சான்
அஞ்சான் படத்தில் சமந்தா சூர்யாவைப் பார்த்து "நீ நிதானமா இல்ல உன் கால் தரையில படல முதல்ல நில்லு அப்புறம் வந்து சொல்லு" வசனம்.


மெட்ராஸ்
"நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? சரி வா வந்து பைக்ல உக்காரு கல்யாணம் பண்ணிக்கிறேன்" மெட்ராஸ் படத்தில் கேத்தரின் தெரசா ஒரே வசனத்தில் தனது காதலை(love) வெளிப்படுத்தும் இந்த வசனம் காதலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


காக்க காக்க
"நான் உங்களை கல்யாணம் பணிக்கணும் உங்ககூட என் வாழ்க்கைய வாழணும் உங்க கூட சிரிச்சு பேசணும் உங்க கூட சண்டை போடணும் உங்க தோள்ள சாஞ்சு அழனும், இப்ப போலவே உங்க மேல பைத்தியமா இருக்கணும்" என்று காக்க காக்க படத்தில் சூர்யாவிடம் ஜோதிகா(love) பேசிய வசனம்.(ஜோதிகா விஷயத்தில் இது உண்மையாகிவிட்டது).


விண்ணைத்தாண்டி வருவாயா
"இந்த உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்சிய லவ் பண்ணினேன்", "காதல, தேடிட்டு போக முடியாது. அது நிலைக்காது. அதுவா நடக்கனும், நம்மள போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும், எப்பவும் கூடவே இருக்கனும்.அது தான் உணமையான லவ்". விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு பேசிய இந்த வசனங்கள் இன்றைய தலைமுறைக்கு அதிகம் பிடித்த காதல்(love) வசனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.


love dialogues002


சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் மற்றும் தொக்கு !


காதலுக்கு மரியாதை
"நான் உன்னை ஆயிரம் முறையாச்சும் பார்த்திருப்பேன். கனவுல என் மனசுக்குள்ள, மறந்துடுறேன் எல்லாத்தையும் மறந்துடுறேன் ஆனா போன ஜென்மத்துல எப்பவோ பார்த்து ஆசை தீராத உன் முகம் என் மனசுக்குள்ளேயே இருக்கு. அத என்னால மறக்கவே முடியாது" காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் ஷாலினியிடம் சொல்லும் இந்த வசனம் விஜய்யின் சிறந்த காதல்(love) வசனங்களில் ஒன்று.


அலைபாயுதே
"சக்தி நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைபடல, நீ அழகா இருக்கன்னு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு". அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அநேகமாக எல்லாக் காதலர்களும் தங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார்கள்.


love dialogues003


தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்! மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்!


வாரணம் ஆயிரம்
ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன். நான் இத சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு. And I Think i am in love with you.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
தினமும் நான் சண்ட போடுவேன், வெறுப்பேன், கோபப்படுவேன், தலைய பிச்சிக்க வெப்பேன். ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன். காரணம் காரணம் இன்னைக்கு உள்ளுக்குள் இருக்கும் அழகையும் பாக்கனும் னு பக்குவம் வந்திருச்சு.


தனி ஒருவன்
எனக்கு புரபோஸ் எல்லாம் பண்ண தெரியாது. முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்கோ.


love dialogues004


பெங்களூர் நாட்கள்
எனக்கு உங்க பின்னாடி நடக்கனும்னு இஷ்டமே இல்ல, உன் கூடவே நடக்கனும்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo