உங்கள் வெற்றிக்கு உறமாக இங்கே சில பிரபலங்களின் பொன்மொழிகள்! (Best Success Quotes In Tamil)

உங்கள் வெற்றிக்கு உறமாக இங்கே சில பிரபலங்களின் பொன்மொழிகள்! (Best Success Quotes In Tamil)

வெற்றி(success) ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். அது அவனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும். ஆனால், பிரபலமானவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒருவர் தான் தீர்மானமாக நினைக்கும் ஒரு விடயத்தை எண்ணியது போல முடித்து விட்டாலே அது வெற்றி தான். வெற்றியில் அளவுகோல் என்று எதுவும் இல்லை. ஒரு சிறு குழந்தைக்கும் கூட, தான் ஆசைப்பட்ட ஒரு மிட்டாயோ அல்லது ஒரு பொம்மையோ கிடைத்து விட்டால், அதுவும் வெற்றிதான். 

வெற்றியின் அளவுகோலாக, ஒருவருக்கு தனது மனதில் தான் சாதித்து விட்டோம் என்கின்ற அந்த மகிழ்ச்சியையும், தனுக்குள் ஏற்பட்டுள்ள தன்னம்பிக்கையையுமே அளவுகோலாக கூறலாம். 

நீங்கள் வெற்றி பெற, உங்களை ஊக்கவிக்க, இங்கே உங்களுக்காக சில பிரபலங்களின் பொன்மொழிகள்! 

Table of Contents

  வெற்றிக்கான பொன்மொழிகள் (Best Success Quotes)

  1. தளராத இதயம் உள்ளவனுக்கு
  இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை!

  2. வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல...
  அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்
  தன்னம்பிக்கைக்குமே சொந்தம் – ஹிட்லர்

  3. நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது
  நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெற போகிறோம்
  என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

  4. எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதை விட
  எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு
  வெற்றி உன்னை தேடி வரும்!

  5. என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு!
  ஆனால்,
  நான் ஒரு முறைகூட முயற்சியைக் கைவிடவில்லை! – எடிசன்

  6. வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே
  என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.
  செய்வதை விரும்பிச் செய்செய்வதை நம்பிக்கையோடு செய்.

  7. நீ வெற்றி பெரும் பொழுதெல்லாம்
  உன் முதல் தொளிவியை நினைத்துக் கொள்...

  8. வெற்றி வந்தால் பணிவு
  அவசியம்
  தோல்வி வந்தால் பொறுமை
  அவசியம்
  எதிர்ப்பு வந்தால் துணிவு
  அவசியம்
  எது வந்தாலும் நம்பிக்கை
  அவசியம்

  9. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.
  ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
  நாம் ஜெயித்து விடலாம்..

  10. நம்பிக்கை என்னும் படியில் நீ இருக்கும் வரை
  வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்

  pixabay

  சிறந்த வெற்றிக்கான பொன்மொழிகள் (Best Motivational Quotes For Success)

  1. உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
  உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்,
  வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்!

  2. வெற்றிபெறும் நேரத்தைவிட
  நாம் மகிழ்ச்சியுடனும்
  நம்பிக்கையுடனும்
  வாழும் நேரமே
  நாம் பெறும்
  பெரிய வெற்றி

  3. பல முறை முயற்சித்தும்
  உனக்கு தோல்வி என்றால்
  உன் இலக்கு தவறு
  சரியான இலக்கை தேர்ந்தெடு..

  4. எல்லாம் தெரியும் என்பவர்களை விட
  என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
  வாழ்வில் ஜெயிக்கின்றார்...

  5. ஒவ்வொரு நாளும்
  வெற்றி பயணத்தை
  தொடங்கிவிட்டேன் என்று
  முதலடி எடுத்து வை

  6. வெற்றிபெறும் நேரத்தைவிட
  நாம் மகிழ்ச்சியுடனும்
  நம்பிக்கையுடனும்
  வாழும் நேரமே
  நாம் பெறும்
  பெரிய வெற்றி

  7. தன்னம்பிக்கை இருக்கும்
  அளவுக்கு முயற்சியும்
  இருந்தால் தான் வெற்றி
  சாத்தியம்...

  8. வியர்வை துளியை
  அதிகப்படுத்து
  வெற்றி வந்தடையும்
  வெகு விரைவில்

  9. ஒரு நாள் விடியும்
  என்று காத்திருக்காமல்
  இன்றே முடியுமென
  முயற்சி செய்
  வேதனைகளும்
  வெற்றிகளாக மாறலாம்

  10. திறமையும் நம்பிக்கையும்
  இருந்தால்
  கண்டிப்பா வாழ்க்கையில்
  ஜெயிக்க முடியும்

  உற்சாகமூட்டும் வெற்றிக்கான பொன்மொழிகள் (Encouraging Success Quotes)

  1. தோற்றுக் கொண்டே
  இருந்தாலும் கவலைப்படாதே
  நிச்சயம் ஒரு நாள்
  வெற்றி பெறுவாய்
  மனதில் உறுதியை
  மட்டும் வை
  கனவுகள் நனவாகும்
  காலம் வரும்

  2. வெற்றி
  கதைகளை என்றும்
  படிக்காதீர்கள் அதிலிருந்து
  உங்களுக்கு தகவல்கள்
  மட்டுமே கிடைக்கும்
  தோல்வி கதைகளை
  எப்போதும் படியுங்கள்
  அது நீங்கள்
  வெற்றி பெறுவதற்கான
  புதிய எண்ணங்களை கொடுக்கும்

  3. விடாமுயற்சி
  என்ற ஒற்றை நூல்
  சரியாக இருந்தால்
  வெற்றி எனும் பட்டம்
  நம் வசமே

  4. தொடர்ந்து முயற்சி செய்து
  கொண்டே இருங்கள்
  தோல்வி கூட ஒரு நாள்
  இவஅடங்கமாட்டானு
  நம்ம கிட்ட தோற்றுவிடும்

  5. தோல்வி உன்னை துரத்தினால்
  நீ வெற்றியை
  நோக்கி ஓடு

  6. குறி தவறினாலும்
  உன் முயற்சி
  அடுத்த வெற்றிக்கான
  பயிற்சி

  7. உன்னால் முடியும்
  என்று நம்பு...
  முயற்சிக்கும் அனைத்திலும்
  வெற்றியே...

  8. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்
  முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை
  உன்னிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை
  உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு!

  9. உன் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம்
  ஆனாலும் அதன் மேல் நீ கொண்ட நம்பிக்கையில் சிறிதும்
  மனத்தடை வர கூடாது

  10. தோல்வி பட்ட உனக்கு தான்
  வெற்றியின் அருமை தெரியும்
  எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு
  வெற்றிக்காக வரிந்து கட்டு
  இந்த நவீன உலகத்தில்!

  pixabay

  வாட்ஸ் ஆப் வெற்றி பொன்மொழிகள் (Whatsapp /SMS Success Quotes)

  1. உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
  உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்
  வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...

  2. முயற்சி செய்ய தயங்காதே
  முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்...!

  3. தளராத இதயம் உள்ளவனுக்கு
  இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை

  4. தோல்விகள் என்பது
  உன்னை தூங்க வைக்க பாடும் தாலாட்டு அல்ல
  நீ நிமிர்ந்து நிற்பதற்கான
  தேசிய கீதம்

  5. நீ ஒதுக்கப்படும் சபைகளில்
  நிமிர்ந்து நில்....
  நீ புகழப்படும் சபைகளில்
  அடக்கமாய் நில்...
  நீ விமர்சிக்கப்படும் இடங்களில்
  கோபமாக இரு....

  6. வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே
  என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்
  செய்வதை விரும்பி செய்
  செய்வதை நம்பிக்கையோடு செய்

  7. உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான
  காரணங்களை நீங்கள் கண்டறியா விட்டால்,
  நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஓர் அடி கூட
  எடுத்து வைக்க முடியாது!

  8. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே...
  அது, உன்னைக் கொன்றுவிடும்
  கண்ணைத் திறந்து பார்...
  நீ, அதை வேற்றுவிடலாம்!

  9. வெற்றி பெற மூன்று வழிகள் –
  1. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்
  2. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்
  3. மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்
  – வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்

  10. ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால்,
  சில வேளைகளில்
  முட்டாளைப் போலவும்
  ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும் – மாண்டேஸ்க்யு
  பிரபலமானவர்களின் வெற்றிக்கான பொன்மொழிகள்

  pixabay

  போராடிய பிரபலங்களின் வெற்றி பொன்மொழிகள் (Success Quotes By Freedom Fighters)

  வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற பிரபலங்கள் தங்கள் வெற்றிக்கு வித்திட்ட பொன் மொழிகளை இந்த உலகத்திற்கு விட்டு சென்றுள்ளனர். அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட பொன்மொழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

  சுபாஷ் சந்திர போஸின் வெற்றி பொன்மொழிகள் (Success Quotes By Subash Chandra Bose)

  1. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதியில் 
  வெற்றிக்கு இரியவர்கள்!


  2. உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் 
  அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்!

  pixabay

  அப்துல் கலாம் - வெற்றியின் பொன்மொழிகள் (Success Quotes By Dr APJ Abdul Kalam)

  1. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
  ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

  2. கனவு காணுங்கள்!
  ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு

  3. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

  4. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

  5. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
  உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...

  6. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
  அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

  7. ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்

  8. கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
  கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

  9. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே,
  அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்,
  அதை வென்றுவிடலாம்.

  10. உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...
  ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

  கண்ணதாசனின் வெற்றி பொன்மொழிகள் (Success Quotes By Kannadhasan)

  1. புத்தியுள்ள மனிதரெல்லாம்
  வெற்றி காண்பதில்லை
  வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
  புத்திசாலியில்லை

  2. நீ வெற்றிக்காக போராடும் போது
  வீண் முயற்சி என்று சொல்பவர்கள்
  நீ வெற்றி பெற்றபின் விடா முயற்சி
  என்பார்கள்!

  pixabay

  பிரபலமானவர்களின் வெற்றி பொன்மொழிகள் (Famous Personalities Success Quotes)

  1. வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது.
  நாம்தான் நடந்து நடந்து பாதை
  போடா வேண்டும் - டிஸ்ரேலி

  2. நீ வெற்றி பெற்றுவிட்டால் யாருக்கும் விளக்கம் சொல்லத்தேவை இல்லை!
  தோல்வி அடைந்து விட்டால் விளக்கங்கள் சொல்ல நீயே தேவை இல்லை! – ஹிட்லர்

  3. எந்த துறைமுகத்திற்கு போய் கொண்டிருக்கிறோம் என்பதை
  அறியாத மனிதனுக்கு எந்த காற்றும்
  துணை வராது. – நிகோலஸ் லிங்க்

  4. புகழை மறந்தாலும்,.... நீ பட்ட அவமானங்களை மறக்காதே...
  அது இன்னொரு முறை...
  உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும் – ஹிட்லர்

  5. ஒரு மனிதன், அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே
  இருக்கிறான்.
  அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான் – ஹிட்லர்

  6. சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை,
  துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை. – அப்துல் கலாம்

  7. எனது வெற்றிகள் மூலம் எண்ணை மதிப்பிடாதீர்கள்
  எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிபிடுங்கள் – நெல்சன் மண்டேலா

  8. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
  ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்... – ஆபிரகாம் லிங்கன்

  9. அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்...
  குணம் தான் மரியாதையை பெற்றுத் தரும் – ப்ரூஸ் லீ

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!  ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.