கெட் தி லுக் - ஐஸ்வர்யாவின் டஸ்கி ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் !

கெட் தி லுக் - ஐஸ்வர்யாவின் டஸ்கி  ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் !

பொதுவாக அடர் நிறம் அல்லது டஸ்கி நிற தோற்றம் (dusky skin) கொண்டவர்கள் மேக்கப் போட பயப்படுவார்கள். அவர்களுக்கு அது சரியாக இராது, வெள்ளை படர்ந்தார்போல அசிங்கமாக இருக்கும் என்று மேக்கப் (makeup) போடுவதை தவிர்ப்பார்கள். உங்கள் நிறத்திற்குமேல் வர்ணம் தீட்டி வெள்ளையாக தோன்றாமல், எப்படி உங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் போல இயற்கையான அழகோடு வெளிப்படுத்துவது என்று பார்க்கலாம்

1. ப்ரைமர்

முதலில் நாம் ப்ரைமரில் இருந்து ஆரம்பிக்கலாம். 

உங்களுடைய சருமத்தின் தன்மையைப் பொருத்து அதற்கு ஏற்ற ப்ரைமர் தேர்வு செய்யுங்கள். உங்கள் சருமம் எண்ணெய்ப் பதம் உள்ள சருமமாக இருந்தால், ஒரு ஜெல் ப்ரைமரை தேர்ந்தெடுங்கள். அது பௌண்டேஷன் போடவும் உதவியாக இருக்கும். மேலும், மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும். உங்களுடைய சருமம் வறண்ட சருமமாக இருந்தால், ஈரப்பதமான ஹைடிரேடிங் ப்ரைமர் பயன்படுத்துங்கள். 

ப்ரைமர் பயன்படுத்தும்போது வட்ட வடிவில் தேய்க்காமல் மேலிருந்து கீழாக மென்மையாக தடவுங்கள். அதாவது முடி எந்த திசையில் வளர்கிறதோ அந்த திசையிலேயே தடவுவது நல்லது.

2. கலர் கரெக்ட்டர்

டஸ்கி நிற முகத்திற்கு ஆரஞ்சு கலர் கரெக்ட்டர் பயன்படுத்துங்கள். எங்கெல்லாம் கரும் புள்ளிகளும், கருமையாக இருக்கிறதோ அங்கு மட்டும் இந்த கரெக்ட்டர் கொண்டு நன்றாக தடவி கருமை நிற புள்ளிகளை மறைக்கவும். திட்டு திட்டாக ஆகி விடாமல் நன்றாக ப்ளெண்ட் செய்து கொள்ளுங்கள். 

POPxo பரிந்துரைப்பது - எல்.ஏ. கேர்ள் புரோ கன்சீல் எச்டி ஆரஞ்சு (ரூ 595)

3. ஐ ஷேடோ

ஐ ஷேடோ - கண் இமைகளுக்கு ஒரு லைட் கலர் ஷேட் தேர்வு செய்யுங்கள். டஸ்கி நிற சருமத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு போன்ற வைப்ரண்ட் கலர்கள் தேர்வு செய்யாமல், லைட்டான நிறங்களை இங்கிலிஷ் கலர்களை தேர்வு செய்யுங்கள். அதுதான் டஸ்கி நிறத்திற்கு நன்றாக இருக்கும். கிரீஸ் லைன் கலரும் சேர்த்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது இரண்டையும் நன்றாக ப்ளெண்ட செய்துகொள்ளுங்கள். அதனால் இரண்டும் தனித்தனியாகத் தெரியாமல் ஒரே மாதிரியாக தெரியும். 

POPxo பரிந்துரைப்பது - மேபெல்லைன் நியூயார்க் தி ப்ளஷட் நியூட்ஸ் ஐஷேடோ பாலேட் (ரூ 543)

4. ஐ லைனர்

Instagram

அடுத்து நீங்கள் பயன்படுத்த வேண்டியது ஐ லைனர். ஜெல் ஐ லைனர் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் இமைகளின் மேலும், கீழும் போட்டிருப்பதை போல், உங்கள் இமைகளுக்கு மேலேயும், இமைக்குள்ளும் போட்டுக்கொள்ளுங்கள். அது உங்கள் ஐ லைனர் அடர்ந்தாக தோற்றுவிக்கும். இது நம்ம வீட்டுப் பெண் லுக்கை அளிக்கும் . உங்கள் கண்களுக்கு அப்படி இரு இமைகளுக்கும் போடுவது பொருந்தினால், அதையே பின்பற்றுங்கள்.

5. மஸ்காரா

மஸ்காரா இமை முடிகளுக்கு மையிட்டு வளைத்து, ஒவ்வொரு முடியாக அழகாக வெளிப்படுத்த உதவும். கண்களைத் திறந்து கொண்டு கீழே பார்த்தவாறு மஸ்காரா தடவினால் கண்களுக்கு கீழே மஸ்காரா ஒட்டாது. 

POPxo பரிந்துரைப்பது - மேபெல்லைன் நியூயார்க் வால்யூம் எக்ஸ்பிரஸ் ஹைப்பர் கர்ல் மஸ்காரா (ரூ 217)

6. பௌண்டேஷன்

பார்த்தவுடன் உங்கள் நிறத்திற்கு ஏற்ற பௌண்டேஷன் நிறம் இதுதான் என்று அறிந்து கொள்வது கடினம். உங்கள் கண்ணங்களில் சிறிதளவு பௌண்டேஷன் கிரீம் தடவிப்பார்த்து, எது நன்றாக ப்ளெண்டாகி பொருந்துமோ அதை பயன்படுத்துங்கள். சில சமயம் மிகச் சரியான பௌண்டேஷன் நிறம் கிடைப்பது கடினமாக இருக்கும், அப்போது உங்கள் சரும நிறத்திற்கு ஒரு நிறம் கூடுதலாகவும், ஒரு ஷேட் நிறம் குறைவாகவும் தேர்வு செய்யுங்கள். இரண்டையும் கலந்து தடவினால் சரியான நிறத்தில் கச்சிதமான பௌண்டேஷன் கிடைத்துவிடும். இதையும் கொஞ்சமாக எடுத்து மேலிருந்து கீழாக தடவுங்கள். முகம் முழுவதும் நன்றாக ப்ளெண்ட செய்யுங்கள்.

மேலும் படிக்க - மேக்கப் பௌண்டேஷன் வகைகள் : உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது?

7. பவுடர்

பௌண்டேஷன் நன்றாக நிற்பதற்காக ட்ரான்ஸ்லூசன்ட் பவுடர் பயன்படுத்துங்கள். சில சமயம் நம்மையும் அறியாமல் நம் விரல்கள் முகத்தில் பட்டுவிடும். அந்த இடத்தில் இருக்கும் பௌண்டேஷன் கலைந்து மேக்கப் பாழாகிவிடும். அதைத் தவிர்க்க, ட்ரான்ஸ்லூசன்ட் பவுடர் பயன்படுத்துங்கள். இது நிறமே இல்லாத ஒரு பவுடர். அதனால் டஸ்கி சருமத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காம்பாக்ட் வாங்கி பயன்படுத்தினால் மிகவும் பளிச்சென்று தெரிய ஆராம்பிக்கும்.

POPxo பரிந்துரைப்பது - மேபெலைன் நியூயார்க் ஒயிட் சூப்பர் ஃப்ரெஷ் காம்பாக்ட் SPF 28 ( ரூ 128)

8. புருவம்

Instagram

முதலில், புருவ முடிகளை மஸ்காரா பிரஷ் கொண்டு அழகாக வாரி விடுங்கள். பின்பு புருவங்களை வரைவது போல தீட்டாமல், எங்கெல்லாம் முடி குறைவாக இருக்கிறதோ அங்குமட்டும் லேசாக நிரப்பினால் போதுமானது. 

மேலும் படிக்க - வளைந்த அடர் அழகிய புருவங்களை பெற சில தந்திரங்கள்!

9. காண்டோரிங்

புதிதாக மேக்கப் போடுபவர்கள் காண்டோரிங் என்றால் புதிதாக இருக்கும். இது இல்லாமல் இந்த காலத்து மேக்கப் இல்லைங்க. உங்கள் முக வடிவை அழகாக்க காண்டோரிங் போடுவது அவசியம். இது நாம் ஒரு டார்க் ஷேட் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் மூக்கிற்கு காண்டோரிங் செய்யுங்கள். கீழிருந்து மேல் நோக்கி தடவுங்கள், அது மூக்கின் மேலே அதிக நிறம் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும். சிலருக்கு அகலமாக மூக்கு இருந்தால், காண்டோரிங் செய்யும்போது சிறிதாக தோன்ற வைக்கலாம். 

10. ப்ளஷ்

டஸ்கி நிற முகத்திற்கு டார்க்கான அல்லது மிகவும் லைட்டான நிற ப்ளஷ்களை தேர்வு செய்யாமல், மிதமான நிறத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.டிப் - சிரித்தவாறு முகத்தை வைத்து, கண்ணங்களில் தடவுங்கள். 

POPxo பரிந்துரைப்பது - சுவிஸ் பியூட்டி பெக்ட் ப்ளஷர் (ரூ 235)

11. ஹைலைட்டர்

கிரீமி நிறத்தைத் தேர்வு செய்யலாம். மேலும் இதை கவனமாக ஹைலைட்டிங் இடங்களில் (மூக்கின் நேர் கோட்டில், தாடை வரிகளில் மற்றும் நெற்றியில் )மட்டும் லேசாக தடவினால் போதும். இல்லையென்றால் மிக அதிகமாகத் தோன்றிவிடும்.

POPxo பரிந்துரைப்பது - எல்.ஏ. கேர்ள் லூமினஸ் கிலோ இல்லூமினேட்டிங் கிரீம் (ரூ 750)

12. லிப்ஸ்டிக்

Instagram

இறுதியாக சரியான லிப்ஸ்டிக் தேர்வு செய்வதும் கடினமான ஒரு செயல்தான். டஸ்கி நிறத்திற்கு மாடரேட் நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்வு செய்யுங்கள். சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களை தவிர்த்து, உங்கள் நிறத்தை ஒத்த லிப்ஸ்டிக் அணிந்தால் அட்டகாசமாக இருக்கும்.எங்கள் லிப்ஸ்டிக் கையிடை கொண்டு உங்களுக்கான பர்ஃபெக்ட் லிப்ஸ்டிக்கை கண்டறியுங்கள்!

இதுவரை, உங்கள் டஸ்கி நிற சருமத்திற்கு, படிப்படியாக எப்படி மேக்கப் போடுவது என்று விளக்கமாகப் பார்த்தோம். இதை தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் ஒரு எக்ஸ்பெர்ட் ஆகிவிடலாம்! உங்கள் கைகளால் மேக்கப் போடுவதை தவிருங்கள், ஏன்னெனில் அது பாக்டீரியாவை உங்கள் முகத்திற்குள் புக வைத்துவிடும். எந்த நிறமாக இருந்தாலும், அதற்கான பொருத்தமான மேக்கப்பை தேர்வு செய்து கலக்குங்கள்!

 

கருப்பு அழகு – நீங்கள் கருப்பு நிறம் கொண்ட பெண்ணா? இந்த பதிவு உங்களுக்காகத்தான்!

டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர் கலரிங்

பட ஆதாரம்  - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!