logo
ADVERTISEMENT
home / அழகு
ஒளிரும் பார்ட்டி மேக்கப் லுக்கிற்கான தந்திரங்கள்!

ஒளிரும் பார்ட்டி மேக்கப் லுக்கிற்கான தந்திரங்கள்!

பல வகை மேக்கப் பார்த்து, சிலவற்றை உங்கள் சருமத்தின்மீது சோதித்து, இப்போது உங்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்களா? பார்ட்டி என்றாலே கொஞ்சம் மேக்கப் செய்வதில் அதிகப்படியான அக்கறை தேவைப்படும். இல்லையென்றால், விரைவில் மேக்கப் கலைந்து அசிங்கமாகிவிடும். உங்களுக்கான சில பார்ட்டி மேக்கப் தந்திரங்களை(party makeup tips) இங்கே தெரிந்து கொண்டு பார்ட்டியில் பிரபலங்களை போல் க்ளோ ஆகுங்கள்!

1. தினமும் போடும் மேக்கப்பை மறந்து விடுங்கள்

எப்போதும் போடுவது போல் அல்லாமல், சற்று வேறுபடுத்திப் பாருங்கள். உங்கள் சருமமும் தினமும் ஒரே மாதிரி இருக்காது!! புதிதாக ஒரு இடம் கருப்பாகவோ அல்லது சிவந்தோ காணப்படும். அப்போது அந்த  இடத்திற்கு தனி கவனம் தேவை. சில சமயம் பார்ட்டிக்கு நன்றாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற ஐயத்தில், எப்போதும்போலவே லிப்ஸ்டிக், ஐ ஷடோ போன்ற நிறங்களை மாற்றாமல் அதுவே பயன்படுத்துவீர்கள். சற்று சாதா நாட்களில் முன்னதாகவே மாற்றத்தை உங்கள் மேக்கப் செய்யும் முறையிலும், பயன்படுத்தும் நிறத்திலும் செய்து பாருங்கள். பிறகு பார்ட்டிகளில் புது ஆளாகத் தோன்றுவீர்கள். 

2. சருமத்தை தயார் செய்வதே முகத்திற்கான முதல் ப்ரைமர்

Shutterstock

ADVERTISEMENT

சருமம் இயற்கையாக மாசு இல்லாமல், மென்மையாக முகப்பரு இல்லாமல் இருந்தால், எந்த வகையான பார்ட்டி லுக்கிலும் க்ளோவாகி அசத்துவீர்கள். சருமத்தை மேக்கப்பிற்காக தயார் செய்யும்போது எப்போதும் ப்ரைமர் போட்டு மேக்கப் ஆரம்பிப்பார்கள். அதற்கு பதில் மாய்ஸ்ட்டரைசர் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் சருமம் மிளிரும்.

எக்ஸ்போலியேட் செய்யும் சரும பேட் பயன்படுத்தி, முகத்தை நன்றாக சுத்தம் செய்தபின் எந்த மேக்கப் போட்டாலும் அட்டகாசமாக க்ளோ ஆகும். இல்லையேல், இறந்த செல்கள் மீது மேக்கப் போட்டதுபோல பொலிவற்று இருக்கும்.

3. முகத்திற்கு வேறு பரிணாமத்தை தரும் கான்டூர்

பளிச்சென வெளிச்சத்தை உங்கள் முகத்தின் நடுவில் கொண்டுவந்தால், முகம் பொலிவாகத் தோன்றும். அப்படி உங்கள் முகத்தின் பரிணாமத்தை எடுத்துக்காட்ட கான்டூர் செய்யுங்கள். உங்கள் சரும நிறத்தை விட ஒரு ஷேட் குறைவான கன்சீலர் பயன்படுத்துங்கள். முகத்தில் உயரமான பகுதிகளில் இதைப் பயன்படுத்தி முகத்தின் வடிவத்தை அழகு படுத்தலாம்.

POPxo பரிந்துரைப்பது – வெட் என் வைல்ட் மெகாக்லோ கோண்டூரிங் பாலெட் (Rs. 499)

ADVERTISEMENT

4. வீங்கின கன்னங்களுக்கு ஃபேஸ் ரோலர்

Shutterstock

முகம் வீங்கி கன்னங்கள் வீங்கி இருந்தால் ஃபேஸ் ரோலர் பயன்படுத்தி உங்கள் கன்னம், தாடையில் உள்ள எலும்பின்மீது தேய்த்துக்கொள்ளுங்கள். கன்னம் வீங்கியிருப்பதை மென்மையாக சரி செய்யும் ஒரு தந்திரம்.

5. சரும நிறத்திற்கு ஏற்ற ஷேட்

ஷேட் பொருத்தம் பார்ப்பது எப்படி? உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் ஷேட் கண்டுபிடிப்பது மிகக் கடினமான வேலை. தாடை எலும்பின்கீழ் கழுத்தை ஒட்டி தடவிப்பாருங்கள். நிறம் மறைந்துபோனால் அதுதான் உங்களுக்கான சரியான சாய்ஸ்!அப்போதும் சிறிது குழப்பம் இருந்தால், இரண்டு மூன்று ஷேட்கள் வாங்கி, அவற்றைக் கலந்து பயன்படுத்துங்கள். 

ADVERTISEMENT

மேலும், வருடம் முழுவதும் நம் சருமத்தின் நிறம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால், உங்கள் சரும நிறத்தைவிட கூடுதலாக ஒரு நிறமும், குறைவாக ஒரு நிறமும் தேர்வு செய்து கொண்டால், நிறம் மாற்றத்திற்குத் தகுந்தவாறு கலந்து சரியாகப் பொருத்தி பயன்படுத்தலாம்.

6. முகம் இயற்கையாக க்ளோ ஆக

ஹைலைட்டர் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு புருவங்களுக்கு மத்தியில், கன்னங்களில், மூக்கின் மீது இப்படி, உங்கள் முக வடிவத்தை அழகாக வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்துங்கள்.உடனடியாக முகத்தில் ஒரு பொலிவுவர, மிஸ்ட் ஸ்பிரே முகம் முழுவதும் பயன்படுத்தலாம். மேலும், ஹலைட்டர் போல குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக பயன்படுத்தி பொலிவு பெறலாம்.

மேலும் படிக்க –ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்)

7. கன்சீலரின் சக்தி

கருவளையத்தையும், முகப்பருவையும் மறைக்கும் சக்தி கன்சீலருக்கு உண்டு. கன்சீலர் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், இரண்டு அடுக்கு பௌண்டேஷன் போட வேண்டி இருக்கும்.
மேலும், ஒரே ஒரு பௌண்டேஷன் போல ஒரு கன்சீலர் மட்டும் போதாது. நிறம் மங்கி இருக்கும் இடங்களில், பொலிவு அதிகம் உள்ளதை தேர்வு செய்ய வேண்டும். கண்களுக்கு கீழ் உள்ள பகுதி நன்றாக ப்ளெண்ட் செய்த பின், இந்த பொலிவுமிகுந்த கன்சீலர் பயன்படுத்தலாம்.
நிறத்தை சரி செய்வதில் வல்லவராக இருந்தால், பழுப்பு நிறத்திற்கு பீச் ஷேட்டும், ஆலிவ் நிற சருமத்திற்கு கோல்ட் அல்லது ஆரஞ்சு நிற ஷேட்டும் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

POPxo பரிந்துரைப்பது – எல்.ஏ. கேர்ள் புரோ கன்சீல் எச்டி – ஆரஞ்சு (Rs. 595), மேபெலீன் நியூயார்க் கன்சீலர் – லயிட் (Rs. 434)

8.விரல்களா? பிரஷ்ஷா?

Shutterstock

மேக்கப் ப்ளெண்ட் செய்ய விரல்களைப் பயன்படுத்தவும் / பிரஷ் பயன்படுத்தவும் என்று மாறி மாறி கேட்டு குழம்பி இருக்கிறீர்களா? பிரஷ் சருமத்தை முழுவதும் கவர்ந்து விடும்; அதுபோல விரல்கள் விரைவாக ப்ளெண்ட் செய்யும். மேலும், விரல்கள் பஞ்சு போன்ற தோற்றத்தைத் தரும், ஆனால் பிரஷ்கள் வரிகளை ஏற்படுத்தும். இதை தவிர, மேக்கப் ஸ்பான்ஜ் இன்னும் அழுத்தமான தோற்றத்தை அளிக்கும். ஆகையால், இதை உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப சோதித்து பயன்படுத்துங்கள்!

ADVERTISEMENT

9. செட்டிங் பவுடர் எப்படி செட் செய்வது?

பௌண்டேஷன் போட்ட பின் பயன்படுத்தும் செட்டிங் பவுடர் நிறமின்றி தேர்வு செய்யுங்கள். பவுடர் பயன்படுத்துவதால், மேக்கப் நீண்ட நேரம் சருமத்தில் கலையாமல் இருக்கும். மேலும், நிறமற்ற பவுடர் உங்கள் பௌண்டேஷன் நிறத்தை பிரதிபலிக்கும். 

POPxo பரிந்துரைப்பது – எல்.ஏ கேர்ள் எச்டி புரோ செட்டிங் பவுடர் – டிரான்ஸ்லுசென்ட் (Rs. 1000)

10. எந்த சருமத்திற்கு எந்த ப்ளஷ்?

Shutterstock

ADVERTISEMENT

பவுடர், கிரீம், ஸ்டெயின் என மூன்று விதமாக ப்ளஷ் கிடைக்கிறது. உங்கள் சருமத்தின் தன்மையைப் பொருத்து தேர்வு செய்யலாம். 

  • எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு, ஸ்டெயின் வகை ப்ளஷ்கள் நீண்ட நேரம் வியர்த்தாலும், எண்ணெய் வடிந்தாலும் முகத்தை விட்டு அகலாது. பயன்படுத்தும்போது கொஞ்சம் அளவே பயன்படுத்துங்கள் போதும். கறை போல எளிதாக சருமத்தில் ஒட்டிக்கொள்ளும்.
  • சாதாரண சருமத்திற்கு, கிரீம் ப்ளஷ்கள் பயன்படுத்தலாம். ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது. எந்த வகையான சருமத்திற்கும் கிரீம் ப்ளஷ் பொருந்தும். மேலும், பொலிவாக புத்துணர்வாகத் தோன்றும். 
  • வறண்ட சருமத்திற்கு, பவுடர் ப்ளஷ் சிறந்ததாக இருக்கும். 

11. உங்கள் சருமத்தின் நிறத்திற்கேற்ற ப்ளஷ் எது?

  • வெளிறிப்போன பழுப்பு நிற சருமத்திற்கு, லேசான பிங்க் நிறம் அழகான பொலிவைத் தரும்.
  • லேசான-மிதமான நிறமுள்ள சருமத்திற்கு, பீச் பிங்க் நிற ப்ளஷ் பொருத்தமாக இருக்கும். 
  • தங்க நிறம் அல்லது ஆலிவ் சருமத்திற்கு, அடர்ந்த பிங்க் நிறம் ஏற்றதாக அமையும். 
  • டார்க் நிற சருமத்திற்கு, பொலிவான ஆப்ரிகாட் நிற ப்ளஷ்கள் சரியான பொலிவைத் தரும். 

நிச்சயம்  இந்த தெளிவான, விளக்கமான குறிப்புகள் (டிப்ஸ் ) உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு ஸ்பெஷல் லுக்கில் ஜொலிக்கப் போகிறீர்கள் தானே!

மேலும் படிக்க – கெட் தி லுக் – ஐஸ்வர்யாவின் டஸ்கி ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் !

பட ஆதாரம்  – Shutterstock , Pexels

ADVERTISEMENT

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

23 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT