எங்கள் லிப்ஸ்டிக் கையிடை கொண்டு உங்களுக்கான பர்ஃபெக்ட் லிப்ஸ்டிக்கை கண்டறியுங்கள்

எங்கள் லிப்ஸ்டிக் கையிடை கொண்டு உங்களுக்கான பர்ஃபெக்ட் லிப்ஸ்டிக்கை கண்டறியுங்கள்

லிப்ஸ்டிக் மற்ற அழகுசாதன பொருட்களை விட (பெண்களால்) அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு ஒப்பனை தயாரிப்பாகும். ஏராளமான வகைகள், விருப்பங்கள், அமைப்புகள் மற்றும் வண்ணங்களை கருத்தில் கொண்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு சரியான லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். ஒப்பனையில் பயிற்சிபெற்ற வல்லுநர்களால் கூட இன்றைய  காலகட்டத்தில் ஒருத்தரின் தோனிக்கு ஏற்ப உதட்டுச்சாயத்தை தேர்வு செய்வது என்பது சவாலாக தான் கருதப்படுகிறது.

உங்கள் தோல் தோனிக்கு பொருந்தாத ஒரு தவறான உதட்டுச் சாயத்தை தற்செயலாக வாங்கி விட்டீர்களா? அல்லது அதற்கு அதிகம் செலவழித்து விட்டோமே என்று வருந்துகிறீர்களா? இதை தவிர்ப்பதற்காகவே நாங்கள் உங்கள் தோல் தோனிக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான உதட்டுச் சாயத்தை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்ற ஒரு எளிய லிப்ஸ்டிக் வழிகாட்டியை (lipstick guide) இங்கு தொகுத்துள்ளோம். உங்கள் தோலின் நிறத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக்கை இனி தைரியமாக தேர்ந்தெடுக்கலாம்!

தோல் தோனிக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை எவ்வாறு கண்டறிவது?

பிரகாசமான பகல் வெளிச்சத்தில் உங்கள் சருமத்தின் நிறத்தை சரிபார்க்கவும். உங்கள் மணிக்கட்டில் உள்ள நரம்புகளின் நிறத்தையும் உங்கள் கைகளில் ஓடும் நரம்புகளின் நிறத்தையும் சரிபார்க்கவும் அல்லது உங்கள் உடலில் ஒரு வெள்ளைத் துண்டை போர்த்தியபடி சூரிய ஒளியில் நின்று உங்கள் தோலின் நிறத்தை சரிபார்க்கவும். 

வெளிர் தோல் தொனி

Instagram

உங்கள் அடி தோலின் நிறம் நீலமாகவோ அல்லது அதன் சாயலில் இருந்தாள் அல்லது சூரிய ஒளியினால் உங்கள் தோல் விரைவாக எரிச்சலை உண்டாக்கி அதற்கு பிறகு சன் டான் ஆனால்  உங்களுக்கு ஒரு " கூல் அண்டர்டோன்  " (cool undertone) இருப்பதாக கருதப்படுகிறது.  லிப்ஸ்டிக் அணிவது உங்களுக்கு புதிதாக இருந்தாள் ஏதேனும் ஒரு பளபளப்பான இளஞ்சிவப்பு நிறம் கொண்ட லிப்கிளாஸ் அல்லது வெளிர் நிறங்கள் கொண்ட லிப் பாமை நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே நாள் முழுவதும் நீடித்து இருக்கும். லிப்ஸ்டிக் அணிவதில் நீங்கள் பழக்கம் உடையவர்களாக இருந்தால் உங்களுக்கு மிகவும் பொருத்தமான நிறங்கள்  பர்கண்டி, மோவ், கோகோ பிரவுன் மற்றும் சிவப்பு நிற சாயலில் வரும் அனைத்து நிறங்களும் ஆகும்.

 இதற்கு POPxo பரிந்துரைப்பது  - நைகா சோ மேட் லிப்ஸ்டிக் - மவ் மேனிக் 46 எம் (ரூ 319) , லக்மே அபிசொல்யுட்  மேட் மெல்ட்  லிக்விட் நிறம் - மெவ் மிக்ஸ்  (ரூ 398)

மாநிற தோல் தொனி

Instagram

மஞ்சள், பச்சை அல்லது ஒலிவ் நிற சாயலில் உங்கள் அடித்தோலின் நிறம்  இருந்தால் உங்களுக்கு " வாம் அண்டர்டோன்  " (warm undertone) இருப்பதாக கருதப்படுகிறது. அல்லது உங்கள் சருமம் மிக எளிதாக சன் டான் ஆகிவிட்டால் உங்களுக்கு  ஒரு வாம் அண்டர்டோன் இருப்பதாக கூறலாம். லிப்ஸ்டிக் அணிவது உங்களுக்கு புதிது என்றால், பீச்சி அல்லது ஆரஞ்சு லிப் கிளாசை முயற்சிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் அழகாக தெரிவீர்கள். மேலும் காப்பர் பிரவுன், பியூஷ்ச்சியா பிங்க், ப்ளம், கோரல்  போன்ற வண்ணங்கள் உங்கள் அம்சங்களை முன்னிலைப் படுத்தி உங்களை கவர்ச்சியாக காண்பிக்க உதவும்.

இதற்கு POPxo பரிந்துரைப்பது  - பேசஸ் வெயிட்லெஸ் மேட் பினிஷ் லிப்ஸ்டிக் - கோரல்  மேஜிக் 27 (ரூ 299) , சுகர் காஸ்மெட்டிக் நொதிங் எல்ஸ் மேட்டர்  05 கோரல் டைலமா (பிரகாசமான ஆரஞ்சு சிவப்பு),  (ரூ 499) 

நடுநிலை தோல் தொனி

Instagram

 மேல் கூறியிருக்கும் அனைத்து நிறங்களும் அதாவது மஞ்சள், நீலம், பச்சை அதன் சாயலில் உங்கள் நரம்புகள் அல்லது அடித்தொழின்  நிறம் இருந்தால் இதற்கு பெயர் “நியூட்ரல் அண்ட் டோன்” (Neutral undertone) ஆகும். இது ஒரு நடுநிலையான நிறம் என்று கூறலாம் ஆகையால் இந்நிறம் கொண்டவர்கள் எந்த ஒரு உதட்டுச்சாயத்தையும் எளிதில் பூசிக்கொள்ளலாம்.   மேலும் இவர்களின் அம்சங்களை எந்தவித நிறமும் எளிதில் முன்னிலைப் படுத்த உதவும்.

இதற்கு POPxo பரிந்துரைப்பது  - லோரியல் பாரிஸ் ரூஜ் சிக்னேச்சர் மேட் உதட்டுச்சாயம்   (ரூ 650), மெய்பிலீன் நியூயார்க் கலர் சென்சேஷனல் ரா கோகோ பவுடர் மேட் லிப்ஸ்டிக் (ரூ 337) 

லிப்ஸ்டிக் வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

  1.  உங்களுக்கு ஏற்ற ஒரு நிறத்தைக் கண்டால் மேலும் அது உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று தோன்றினால் அதை  நிச்சயம் நீங்கள் பயன்படுத்தலாம்.
  2. மேல் கூறியிருக்கும் குறிப்புகளின் படி எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.
  3. மேற்கொண்ட விதிகள் அனுபவமில்லாத ஆரம்ப கட்டத்தில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தும் பெண்களுக்கான அடிப்படைகள்.

மேலும் நீங்கள் இன்னும் குழப்பமாகவே இருக்கிறீர்கள் என்றால் கீழ் கூறியிருப்பதை பின்பற்றுங்கள் -

  • ஒரு அழகான வெளிர் தோல் இருந்தால் ஆழமான அல்லது எந்த ஒரு இருண்ட நிறமும் பொருத்தமாக இருக்கும்.உங்கள் அம்சங்களை முன்னிலைப்படுத்த உதவாத காரணங்களால்,இலகுவான நிறங்களை வெளிர் நிறம் கொண்டவர்கள் தவிர்க்கலாம்.
  • உங்களது தோனி ஒரு நடுத்தரமான நிறத்தில் இருந்தால் பிரகாசமான அல்லது நியூட் நிறங்கள் மற்றும் அதன் சாயல்கள்  அனைத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  • உங்களது தோல் ஒரு அடர் அல்லது இரண்டு நிறமாக இருந்தால் உங்கள் தோற்றத்தை முன்னிலைப்படுத்த இன்னும் ஒரு புலி அதிகமான இருண்ட நிறத்தை பயன்படுத்துங்கள். 

 

மேலும் படிக்க - பளபளப்பான அழகான உதட்டை பெற லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!

பட ஆதாரம் - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.