logo
ADVERTISEMENT
home / அழகு
மேக்கப் செய்யும் போது நடக்கும் தவறுகள்.. சரி செய்து கொண்டால் மேலும் ஒளிரலாம்..!

மேக்கப் செய்யும் போது நடக்கும் தவறுகள்.. சரி செய்து கொண்டால் மேலும் ஒளிரலாம்..!

முன்பெல்லாம் திருமணம் போன்ற வாழ்வில் ஒருமுறை நடக்கும் வைபவங்களுக்கு மட்டுமே மேக்கப் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் மேக்கப் என்கிற வார்த்தை இப்போதெல்லாம் பதின்ம பருவத்தின் ஆரம்பங்களில் இருந்தே தொடங்கி விடுகிறது.

இன்னும் நடனம், நாடகம் போன்ற விஷயங்களில் இரண்டு வயது குழந்தைகளுக்கும் மேக்கப் என்பது பரிச்சயம் ஆகி விடுகிறது. அது பரவாயில்லை. மற்றொருவர் மூலம் செய்யப்படும் மேக்கப் (make up) என்பதால் பிரச்னையில்லை.

ஆனால் இப்போது எல்லா விழாக்களிலும் மேக்கப் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது போல இருக்கிறது. திருமணத்தில் மணப்பெண் யார் என்பதை மணமேடை வரும் வரை உறுதி செய்ய முடியாத அளவிற்கு பேரழகு பெண்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். (wedding make up) கோயில் விழாக்களில் கூட மேக்கப்பை தவிர்க்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட மேக்கப் செய்யும் அனைவருமே தவற விடும் சில தவறுகளால் மொத்த மேக்கப்பும் அதற்கான செலவும் வீணாகி போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது. என்னதான் நீங்கள் மேக்கப் எக்ஸ்பர்ட் ஆக இந்த தவறுகளை அறியாமல் செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் சரி செய்து கொண்டு உங்கள் ஒப்பனையை மேலும் நேர்த்தியான ஒன்றாக மாற்றுங்கள்.

ADVERTISEMENT

Shutterstock

பொதுவாக அனைவரும் அதிகம் கவலைப்படுவது மேக்கப் போட்ட சில மணி நேரங்களில் எண்ணெய்ப்பசை வழியும் முகமாக மாறும் போக்கைப் பற்றித்தான். இது தட்பவெப்ப நிலை காரணமாகவே ஏற்படுகிறது. இதனால் நமது வயது மேலும் கூடியது போன்ற தோற்றங்கள் உருவாக்கலாம். இதன் காரணமாக திக்கான காம்பேக்ட் பவுடர் மேட் பாவுண்டேஷன் மற்றும் செட்டிங் பவுடர்களை பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் முகத்தில் ஒப்பனை சரியாக அமையாத தோற்றம் ஏற்படலாம்.

இதனை தவிர்க்க கனமான காம்பேக்ட் பவுடர்களை (compact powder) நீக்கி விட்டு ஷீர் பவுண்டேஷன் (sheer foundation) ஈரத்தன்மை கொண்ட ஹைலைட்டர்ஸ் மற்றும் பிபி க்ரீம்களை உபயோகிப்பது நல்ல மாற்றத்தையும் அழகான தோற்றத்தையும் உங்களுக்கு தரும். காரணம் உங்கள் சருமம் இயல்பாகவே பனித்துளி போன்ற ஈரத்தன்மை உடன் இருக்கும். மேட் அல்ல. ஆகவே உங்கள் இயல்பை நீங்கள் பிரதிபலிப்பதுதான் சிறந்தது.

ADVERTISEMENT

 

Pinterest

நமது தோற்றத்தில் மிக முக்கியமானது நமது கண்கள். நமது சாதாரண பார்வைகள் ஒரு மாயத்தை உருவாக்கும் தன்மை கொண்டதாக இருக்க இது உதவுகிறது. அதற்கு பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துவது காஜல் எனப்படும் பென்சிலைத்தான். இதனுடன் அதிக கால உறவுகள் பலருக்கும் இருந்திருக்கும்.

ADVERTISEMENT

இதனை நீங்கள் பயன்படுத்தும் போது அதிக அடர்த்தியாக பயன்படுத்துவது தடிமனான கோடாக மாற்றுவது எல்லோருடைய முகத்திற்கும் பொருந்தாது. ஒரு மிதமான கோடு அழகை வெளிக்காட்ட போதுமானதாக இருக்கும். மேலும் ஸ்மோக்கி லுக் பெற ஸ்மாட்ஜ் செய்வது கூடுதல் அழகு சேர்க்கும். அதிகமான கருவளையங்கள் வர கண்மை ஒரு வெளிக்காரணம். இதனை நீக்க இரவு உறங்குமுன் உங்கள் மேக்கப்பை நீக்கி விட்டு உறங்க வேண்டும்.

Youtube

பவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும் பலரும் செய்யும் தவறு என்னவென்றால் தங்களின் நிறத்தை விட ஒருபடி அதிகமான நிறத்தை தேர்ந்தெடுப்பார்கள். இது அவர்களை அதிக நிறம் உடையவர்களாக காட்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அது சாம்பல் நிறம் போல காட்டப்படும். எனவே பவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது உங்கள் மணிக்கட்டுகளில் தடவி பார்க்காமல் தாடை பகுதியில் தடவி பார்த்து டெஸ்ட் செய்து வாங்குவதே சிறந்தது.

ADVERTISEMENT

உங்கள் புருவங்கள் உங்கள் தோற்றத்தில் முக்கிய மாற்றங்களை செய்கின்றன. மெலிதான புருவங்கள் உடையவர்கள் ஐ ப்ரோ பென்சில் மூலம் அதனை சரி செய்து கொள்ளுங்கள். மெல்லிய புருவங்கள் பொதுவாக உங்களை வயதானவர் போன்ற தோற்றத்தை தரும். அடர்த்தியான புருவங்கள் தான் இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

Pinterest

அளவுக்கதிகமான மேக்கப் என மற்றவர் நம் காதுபட சொல்வதை தவிர்க்க வேண்டியதும் அவசியம்தான் இல்லையா. அதற்கு பிங்க் நிற ப்ளஷ்ஸ் பிங்க் நிற லிப்ஸ்டிக் மீது பயன்படுத்துங்கள். ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கிற்கு பீச் ப்ளஷ் , சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு பெரி ப்ளஷ் இப்படியான பொருத்தங்களில் நீங்கள் அணிய வேண்டும். இதுவே மேக்கப்பின் முக்கிய விதி என கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் சருமத்தின் மீது எந்த அக்கறையும் கொள்வதில்லை. ஆகவே உங்கள் சருமம் வறண்ட சருமம் என தெரிந்தால் அதற்கு தேவையான மாய்ச்சுரைஸைர்களை போட்டு சருமத்தை சரி செய்ய வேண்டும். வறண்ட சருமத்தில் எந்த மேக்கப்பும் நிலைத்து நிற்காததால் ஒரு தேக்கமான மேக்கப் லுக்கில் நீங்கள் உங்கள் மேக்கப்புடன் ஒட்டாமல் தனிப்பட்டு தெரிவீர்கள். கவனம்.

 

Pinterest

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

08 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT