ஜெஸியாக இருந்து தற்போது ஜானுவாக எல்லோருடைய மனதிலும் நிலைத்துவிட்ட த்ரிஷா, எப்படித்தான் இத்தனை வருடங்களாக அதே அழகுடன் ஜொலிக்கிறாரோ தெரியவில்லை என்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்! அவருடைய ஆரோக்கியமான டயட்டும், ஒர்க்கவுட்டும் தான் அவரை எப்போதும் அருமையாக இருக்க வைக்கிறது என்று சொல்லலாம். சிறு வயதில் இருந்தே இயற்கையான அழகை கொண்ட திரிஷா, சரியான தருணங்களில் சரியான மேக்கப் போடுவது ஒரு கலை என்று கூறுகிறார்.அதுமட்டுமில்லாமல், அவருடைய தனித்துவமான உடை அலங்காரத்திற்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. ஜெஸிக்கு பிறகு, புடவைகள் பிரபலம் ஆகியதை போல், படம் முழுவதும் மஞ்சள் குர்தாவில் வளம் வந்து அனைவரையும் அந்த நிறத்தில் ஒரு குர்தா வாங்கி ஜானுவாக மாறும்படி செய்தவர் திரிஷா! அவர் வெஸ்டர்ன்/இந்தியன் எந்த உடை அணிந்தாலும் , அவரின் பியூட்டிக்கு ஏற்ற கச்சிதமான மேக்கப்பை அணிவது அவரின் தனித்துவம்!
சரி, இந்த பண்டிகை நாட்களில் நீங்களும் திரிஷாவை போல பாரம்பரிய உடைகளில் அதற்கு தகுந்த மேக்கப்பில் ஜொலிக்க , அவருடைய சமீபத்திய பாரம்பரிய லூக்கின் (traditional makeup trisha) மேக்கப் உத்திகளை இங்கு நாங்கள் அளித்திருக்கிறோம்! எப்படி நாமும் ஒளிரலாம் என்று பார்க்கலாம்.
1. கலர் கரெக்டர் (color corrector)
முதலில் ஒரு கலர் கரெக்டரில் (ஆரஞ்சு/பீஜ் /மஞ்சள் ) இருந்து ஆரம்பிக்கலாம். இந்த கரெக்டர் பயன்படுத்தி கண்களுக்கு கீழே உள்ள கருமையையும், முகத்தில் ஏதாவது கரும் புள்ளிகள் இருந்தால், அவற்றின் மீது லேசாக தடவி பிலென்ட் செய்யுங்கள்.
POPxo பரிந்துரைப்பது – எல்.ஏ. கேர்ள் புரோ கன்சீல் எச்டி – ஆரஞ்சு (ரூ 595) , NYX நிபுணத்துவ ஒப்பனை HD போட்டோஜெனிக் கன்சீலர் வாண்ட் – 10 மஞ்சள் (ரூ 525)
2. பௌண்டேஷன்(foundation)
உங்கள் நிறத்திற்கேற்ற பௌண்டேஷன் தேர்ந்தெடுத்து அதைப் ஒரு பிரஷ் மூலம் முகத்தில் தடவுங்கள். உங்கள் சருமம் சமமாக தெரிவதற்கு பௌண்டேஷன் உதவும்.எந்த நிற பௌண்டேஷன் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
3. கன்சீலர்(concealer)
கண்களுக்கு கீழே உள்ள பகுதிக்கு உங்கள் நிறத்திற்கு ஏற்ற கன்சீலர் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.இதை ஒரு ப்லெண்டிங் ப்ரஷ் அல்லது ஸ்பாஞ் பயன்படுத்தி நன்றாக ப்லெண்ட் செய்யுங்கள்.
POPxo பரிந்துரைப்பது – மேபெல்லைன் நியூயார்க் ஃபிட் மீ கன்சீலர் (ரூ 331), மேபெல்லைன் நியூயார்க் இன்ஸ்டன்ட் ஏஜ் ரிவைண்ட் கன்சீலர் (ரூ 650)
4. பவுடர்
அடுத்ததாக, கன்சீலரும், பௌண்டேஷனும் செட் ஆவதற்கு பவுடர் பயன்படுத்துங்கள். பவுடரும் உங்கள் நிறத்திற்கு ஏற்ற நிறமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நொடிகளில் ஒரு பிரகாசமான தோற்றத்தை பெற POPxo பரிந்துரைப்பது – கலரெஸென்ஸ் ஹை டெபினிஷன் , ஐவரி பீஜ் (ரூ 403).
5. ஐ ஷேடோ
த்ரிஷா இந்த வெள்ளை நிற ஆடைக்கு நூட் நிறத்தில் ஐ ஷேடோ பயன்படுத்தி இருக்கிறார். உங்கள் கண்களின் வடிவங்களை வெளிப்படுத்த லேசான பிரவுன்/பிங்க் நிற ஐ ஷேடோ பயன்படுத்தலாம். அது உங்கள் ஆடையின் நிறத்திற்கு அல்லது லிப்ஸ்டிக்கின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மேலும் லைட் நிற ஐ ஷேடோவை இமைகளின் கீழ் பகுதியில் தடவுங்கள். இந்த இரண்டு நிறங்களும் நன்றாக ப்லெண்ட் ஆகுமாரு லேசாக தடவி விடுங்க.
டிப் – இதை துவங்கும் முன், ஒரு வெள்ளை நிற ஐ ஷேடோவை பூசிவிட்டு , நிறங்களை பூசினால் இன்னும் பளிச்சென்று தெரியும்!
மேலும் படிக்க – ஐ ஷேடோவை எவ்வாறு பூசுவது மற்றும் அதன் வெவேறு விதங்களை அறிய
6. ஐ லைனர்
த்ரிஷா தன் கண்களுக்கு விங் வரையாமல், இமைகளில் மேலேயும், கீழேயும் ஒரு சாதாரண ஐ லைனர் தோற்றத்தை அளித்திருக்கிறார் . அவருடைய சிறிய கண்களுக்கு அது நன்றாக தோன்றும். உங்கள் கண்களின் தன்மையை பொறுத்து நீங்கள் உங்கள் மேல் இமைகளில் விங் வரைந்து அசத்துங்கள்.
7. மஸ்காரா
இமைகளை நன்றாக வளைத்துவிடுங்கள். பின்னர் ஒரு நல்ல மஸ்காரா பயன்படுத்தி இமை முடிகளை அழகுபடுத்துங்கள். கீழ் இமைகளில் உள்ள முடிகளுக்கும் மஸ்காரா பயன்படுத்த மறக்காதீர்கள்.
8. ப்ளஷ் மற்றும் ஹயிலைட்டர் (Blush & highlighter)
கண்ணங்களுக்கு மேல் நோக்கியவாரு, கண்ணத்தில் உள்ள எலும்பின்மீது ப்ளஷ் பயன்படுத்துங்கள். இதுவும் நீங்கள் உடுத்தும் உடைக்கு தகுந்தவாறு இலகுவான நிறத்தில் பயன்படுத்துங்கள்.மேலும், இந்த தோற்றத்தில் முக்கியமான பகுதி, இந்த ஹயிலைட்டர் பகுதி ஆகும். உங்கள் மூக்கின் மேல், தாடை வரிகளில் மற்றும் கன்னங்களில் சிறிது ஹயிலைட்டரை தடவி முடிக்கவும்.
POPxo பரிந்துரைப்பது – வெட் என் வைல்ட் கலர் ஐகான் ஓம்ப்ரே ப்ளஷ் (ரூ 299), வெட் அண்ட் வைல்ட் மெகாகிலோ ஹயிலைட்டிங் பவுடர் – ப்லோஸ்ஸோம் கிலோ (ரூ 374)
9. லிப் கிரையான்
பார்ட்டி, அதுவும் இரவு பார்ட்டிக்கு ரிச்சான சிவப்பு நிற லிப்ஸ்டிக் பிரமாதமாக இருக்கும். த்ரிஷா பிங்க் நிற லிப்ஸ்டிக் அணிந்து, அதே நிறத்தில் பொட்டும், பிங்க் நிற கல் வைத்த தோடும் அணிந்து ஒரு சின்ன மேட்சிங் செய்திருக்கிறார்.இதுபோல் நீங்களும் உங்கள் மேக்கப், உடை மற்றும் அணிகலன்கள் உடன் நிறங்களை பொருத்தம் பார்த்து அசத்தலாம்!
டிப் – பண்டிகை / பார்ட்டி என்றால் உங்கள் லிப்ஸ்டிக்கின் மேல் ஒரு லிப் கிளாசை பூசும்போது அது இன்னும் கூடுதல் அழகை தர உள்ளது!
10. புருவங்கள்
த்ரிஷா தன் புருவங்களை உட்புறம் அடர்த்தியாக, வெளிப்புறம் சன்னமாக இருக்குமாறு காட்டி இருக்கிறார் . இந்த உடைக்கு தகுந்தவாறு, கருப்பு நிறம் அடர்த்தியாக தெரியாமல், புருவங்கள் அடர்ந்து இயற்கையாக இருப்பதுபோல வரைந்திருக்கிறார். பிரமாதம்! நீங்களும் உங்கள் புருவங்களுக்கு ப்ரோ வேக்ஸ் பயன்படுத்துங்கள், எங்கு குறைபாடு இருக்கிறதோ அங்கு மட்டும் தடவி நிரப்புங்கள். அவ்வளவுதான். பார்ட்டி லுக் ரெடி!
POPxo பரிந்துரைப்பது – கிளாம்கால்ஸ் ஐ ப்ரோ வாக்ஸ் (ரூ 620)
நீங்கள் அறியவேண்டிய சில மேக்கப் குறிப்புகள்
Pexels
த்ரிஷாவைப் போன்ற பார்ட்டி மேக்கப் எப்படி எளிதாக செய்வது என்று பார்த்தோம். மேலும், நீங்கள் வேலைக்கு சென்று விட்டு அப்படியே ஒரு பார்ட்டிக்கு போக வேண்டும் என்றால், சில குறிப்புகளை கடைபிடித்தால், பார்ட்டியில் பிரகாசிப்பீர்கள்.
- உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க உங்கள் மேக்கப்பை ஒரு ப்ரைமரில் இருந்து ஆரம்பிக்கவும். ப்ரைமர் உங்கள் பௌண்டேஷன் நீண்ட நேரம் கலையாமல் இருக்க உதவும்.
- நீண்ட நேரம் கலையாமல் இருக்கும் பௌண்டேஷன் கிரீம் பயன்படுத்தலாம்.
- ஹைலைட்டர், ப்ளஷ், ஐ ஷடோ ஆகிய மூன்றும் இருக்கும் ஒரு சிறிய பேலெட்டை(pallette) பயன்படுத்துங்கள். பகல் நேரத்தில், ப்ளஷ் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள். இரவில், ஹயிலைட்டரும் சேர்த்து பயன்படுத்துங்கள்.
- இரவு பார்ட்டிக்கு செல்லும் முன் முதலில், உங்கள் முகத்தில் எங்கெல்லாம் மேக்கப் குறைந்து காணப்படுகிறதோ, அங்கு கன்சீலர் பயன்படுத்தி லேசாக டச்அப் செய்யுங்கள்.
- பின்னர், பவுடர் பயன்படுத்துங்கள். பௌண்டேஷன் மீண்டும் போட தேவை இல்லை.
- இப்போது, ஹைலைட்டர் கொண்டு முகத்தை பொலிவாக்குங்கள்.
- ஐ லைனர் இன்னும் அதிகமாக விங் வடிவில் போட்டு பளிச்சிட செய்யுங்கள்.
- மேலும், லிப்ஸ்டிக்கை சிவப்பு அல்லது அடர் நிறத்தில் தடவுங்கள். எளிதில் இரவு நேர மேக்கப் லுக் கிடைத்துவிடும்.
பகல் மேக்கப்பை இன்னும் பிரைட் ஆக்கி எப்படி இரவு பார்ட்டியில் பிரகாசிப்பது என்றும் தெரிந்துகொண்டோம். அப்புறம் என்ன? பிரபலங்களை போல் நீங்களும் அடுத்த பார்ட்டியில் ஜொலிக்கலாம்.
மேலும் படிக்க – பாரம்பரிய ஆடைகளிடம் உங்களை ஈர்க்கும் ஸ்னேஹாவின் 11 அசத்தலான தோற்றங்கள்! மேலும் படிக்க – பாரம்பரிய ஆடைகளுடன் மேட்சாக எடுத்துச் செல்ல சில சிறந்த கிளட்ச் பைகள் !!
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!