தினமும் அலுவலகத்திற்கு, பார்ட்டி, திருமணம், ஒரு சந்திப்பு, மேலும் ஒரு ஸ்பெஷல் விழா போன்ற இடங்களுக்கு சிறிதாவது மேக்கப் போடாமல் போவதில்லை. என்ன உடை அணிந்திருந்தாலும், ஒரு ஐ லைனர், லிப்ஸ்டிக், கொஞ்சம் ப்ளஷ் போன்றவையாவது போட்டுகொண்டு ஒரு பொலிவோடுதான் செல்கிறோம். ஆனால், பெரும்பாலும் அந்த மேக்கப்பை நீக்காமலேயே தூங்கி விடுகிறோம். மேக்கப் நீக்காமல் தூங்குவதால், சருமம் வறண்டு, சுருக்கங்கள் ஏற்படும். மேலும், முகப்பருக்கள் வருவதற்கும் காரணமாகும். கண்களில் எரிச்சல், தொற்று வரவும் காரணமாகும்.ஆகையால் மேக்கப்பை நீக்குவது அவசியம் ஆகும்!
அடர்ந்த நிறமுடைய லிப்ஸ்டிக்கை நீக்க அல்லது முழு கவரேஜ் மேக்கப்பை நீக்க, எண்ணெய் பசை உள்ள மேக்கப் நீக்கிதான் (makeup remover) நன்றாக வேலை செய்யும்.அப்படி பயன்படுத்தும் மேக்கப் ரிமூவர் உங்கள் சருமத்திற்கு நன்மைகள் செய்யக்கூடியதாகவும் இருந்தால்? ஜோஜோபா எண்ணெய் (jojoba oil) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம் இந்த எண்ணெய்தான் உங்கள் சருமத்திற்கு அற்புதங்கள் செய்யக்கூடியது. உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், ஊட்டம் அளிப்பதாகவும், நல்ல உணர்வைத் தருவதாகவும் இருக்கும். இயற்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால், உலகம் முழுவதும் பெண்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.
வீட்டிலேயே ஜோஜோபா எண்ணெய் மேக்கப் ரிமூவர் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. ஜோஜோபா எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் மேக்கப் ரிமூவர்
இதை மிகவும் எளிதாக இரண்டே இரண்டு பொருள்களை வைத்து செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
- ஆர்கானிக் ஜோஜோபா எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- இரண்டு பொருட்களையும் நன்றாக ஒரு பாட்டிலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன் நன்றாக பாட்டிலை குலுக்கிக் கொள்ளுங்கள்.
- ஒரு பஞ்சு வைத்து முகத்தில் உள்ள மேக்கப் மீது மென்மையாக தடவி விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.
- மென்மையான, சுத்தமான, வறண்ட துணியை கொண்டு முகத்தை துடைத்து கொள்ளுங்கள்.
- மேக்கப் சுத்தமாக நீங்கும்வரை சுத்தம் செய்யுங்கள். அவ்வளவுதான்!
Shutterstock
2. ஜோஜோபா எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் மேக்கப் ரிமூவர்
இது உங்கள் சருமத்திற்கு ஈரத்தன்மையை தரும். மேலும், கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத்தையும் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்:
- ஜோஜோபா எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் ஈ எண்ணெய்
- லேவெண்டேர் அவசியமான எண்ணெய் அல்லது ஆர்கானிக் ஸ்வீட் பாதாம் எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாட்டிலில் ஜோஜோபா எண்ணெய், அவசியமான எண்ணெய் சம பங்கு எடுத்து கலந்து கொள்ளுங்கள்.
- பின்னர் அதில் ஒரு சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறை பாட்டிலை நன்றாக குலுக்கிய பின், ஒரு கால் தேக்கரண்டி மட்டும் எடுத்து முகத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு சுத்தமான துணியால் அல்லது பருத்தி பஞ்சினால் துடைத்து எடுங்கள்.
- வைட்டமின் ஈ இருப்பதால் கண்களின்மீது பயப்படாமல் பயன்படுத்தலாம்.
- தண்ணீர் படாமல் இந்த பாட்டிலை வைத்திருந்தால் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
எவ்வளவு எளிதாக நீங்களே ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்தி மேக்கப்பை நீக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்களா? அதிக செலவில்லாமல் இயற்கையான பொருட்களை வைத்து அற்புதமான எண்ணெய்யில் உங்கள் மேக்கப்பை நீக்கலாம் அல்லவா! உங்கள் சருமமும் ஆரோக்கியமாகவும் இருக்கும் , பிரகாசமாகவும் தோன்றும்.
மேக்கப்பை எளிதாக நீக்க சில குறிப்புகள்
Shutterstock
1. மென்மையாக மேக்கப்பை நீக்க வேண்டும்
அழகாக தோன்ற மிகவும் யோசித்து கவனமாக மேக்கப் போடுகிறோம். அதுபோல மேக்கப் போட்டபின் அதை கவனமாக நீக்க வேண்டும். சருமத்திற்கு எரிச்சல் தராமலும், சருமம் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. கண்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு தேவை
மஸ்காரா மற்றும் ஐ லைனர் காய்ந்தபின் நீக்குவது மிகவும் கடினம். கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். மென்மையான ஒரு பருத்தி பேட் அல்லது நல்ல சுத்தமான பருத்தி துணியை பயன்படுத்துங்கள். கண்களை மூடிய நிலையில், மேக்கப் நீக்கியை பயன்படுத்தி கவனமாக நீக்குங்கள்.
3. படுக்கைக்கு அருகில் மேக்கப் நீக்கியை வைத்துக் கொள்ளுங்கள்
மிகவும் சோர்ந்து வரும்போது, அப்படியே தூங்கத்தான் தோன்றும். படுக்கைக்கு அருகில் மேக்கப் நீக்கியை வைத்துக் கொண்டீர்களேயானால், நிச்சயம் பயன்படுத்துவீர்கள்.
4. பேபி வைப்ஸ் பயன்படுத்தாதீர்கள்
குழந்தைகளின் சருமம் மென்மையாகத் தானே இருக்கிறது, அதை ஏன் முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்கிறீர்களா? குழந்தையின் சருமத்தில் உள்ள மேக்கப் நீக்க தயாரிக்க பட்ட பொருள் அல்லவே பேபி வைப்ஸ்!
5. கூந்தல் ஆரம்பிக்கும் பகுதியை மறக்காதீர்கள்
பெரும்பாலும், கண்களையும், லிப்ஸ்டிக் ஆகியவற்றை மட்டும் நீக்கிவிடுவோம். முகத்தின் மேலே நெற்றியில் கூந்தல் ஆரம்பிக்கும் இடத்தில் மேக்கப் இருந்தால், அது மயிர்கால்களை பாதிக்கும். அந்த இடங்களில் உள்ளமேக்கப்பை நீக்க மறக்காதீர்கள்.
மேலும் படிக்க – த்ரிஷாவின் அசத்தலான பாரம்பரிய லுக்கை பெறுவதற்கான 10 படிகள் மற்றும் யுத்திகள்! மேலும் படிக்க – ‘நோ – மேக்கப்’ மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்
பட ஆதாரம் – Pexels,Pixabay
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!