கருப்பு அழகு-நீங்கள் கருப்பு நிறம் கொண்ட பெண்ணா?இந்த பதிவு உங்களுக்கானது! | POPxo

கருப்பு அழகு – நீங்கள் கருப்பு நிறம் கொண்ட பெண்ணா? இந்த பதிவு உங்களுக்காகத்தான்!

கருப்பு அழகு – நீங்கள் கருப்பு நிறம் கொண்ட பெண்ணா? இந்த பதிவு உங்களுக்காகத்தான்!

பெரும்பாலான மக்கள் அழகு என்றாலே அது சிவந்த நிறம் தான் என்று மனதில் ஆழமாக பதிந்து வைத்திருகின்றனர். பெரும்பாலான இடங்களில், இதனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் நிலவுகின்றது. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, கருமை மற்றும் மாநிறம் கொண்டவர்கள், தங்கள் மனதிற்குள் சில தால்வுமனப்பன்மையை இதனால் ஏற்படுத்திக் கொள்கின்றனர், அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சிவந்த சருமம் இருப்பவர்கள், சற்று நிறம் மங்கினால், அதே கவர்ச்சியான தோற்றத்தோடு இருப்பார்களா என்பது சந்தேகமே. அதே சமயம், மாநிறம் மற்றும் கருமை நிறம் கொண்டவர்கள், எந்த நேரத்திலும், தங்களுக்கான இயற்கையான அழகோடு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் கூறப்போனால், இந்த தமிழ் மண்ணின் உண்மையான நிறம் கருமைதான்.

ஒருவரின் நிறம் என்பது அவர் வாழும் தட்ப வெட்ப புவியியல் சூழலை பொருத்தும், மரபு பொறுத்துமே ஏற்படுகின்றது. மேலும், நிறம், வெறும் நிறம் மட்டுமே. அதனை கொண்டு யாரும் எதையும் அதிகமாகவோ, குறைவாகவோ செய்து விட முடியாது.

நீங்கள் மாநிறம் அல்லது கருமை நிறம் (dark skin) கொண்டவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. தன்னம்பிக்கையோடு மேலும் படியுங்கள்!

 

அறிவியல் கூறும் கருமை நிறத்தின் உண்மைத் தன்மை

அனைவரது சருமத்திலும் மெலனின் என்கின்ற நிறமி உள்ளது. இதுவே ஒரு சருமம் கருமையானதாகவும், மாநிறமாகவும், சிவந்த நிறமாகவும் இருப்பதை தீர்மநிகின்றது. இந்த அளவுகோலை இயற்க்கை நிர்ணயிகிநிட்றது. பூமத்திய ரேகைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மெலனின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் சருமம் கருமையாகவும், மாநிறமாகவும் இருக்கும்.

ஆனால் குளிர் பிரதேசங்களில் வெயில் அவ்வளவாக ஊடுருவாது. இதனால் ஊதா கதிர்வீச்சின் அளவும் குறைவாகவே இருக்கும். மெலனின்னின் முக்கிய வேலை, ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தையும், உடலையும் பாதுகாப்பது. குளிர் பிரதேசங்களில் வெயில் குறைவாக இருப்பதால், இதனால் ஊதா கதிர்வீச்சும் குறைவாக இருப்பதால், மெலனின் அதிகம் தேவைப்படாது. இதனால் சருமம் சிவந்த நிறத்தில் இருக்கும். மேலும், மரபு ரீதியாகவும், ஒருவரின் சருமத்தின் நிறம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால் எவ்வளவு சிவந்த நிறமானவராக இருந்தாலும், வெப்பம் நிறைந்த பகுதியில் வசிக்கும் போது, ஊத கதிர்வீச்சின் தாக்கம் தொடர்ந்து அவர் மீது இருந்தால், அவரது நிறமும் ஓரளவிகாயினும் மாற வாய்ப்பு உள்ளது.

Shutterstock
Shutterstock

கருமை மற்றும் சிவந்த சருமம் என்ற ஏற்றத்தாழ்வு உண்டாக முக்கிய காரணாம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை. ஆனால் இன்று இது மிகப் பெரிய அளவு பூதாகரமாக இன்று வெடித்துள்ளது என்றால், அதற்கு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தான். 2௦ - 3௦ ஆண்டுகளுக்கு முன் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெண்கள், மற்றும் ஆண்கள் எந்த நிற வேறுபாடு இன்றி நடித்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பம், ஒருவரின் உண்மையான தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்கின்ற சலுகையை தந்துள்ளது. இதனால், ஒருவர் எப்படி இருந்தாலும், அவரை நல்ல சிவந்த நிரமுடையவராகவும். அழகான தோற்றம் உடையவராகவும் மாற்றி, ஒரு பொய்யான விம்பத்தை உருவாக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் தந்திரம் தெரியாமல், பல இளம் வயதினர், சிவப்பாகவும், மெல்லிய உடல் வாகுமே அழகு என்று மயங்கி, தவறான முயற்சிகளை எடுக்கத் தொடங்கி விடுகின்றனர். அதனால், நீங்கள் ஊடகங்களில் ஒருவரின் வசீகரமான தோற்றத்தை பார்த்து, நாமும் அப்படி மாற வேண்டும் என்கின்ற என்னத்தை விட்டுவிடுங்கள்.

வணிகத்தின் சூழ்ச்சி

உலகில் சில பெரும் நிறுவனங்கள் தங்களின் வணிக நோக்கத்திற்காக இப்படியான ஒரு மாயை விம்பத்தை இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களுக்கிடையே திணிக்கின்றனர். அதனால், அவர்கள், பலன் ஏதும் கிடையாது என்று தெரிந்தாலும், இது வெறும் ரசாயனம் மட்டுமே என்று தெரிந்தாலும், பல அழகு (beauty) சாதன பொருட்களை, கவர்ச்சியான நடிகைகள் மற்றும் மடிகர்களை வைத்து விளம்பரப்படுத்தி, இளம் வயதினரை குழப்பத்தில் தள்ளுகின்றனர். ஆனால் உண்மையில் நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களுக்கு பிறப்பில் இயற்க்கை கொடுத்த நிறமே நிரந்தரமானது. உங்கள் பணம் விரையம் ஆவது மட்டுமே மிச்சம்.

Instagram
Instagram

கருமை நிறமே ஆரோக்கியமானது

நீங்கள் சிவந்த நிறம் வேண்டும் என்று பல ரசாயனங்களை உங்கள் சருமத்தில் பூசத் தொடங்கினால், காலபோக்கில் உங்களுக்கு சரும புற்றுநோய், சருமத்தில் எரிச்சல், தடிப்பு ஒன்ற உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சிவந்த நிறம் கொண்டவர்களை விட, கருமையான நிறம் மற்றும் மாநிறம் கொண்டவர்களின் சருமம் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. அதனால், அவர்களுக்கு சருமத்தில் நோய் தொற்று எளிதாக ஏற்படாது. மேலும் அவர்களால் எந்த தட்ப வெட்ப சீர்தோஷ நிலையிலும் திடமாக வாழ முடியும். ஆனால் சிவந்த சருமம் கொண்டவர்களால், அப்படி வாழ முடியாது.  அதனால் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாது, கருமையான நிறம் உங்கள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு என்று கூறலாம்.

கருப்பே உண்மையான அழகு

இன்று திரைப்படங்களிலும், ஊடகங்கலயும் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் மற்றும் நடிகர்கள் மாநிறம் கொண்டவர்களாகவும் கருமை நிறம் கொண்டவர்களாகவும் தான் இருகின்றனர். ஆனால். மேலே குறிப்பிட்ட படி அவர்கள், திரையில் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக பல ஒப்பனைகள் செய்யப்பட்டு, தொழில்நுட்ப உதவியோடு அப்படி சிவந்த தோற்றம் பெறுகின்றனர். இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கருமை நிறமே உண்மையில் அழகானது. சிவந்த நிறம் வசீகரமானது என்றாலும், ரசிக்கும் அழகும், பார்த்ததும் சிறிதாக புன்னகைக்கும் அழகும், கருமை நிறத்திற்கே உள்ளது. மேலும் கூறப்போனால், பிரபலமான நடிகைகள் சிலரை நீங்கள் நேரில் பார்த்திருந்தால் தெரியும். குறிப்பாக நந்திதா தாஸ், கஜோல், தீபிகா படுகோன், அசின், ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரா, போன்றவர்கள் மாநிறம் மற்றும் சற்று கருமை நிறம் கொண்டவர்களே.

இனி நீங்கள் உங்களது நிறத்தை கண்டு பெருமை பட வேண்டும். உங்களது உண்மையான அழகு உங்கள் சிந்தனையிலும், புன்னகையிலுமே, நிறத்தில் இல்லை! 

 

 

மேலும் படிக்க - டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர் கலரிங்

பட ஆதாரம் - Instagram , Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.