வளைந்த அடர் அழகிய புருவங்களை பெற சில தந்திரங்கள்!

 வளைந்த அடர் அழகிய புருவங்களை பெற சில தந்திரங்கள்!

சமாந்தாவின்  எல்லா புகைப்படங்களிலும்  நான் அவருடைய ஒப்பனை மற்றும் ஆடைகளை விட அவரின் முகத்தில் இருக்கும் பிரகாசத்தை ரசித்திருக்கிறேன். இதில் ஒரு பங்கு  இவருடைய அன்பார்ந்த நெஞ்சமாக இருந்தாலும் இனொன்று இவரின் புருவம்தான்! (என்னை பொறுத்தவரை..)


என் முகத்தில் நான் பெரிதாக மேக்கப் எதுவும் போடுவது இல்லை என்றாலும், அடிப்படையில் ஒரு பாவுண்டேஷன் மற்றும் காஜல் எனக்கு தேவையானது! ஆனால் இது பூசியும் என் முகத்தில் அந்த பிரகாசம் வரைவில்லையே என்று நான் அதிகம் யோசித்தது உண்டு.


samantharuthprabhuoffl BrAt-emAXjF


இதுபோல் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள்  என்றால், உங்கள் புருவத்தை கவனியுங்கள்! அங்கு தான் இருக்கிறது எல்லா வித்தைகளும். ஒரு நாள் நான் தினம் பூசும் பாவுண்டேஷனையும் பூசாமல் என் புருவத்தை மட்டுமே சரி  செய்து ஒரு இலகுவான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை அணிந்து சென்றேன். அன்று தான் நான் உணர்ந்தேன் புருவங்கள் எவ்வளவு பேசுகிறது என்று!


உங்கள் புருவங்களை  நீங்கள் சரி செய்வது அவசியம். சிலருக்கு அது அழகாக அடர்த்தியாக இருக்கும். நான் இலகுவான புருவங்களை பற்றி சொல்லுகிறேன்...


இதை சரி செய்ய நாங்கள் உங்களுக்கு சில உத்திகளை அளிக்கிறோம்.


ப்ரோ டிஃபைநர் (brow definer)  -


உங்கள் புருவங்களை ஒரு வரையறுக்கப்பட்ட தெளிவான தோற்றத்தில் காண்பிக்க இது உங்களுக்கு உதவும். இதில் ஒரு பக்கத்தில் இருக்கும் பிரஷை பயன்படுத்தி உங்கள் புருவங்களை ப்ரஷ் செய்யுங்கள். இது உங்கள் புருவங்களுக்கு ஒரு வடிவம் அளிக்கும். ப்ரஷ் செய்வதால் உங்கள் புருவங்களில் இருக்கும் பொடுகு நீங்கிவிடும். இதற்கு மேல், மறுபக்கம் இருக்கும் ப்ரோ பென்சிலை பயன்படுத்தி உங்கள் புருவ வடிவிலேயே 'மிதமான' புருவத்தை வரையுங்கள். இல்லையென்றால் அது செயற்கை ஆக தெரிய வாய்ப்புள்ளது.


உங்கள் புருவங்கள் பளிச்சென்று பல மணி நேரம் நீடிக்க இந்த ப்ரோ டிஃபைநர் பயன்படும்.


wet n wild brow definer


POPxo பரிந்துரைக்கிறது - வெட் அண்ட் வைல்ட் அல்டிமேட் ப்ரோ  (Rs.399)


ஐ-ப்ரோ டிண்ட் (eyebrow tint) -


டிண்ட் என்பது ஒரு வித முடி சாயம் ஆகும். உங்கள் தலை முடியில் டை (dye) தடவுவது  போல், உங்கள் புருவங்களிலும் செய்து கொள்ளலாம். இதை அப்ளிகேட்டரால் (applicator) உங்கள் புருவ வடிவத்தில் பூசிவிடுங்கள். சில நிமிடங்களிற்கு பிறகு இதை எடுத்து விடலாம். இது சில நாட்கள் உங்கள் புருவங்களில் தங்கும். மேலும் இது உங்கள் புருவங்களுக்கு ஒரு அழகிய அடர்த்தியான வடிவம் குடுக்க உதவும்.உங்கள் புருவங்களில் அடர் முடி இல்லை என்றால் அதை சரி செய்ய இதுவே ஒரு சிறந்த வழி!


எங்கள் டிப் - ஒரு கோண (angular) பிரஷால் இதை தடவினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


maybelline brow tint


POPxo பரிந்துரைக்கிறது - மேபீலின் நியூ யார்க் கேள் டிண்ட் ஐ ப்ரோ லைனர்  (Rs.531)


ஐஷாடோ -


ஆம்! இந்த வித்தையையும் செய்து பாருங்கள். ஒரு ஐ ப்ரோ பிரஷால் உங்கள் புருவத்தின் நிறத்திற்கு ஏற்ற ஒரு ஐ ஷாடோ நிறத்தை  பூசுங்கள் ( அதன் வடிவத்திலேயே..) ஒரு நச்சுரல் தோற்றத்திற்கு இதை மிதமாக தடவுவது அவசியம்.சாம்பல் அல்லது கருப்பு ஷெட் ஐஷாடோ  உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.


eye brow cake


POPxo பரிந்திருரைக்கிறது - மிஸ் க்ளர் ஐ ப்ரோ கேக் (Rs.396)


ஐ-ப்ரோ பென்சில் -


கடைசியாக... நாம் காலம் காலமாக பயன்படுத்தும் ஐ ப்ரோ பென்சில் ! இந்த பென்சிலில் உங்கள் புருவங்களின் வடிவத்தில் மிதமாக வரையுங்கள். இதில் கருப்பு அல்லது ஒரு அடர் பழுப்பு (dark brown) நிறம் உங்களுக்கு கை குடுக்கும்.


eyebrow pencil


POPxo பரிந்திருரைக்கிறது  - மேபீலின் நியூ யார்க் ப்ரோ க்ரீம் பென்சில் (Rs.169)


மேலும், இயல்பாகவே ஒரு நல்ல  அடர்த்தியான புருவத்தை பெற .. தினமும் இரவில் படுக்கும் முன்பு, விளக்கெண்ணெய்யை தடவ வேண்டும்.


உங்கள் முகத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் காண்பிக்க இதுவே ஒரு சிறந்த எளிமையான தந்திரம்!


பட ஆதாரம் - பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.