எத்தனையோ முகப்பூச்சைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஏன் இதைக் கலக்கு, அதையும் சேர்த்து கலக்கு என்று கலக்கி, பயன்படுத்திய பின் எப்படியும் சிறிது மீந்து வீணாகிவிடும். மேலும் நாம் நினைக்கும் பொருட்களில் ஏதாவது ஒன்று நம்மிடம் இருக்காது. அடுத்தமுறை சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நிறைய பயன்களை இழக்க நேரிடுகிறது. இதற்கான தீர்வாக பல பல ரகங்களில் முகத்திற்கு பயன்படும் வகையில் தாள் மாஸ்க் (ஃபேஸ் சீட் மாஸ்க்) கிடைக்கிறது. அவற்றுள் ஐந்து முக்கிய பயனுள்ள மாஸ்க்களைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளலாம். இது பண்டிகை நாட்களில் அல்லது ஏதேனும் ஒரு முக்கிய நாளில் நொடிகளில் ஜொலிக்க உங்களுக்கு நிச்சயம் உதவும்!
1. ப்ளூ பெர்ரி ஃபேஸ் மாஸ்க் (Blueberry face mask)
கொரியன் ஃபேஸ்ஷாப் பிராண்டின் ப்ளூ பெர்ரி மாஸ்க் அழகான பாக்கெட்டில், ப்ளூபெர்ரி நிறத்தில், ப்ளூபெர்ரி வாசனையிலேயே அட்டையில் அணைத்து குறிப்புகளுடன் கிடைக்கிறது.
இந்த மாஸ்கின் சிறப்புகள்:
ப்ளூபெர்ரி எசென்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது ஃபேஸ் ஷீட் மாஸ்க்(face sheet mask), சருமத்திற்கு குளிர்ச்சியை தருகிறது, சருமத்தை இறுக்கமாக வைப்பதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட மாஸ்க், இது முகத்தில் உள்ள ஈரத்தன்மையை பாதுகாக்கிறது, சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது, முகத்தில் எண்ணெய் பதத்தை குறைக்கிறது, குழந்தை போன்ற மென்மையான சருமத்தையும், முகப் பொலிவையும் தரும், சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தாது.
எந்த தோல் வகைக்கும் பொருந்தும் இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.
1. ப்ளூ பெர்ரி ஃபேஸ் மாஸ்க் (Blueberry face mask)
ரைஸ் வாட்டர் சருமத்தில் இருக்கும் துளைகளை இறுக்கமாக்கி உங்கள் சருமத்தை மிளிரச் செய்யும்.வைட் டீ சருமத்திற்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும், சரும சுருக்கங்களில் இருந்தும் மற்றும் நிறம் மாறிய இடங்களையும் பாதுகாக்கும்
நைகா பிராண்ட் சரும தாள் மாஸ்கின் தனிச் சிறப்புகள்:
இதன் அனைத்து மாஸ்க்குகளும் இரண்டு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.அதனால் இரண்டு பொருள்களின் நன்மைகளும் கிடைக்கும்.சருமத்தில் உள்ள பிரச்சனைக்கு ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக அதன் செயலை செய்யும். இந்த மாஸ்க் நூறு சதவிகிதம் இயற்கை பொருளான இந்தியாவில் விளைந்த பொருட்களை வைத்து தயாரானது .பருத்தி போன்ற சவுகரியமான மென்மையான உணர்வைத் தரும் இந்த மாஸ்க்கில், ஈரத்தன்மையை அதிகமாக தக்கவைத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது.
வறண்ட சருமத்திற்கு ஏற்ற இந்த மாஸ்க் உங்கள் மந்தமான முகத்தை நொடிகளில் பிரகாசமாக மாற்றி விடும்.
2. ரைஸ் வாட்டர் மற்றும் வைட் டீ ஃபேஸ் மாஸ்க் (Rice water face mask)
டி ட்ரீ(tea tree) என்பது தேயிலை மரம் ஆகும். சரும பராமரிப்புக்காக இயற்கையில் விளைந்த ஒரு மூலிகைதான் இது. இன்னிஸ்பிரீ பிராண்ட் இந்த மூலிகையை பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் தயாரித்துள்ளது.
இந்த மாஸ்க் தரும் நன்மைகள் :
உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. இந்த மாஸ்கில் ஜெஜு க்ரீன் காம்ப்லெக்ஸ் உள்ளது. அதில் க்ரீன் டீ, டேங்கெரைன்(tangerine), கேக்டஸ், கமேலியா இலைகள், ஆர்ச்சிட்ஸ், போன்றவை இருப்பதால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.மூன்று அடுக்கு தாள் உள்ளதால் நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைக்க உதவும். அதனால் இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் முகம் வறண்டு போகாது. இதை எளிதாக எடுத்துவிடலாம்.
இது உங்கள் சருமத்தில் உள்ள அனைத்து அசுத்தங்களையும் அழிக்கிறது மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்த தீர்வாகும்.
3. டீ ட்ரீ ஃபேஸ் மாஸ்க் (Tea tree face mask)
ஆலிவ், ஃபேஸ்ஷாப் பிராண்டின் மற்றொரு ஃபேஸ் மாஸ்க். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
இது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைக்க உதவும்.உங்கள் சருமத்தின் வேர்வரை ஆலிவின் சத்துக்கள் அதிகம் இறங்கும்,இயற்கையாக பிழிந்து, எண்ணெய் எடுத்து உருவாக்கிய பிராண்ட். இது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மாஸ்க். இதுஇயற்கையான பொருட்களும், ஆலிவ் எண்ணெய் பசையும் கொண்டது.
இது வறண்ட, காய்ந்த சருமத்திற்கு ஏற்ற இந்த மாஸ்க் பார்லரில் செலவழிக்கும் உங்கள் நேரத்தையும் பணத்தையும் திறம்பட மிச்சப்படுத்துகிறது!
4. ஆலிவ் ஃபேஸ் மாஸ்க் (Olive face mask)
மிராபெல்லே பிராண்ட் இந்திய சருமத்திற்கும், இந்திய சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு அழகுப் பொருட்களை தயாரிக்கிறது. உடனடியாக சருமத்திற்கு நல்ல நிறமும், பொலிவும் தரக்கூடிய ஒரு சிறந்த பிராண்ட் ஆகும் . உயர்ந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட இந்த மாஸ்கினால் சருமத்திற்கு நல்ல ஈரப்பதமும், நிறமும் உண்டாகும்.
சிறப்பம்சங்கள்:
இந்த லைம் மாஸ்க் எந்த விதமான சருமத்திற்கும் பொருந்தும். 100 சதவிகிதம் பருத்தியால் செய்த மாஸ்க் இது. அதிகமான ஈரப்பதம் இருப்பதால்
சரும ஆரோக்கியத்தை மேன்படுத்தும். பிரகாசமான மற்றும் தெளிவான சரும நிறத்தை அளிக்க இருக்கிறது .
ஆண், பெண் என இருபாலரும் , எல்லா சரும வகையினரும் இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
5. லெமன் ஃபேஸ் மாஸ்க் (Lemon face mask)
பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் தக்காளியைப் பயன்படுத்தி ஒரு மாஸ்க் தயாரித்திருக்கிறது டோனிமோலி பிராண்ட்.
இதன் சிறப்பம்சங்கள்:
அமினோ அமிலம் நிறைந்திருக்கும் என்றதால் சருமத்தில் உள்ள கோடுகளையும், சந்துகளையும் நிறைத்து மென்மையாக வைக்கும். சருமநிறத்திற்கு முற்றிலும் ஆரோக்கியமான பொலிவைத்தரும். சருமத்திற்கு எந்த எரிச்சலையும் தராது என்று நிரூபித்துளார்கள். சருமத்திற்கு அதிகமான நெகிழ்ச்சியையும், சுத்தத்தையும் ஏற்படுத்தும். இந்த பிராண்டில் டால்க்(talc), பென்ஸோபினோன்(benzophenone), வண்ணச்சேர்க்கைகள், மற்றும் பராபென்ஸ்(parabens) போன்ற சருமத்தை கெடுக்கும் ரசாயனங்கள் இல்லை!!இந்த டொமேடோ மாஸ்கில் வைட்டமின் ஈ மற்றும் தக்காளியின் சாறு இருப்பதால், அழுக்குகளை நீக்கி, சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
பயணங்களில் ஒரு தக்காளியை எடுத்துச் செல்வது சாத்தியமற்றது என்பதால் இந்த மாஸ்க் உங்களுக்கு உதவியாக இருக்கும்!
ஃபேஸ் பேக்கில் இத்தனை குணங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! பொதுவாக இந்த மாஸ்க்களின் பயன்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நிலைத்திருக்கிறது. இனி உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாஸ்க்கை தேர்வு செய்து விரைவாக பயனடையுங்கள்.
6. டொமேடோ ஃபேஸ் மாஸ்க் (Tomato face mask)
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!