அழகு என்பது உண்மையிலேயே கடவுள் கொடுத்த மிகவும் ஒரு நல்ல பரிசு. விலங்குகளின் ஆண்களின் தோற்றம் தான் அழகாக இருக்கும். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஆண் மயிலிற்கு தான் தோகை இருக்கும்.
பெண்களின் அழகு(Beauty) என்றால் என்ன?
ஆயில், டிரை, நார்மல் மற்றும் காம்பினேஷன் ஸ்கின்னிற்கான பராமரிப்பு
அழகான(Beauty) ஆரோக்கியமான முக அழகை(Beauty) பெற செய்ய வேண்டியவை
முகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செய்யகூடியவை மற்றும் கூடாதவை
தினசரி மேக்கப்பிற்கான சிறந்த முறைகள்
அழகு என்பது உண்மையிலேயே கடவுள் கொடுத்த மிகவும் ஒரு நல்ல பரிசு. விலங்குகளின் ஆண்களின் தோற்றம் தான் அழகாக இருக்கும். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஆண் மயிலிற்கு தான் தோகை இருக்கும். அது போல ஆண் சிங்கத்திற்கு தான் சூரியனைப் போன்ற படர்ந்து விரிந்த கம்பீர தோற்முடைய முடி இருக்கும். ஆனால் மனிதர்களில் கடவுள் இயற்கையாகவே பெண்களை அழகாக(Beauty) படைத்துள்ளார். பெண்கள் என்றாலே அழகு தான். வெள்ளையாக ஒல்லியாக இருப்பது மட்டும் தான் அழகு கிடையாது.
கருப்பாக குண்டாக இருப்பதும் அழகு தான். புராண கதைகளில் புலவர்கள் போற்றிய பெண்கள் அப்படிதான் இருந்தார்கள். பெண்களின் துணிச்சல், தைரியம், பொருளாதார மேம்பாடு அனைத்தும் அழகை சார்ந்தது தான். ஆயினும் வெளித்தோற்றமும் முக்கியம் தானே. வெளியில் நாலு இடத்திற்கு செல்லும் பெண்கள் தங்கள் முகங்களை அழகாக வைத்துக்கொள்வதும் அவசியம் தானே. பெண்களை எவ்வாறு தங்களை அழகு படுத்திக்கொள்வது என்பதை இங்கு பார்ப்போம்.
Also Read: கவர்ச்சிகரமான உதடுகளை பெற டிப்ஸ் (Tips For Attractive Lips)
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கின் தோற்றம் இருக்கும். எல்லா பெண்களுக்கும் ஒரே விதமான ஸ்கின் இருக்காது. அது நாம் பிறக்கும் போதோ அல்லது நாம் உண்ணும் உணவின் தன்மையை பொருத்தோ மாறுபடும்.
சிலருக்கு ஆயில் ஸ்கின்னாக இருக்கும். ஆனால் அதற்கு என்ன விதமான பராமரிப்பு செய்யலாம் என தெரியாமல் இருப்பீர்கள். சிலருக்கு டிரை, சிலருக்கு இரண்டும் கலந்த கலவையாக இருக்கும். சிலருக்கும் நார்மல் ஸ்கின், உங்களுக்கு பிரச்சணையே இல்லை. சரி உங்கள் சருமத்தை எவ்வாறு பரமரிப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.
Also Read: Common Skin Problems And Their Solution In Tamil
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் நீண்ட நாள் இளமையாக இருக்கும் தோன்றத்தை இயற்கையாகவே உங்கள் சருமம் பெற்றிருக்கும். ஆனால் இதனை பராமரிப்பது தான் மிகவும் சிரமான வேலை. ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் கடைகளில் கிடைக்கும் எல்லா மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். எண்ணெய் பசை இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அடிக்கடி முகம் கழுவுங்கள். அதற்காக குளிர்ந்த தண்ணீரோ, சூடான தண்ணீரிலோ முகம் கழுவுவதை தவிர்த்து மிதமான வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை ஸ்க்ரப் பயன்படுத்துங்கள். இயற்கை உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய டிப்ஸ் முல்தாணி மெட்டி. அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைத்தரும். எனவே முல்தாணிமெட்டியை பேஸ் மாஸ்க் போன்று பயன்படுத்துங்கள். எலும்பிச்சை பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவலாம். முக்கயமாக எப்போதும் முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் சீக்கிரம் வெடிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பருக்கள் வராமல் பார்த்துகொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் குடியுங்கள், பழங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எண் உணவுகளை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது மிகவும் நல்லது.
ஒளிரும் சருமத்திற்கான உதவிக்குறிப்புகள்
வரண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இந்த குளிர் காலம் தான். குளிர் காலத்தை முகத்தில் அதிகப்படியான வரட்சி ஏற்படுவதால் முகம் மிகவும் சுருங்கி பளபளப்பின்றி வரட்சியாக காட்சியளிக்கும். இவர்களுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய வரபிரசாதம் பால். பாலை கொண்டோ அல்லது பாலைடையே கொண்டே முகத்தில் பேஸ் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். பாலை கொண்டு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
பாலை தண்ணீருடன் கலந்து அதாவது 1கப் பால் என்றால் 3கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கொஞசம் தேன் கலந்து முகத்தை அடிக்கடி கழுவி வந்தாலே போதும். முகம் பளபளப்பாக மாறிவிடும். அல்லது பச்சை பாலை பஞ்சில் தொட்டு அடிக்கடி முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாக மாறும். இதனை தொடர்ந்து சருமத்தில் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவோடு பளிச்சென்றும் பருக்களின்றி இருக்கும். பாலில் கொஞ்சம் ஒட்ஸை பொடியாக அரைத்து முகத்தில் ஸ்கரப் போன்று அப்ளை செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவோடு காணப்படும். சருமத்துளைகள் சுத்தமாகி பருக்கள் வருவதும் தடைபடும்.
வறண்ட சருமத்திற்கு வைட்டமின்களையும் படியுங்கள்
இது இவர்களுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய கிப்ட் என்றே சொல்லாம். எல்லா கால நிலைக்கும் இவர்கள் சருமம் ஒத்துப்போக பழகிகொள்ளும். இருந்தாலும் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். இவர்களுக்கு இருக்கும் பிரச்சணை எந்த ஒரு க்ரீமையும் பராமரிப்பையும் வரம்பிற்கு மீறி எடுக்கக்கூடாது. சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறை ஸ்க்ரப் செய்துக்கொள்ளலாம். ஆலிவ் ஆயில் முகத்தில் தடவிவர நல்ல பொலிவு கிடைக்கும். பழசாறுகளை அதிகம் பருகளாம். குறிப்பாக விட்டமின் பி இருக்கும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். கேரட் மிக சிறந்த பலனை தரும்.
அதிக கூடுதலான க்ரீம், சோப், டோனர் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் பருக்கள் மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. மிதமான பராமரிப்பே உங்களுக்கு சிறந்த பலனைத்தரும். கூடுதல் கவனம் அவசியம் தேவைப்படாது.
முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு அகற்றுவது என்பதையும் படியுங்கள்
காம்பினேஷன் ஸ்கின் என்பது வரண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் இவ்விரண்டையும் கொண்ட கலவையாகும். இந்த ஸ்கின் டைப் உள்ளவர்கள் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாகும். இந்த சருமம் உடையவர்களில் முகத்தில் T போன்று வடிவத்தில் நெற்றி மூக்கு வாய்க்கு கீழே உள்ள பகுதிகள் எண்ணெய் பசையுடன் இருக்கும். கண்ணம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் வரண்ட நிலையில் இருக்கும். இந்த சருமம் எளிதில் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. சரி இதை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.
ஈரப்பதத்தை பாதுகாக்கும் டோனரை பயன்படுத்துங்கள். லெமன் மற்றும் தேன் சேர்ந்த கலவையை முகத்தில தடவுங்கள். அடிக்கடி வீட்டில் செய்யும் கோம் மேட் ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். இரவு படுக்க போதும் முன்பாக முகத்தை நன்றாக தண்ணீரால் கழுவிய பிறகு தூங்க செல்லுங்கள். முடிந்தால் ரோஸ் வாட்டரை கொண்டு கழுவுங்கள். தேன் அடிக்கடி பயன்படுத்துவது நல்ல பலனை தரும். முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியோடும், ஈரப்பதத்தோடும் வைத்து கொள்ள தயாராகுங்கள்.
முடிந்த வரை மேக்கப் இல்லாத தருணங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பேஷ் பேக் போடுவது நல்லது. ரசாயணம் அதிகம் இல்லாத பழங்கள் காய்கள் கொண்ட பேஸ் பேக் போடுவது நல்லது. வாழைப்பழம் சருமத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ஆரஞ்சு பழச்சாறை முகத்தில் தடவலாம்.
அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுதல் அவசியம். நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போது எல்லாம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். சோப் அதிகம் பயன்படுத்த வேண்டாம். அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் தேவையில்லாத அழுக்குகள் தங்காமல் வெளியே வந்துவிடும்.
வேது என்றதும் பயந்து விடாதீர்கள் இது சலித்தொள்ளைகாக சொல்லவில்லை. வாரம் ஒரு முறை நீங்கள் வேது பிடிப்பதால் முகத்தில் இருக்கும் தேவையில்லாத அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் வெளியேரும். வேது பிடிப்பதால் முகத்தில் இருக்கும் துவாரங்கள் ஓபன் செய்யப்படுகின்றன. முகத்தில் இருக்கும் துளைகள் வழியாக தேவையில்லாத அழுக்குகள் வெளியேறி முகம் நல்ல ஆரோக்கியத்தை பெறும்.
முகம் மற்றும் சரும பொலிவிற்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைப்பது அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான். அதிகமான தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை சரிசெய்யப்படுகின்றது. முகம் எப்போதும் பார்ப்பதற்கு பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
வேலைக்கு அல்லது காலேஜிற்கு கிளம்பும் போது அதிகப்படியான மேக்கப்(Beauty) தேவைப்படாது. குறைந்த அளவிளான அதுவும் மிதமான மேக்கப் மிகவும் அவசியம்.
முதலில் உங்க ஸகின் கலருக்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்ந்தெடுத்து ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்துக்கொள்ளுங்கள். கன்சீலர் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
பவுண்டேஷன் பயன்படுத்தியிருப்பதால் பவுடர் அதிகம் தேவைபப்டாது. நீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவராக இருந்தால் சிறிது பவுடர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
ஐ லைன்னர் கம்மியாக பயன்படுத்துங்கள். கண்கள் சிறிதாக இருப்பவர்கள் காஷல் அதிக அடர்த்தியாக பயன்படுத்தலாம். கண்ணிற்கு மேலே அடர் பழுப்பு அல்லது வெளிர் நிற ஐ ஷேடோவை பயன்படுத்தலாம்.
மிதமான அல்லது உடைக்கு ஏற்ப லிப்ஷ்டிக்கை பயன்படுத்தலாம். அதிக டார்க் கலர் பயன்படுத்த வேண்டாம. லிப் லைனர் மட்டும் கூட சில நேரங்களில் பயன்படுத்தலாம்.
எனினும் மேக்கப் என்பது நாங்கள் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இல்லை. உங்கள் முகத்திற்கு ஏற்ப நல்ல பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம் இது உங்கள் விருப்பமே.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo