இன்று பலருக்கும், இளம் வயதிலேயே வயதான தோற்றம் (face aging) வருகின்றது. கூறப்போனால், 3௦ வயதிலேயே முகத்தில் தோல் சுருங்குவது, மெல்லிய கோடுகள் தோன்றுவது (அறிகுறி), சருமம் ஆரோக்கியமற்று போவது என்று இன்னும் பல. இத்தகைய பொலிவற்ற தோற்றம் ஒருவரின் தன்னம்பிக்கையை குறைத்து விடுகிண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
எனினும், நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று உங்கள் முக அழகை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதும் இருக்கும். ஆனால், எளிதான முயற்சியில், உங்கள் வீட்டில் இருந்தே நீங்கள் இழந்த அழகை மீண்டும் பெறலாம் .
உங்களுக்கு உதவ, இங்கே சில பயனுள்ள அழகு குறிப்புகள் :
1. முட்டை பேஸ் பாக்
- ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்
- இதனுடன் கெட்டி பால் மாற்றும் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர், சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறை செய்தால், சில நாட்களிலேயே நீங்கள் எதிர் பார்த்த அழகான மற்றும் இளமையான முகம் கிடைத்து விடம்
2. காரட் மற்றும் உருளைக்கிழங்கு பேஸ் பாக்
Pexels
- தேவையான அளவு கேரட் மற்றும் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளவும்
- இதனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- பின்னர் நன்கு பசைபோல மசித்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது பேகிங் சோடா மற்றும் மஞ்சள்த் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
- இந்த கலவையை முகத்தில் தடவி, 3௦ நிமிடம் வரை விட்டு விடவும்
- பின்னர் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்
3. தயிர் பேஸ் பாக்
- தேவையான அளவு தயிரை எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்
- மேலும் இதனுடன் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- ஒரு வைட்டமின் இ காப்ச்யுளை சேர்த்துக் கொள்ளவும்
- அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை முகத்தில் தடவி 3௦ நிமிடம் வரை விட்டு விடவும்
- பின்னர் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
4. பன்னீர் பேஸ் பாக்
Pexels
- இரண்டு தேக்கரண்டி, பன்னீர், சிறிது எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் க்ளுசிரின் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
- வேண்டும் என்றால், தூங்க செல்வதற்கு முன் இதனை முகத்தில் தடவி விட்டு, ஒரு இரவு முழுவதும் விட்டு விடலாம்
- பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இது நீங்கள் எதிர் பார்த்த பலனை விரைவில் தரும்
5. வாழைப்பழ பேஸ் பாக்
- ஒரு நன்கு பழுத்த சிறிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது பன்னீர் / ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- அனைத்தையும் நன்கு கலந்த பின் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர், சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் எதிர் பார்க்கலாம்
6. பப்பாளி பேஸ் பாக்
Shutterstock
- சிறிது நன்கு பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்
- இதனுடன் சிறிது பால் மற்றும் தேன் கலந்து நன்கு பசை போல செய்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்
- மேலும் நீங்கள் இந்த பேஸ் பாக் செய்து, முகத்தை கழுவிய உடனே, நல்ல மாற்றத்தை உடனடியாக உங்கள் முகத்தில் காணலாம்.
- இது போன்று, தக்காளி, சப்போட்டா, ஆப்பிள் மற்றும் தர்பூசணி போன்ற பழங்களை பயன்படுத்தலாம். நல்ல பலனைத் தரும்.
மேலும் படிக்க – பூக்களை பயன்படுத்தி சரும அழகை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் படிக்க – பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!