மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள் - (Makeup Tips In Tamil)

மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள் - (Makeup Tips In Tamil)

மேக்கப் / ஒப்பனையை பெண்கள் இன்றைக்கு அதிகமாக விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வேலை நீங்கள் ஒப்பனையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யோசித்தால் அதற்கு விளக்கம் அளிக்கிறோம் நாங்கள்! உங்கள் முகத்தில் இருக்கும் அந்த தீராத கரும் வளையங்கள், சுருக்கங்கள், பருக்கள் இவை அனைத்தையுமே மறைக்கும் மந்திரம் மேக்கப்பில் உள்ளது. ஆம் !  இதற்காக நீங்கள் இரண்டு - மூன்று அடுக்கு ஒப்பனை பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. குறைவான மேக்கப்பில் (makeup) எளிமையாகவும் அழகாகவும் உங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். 


உதாரணத்திற்கு , உங்கள் லிப்ஸ்டிக்க்கை பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதை நீங்கள் எளிதில் பயன்படுத்தி பயனடையலாம். இதற்கு நீங்கள் ஒரு ப்ரோ (Pro) ஆக இருக்க தேவையில்லை . இவை அனைத்திற்கான குறிப்புகளையும் (tips) நாங்கள் உங்களுக்கு அளிக்க இருக்கிறோம்!


ஒப்பனை குறிப்புகள்


பவுண்டேஷன் மற்றும் ப்ளஷ் பூசுவதற்கான குறிப்புகள்


கண் ஒப்பனை மற்றும் ஐ பிரௌ டிப்ஸ்


கவர்ச்சிகரமான உதடுகளை பெற டிப்ஸ்


கன்ஸீலிங் மற்றும் கண்டோரிங் டிப்ஸ்


மேக்கப் ப்ரஷ்ஷின் விவரங்கள்


பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்


ஒப்பனை குறிப்புகள் (Makeup Tips)


சரி! மேக்கப் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் அதிலிருக்கும் அவ்வளவு நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டாதான் முடியும் என்று நினைக்க வேண்டாம். ஆசை இருந்தும் , அதை எவ்வாறு அணிய வேண்டும் என்று பலருக்கு புரியாத புதிராக தான் உள்ளது.  அதை நாங்கள் உங்களுக்கு விளக்க உள்ளோம்.


Also Read Bridal Makeup Artist In Chennai In Tamil


பவுண்டேஷன் மற்றும் ப்ளஷ் பூசுவதற்கான குறிப்புகள் (Foundation And Blush)


1makeup tips in tamil


பவுண்டேஷனை முகத்தில் மற்றும் கழுத்தில் பூசவேண்டும் (Apply Foundation On Face & Neck)


பெரும்பாலும் நீங்கள் உங்கள் பவுண்டேஷனை முகத்தில் மட்டும் பூசினீர்கள் என்றால் அது உங்கள் முகத்தை மட்டும் தனியாக காட்டும். ஆகையால், எப்போதுமே தாடை வரிகள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகள் வரை உங்கள் பவுண்டேஷனை பூசுங்கள்.


பவுண்டேஷனை எவ்வாறு பூசுவது ( விரல்களில் / ப்ரஷ்ஷில் ) (How To Apply Foundation)


உங்கள்  விரல்களை உபயோகித்து பவுண்டேஷனை பூசினால், இலகுவான கவரேஜ் கிடைக்கும் . இதே ஒரு பவுண்டேஷன் ப்ரஷால் செய்து பாருங்கள், அது உங்களுக்கு முழு மேக்கப் கவரேஜ் அளிக்கும்! ஆகையால், தினம் வேலைக்கு செல்லும் போது, வெளியில் செல்லும் போது இலகுவாக பூசிக்கொள்ளலாம் . கல்யாணம், பண்டிகை என விசேஷ நாட்களில் ஒரு ப்ரஷை பயன்படுத்தி முழுமையான  மேக்கப்பை அடையலாம்.


பவுடரில் - லூஸ் பவுடர் / ப்ரெஸ்ட் பவுடர் (loose/pressed) எவ்வாறு பயன்படுத்த (Using Loose Powder)


 அதாவது, முதலில் நீங்கள் க்ளென்சர் , மொய்ஸ்சுரைசர், பவுண்டேஷன் என பூசிவிட்டு, ஒரு க்ளாஸி  லூக்கிற்காக நீங்கள் லூஸ் பவுடர் பயன்படுத்தலாம். ஆனால் , ப்ரெஸ்ட் பவுடர்  பவுண்டேஷனிற்கு பதிலாக பயன்படுத்தும் பௌடர் ஆகும்! இதை நீங்கள் நாள் முழுதும் தேவை படும்போது டச் - அப் செய்துகொள்ள உதவும். மேலும் , உங்கள் சருமம் எண்ணெய் கொண்டதாக இருந்தாலும் , அதை மேட் (தெளிவான சருமமாக ) ஆக மாற்ற ப்ரெஸ்ட் பௌடர் உதவும்.


சிறந்த தோற்றத்திற்கு பவுண்டேஷனிற்கு முன்பு ப்ளஷை பயன்படுத்தவும் (Use A Blush Before The Foundation For Best Looks)


ஒப்பனையில் அனைத்தும் ஒரு படைப்பாற்றல் கலந்த சோதனை மற்றும் அதற்கான பிழை என்றதினால், இவ்வாறு தான்  இதை செய்யவேண்டும் என்று கட்டாயமும் இல்லை . நீங்கள் இதுபோல் வழக்கத்துக்கு மாறாக பயன்படுத்தி பாருங்கள். ப்ளஷை முதலில் அடித்துவிட்டு பவுண்டேஷன் பூசும்போது இது உங்களை இன்னும் இயல்பாக/அட்டகாசமாக  காட்ட உதவும்.


ப்ளஷை  பூசும்போது சிரிக்கவும் (Smile WHle Applying Blush)


ப்ளஷை பூசும்போது மற்ற  ப்ரைமர் அல்லது பவுண்டேஷன் போல் பூசக்கூடாது. இது உங்கள் கன்னங்களை (cheeks) முன்னிலைப்படுத்த இருப்பதால் , உங்களுக்கு அதன் இடம் சரியாக தெரிய, சிரித்து பாருங்கள்.   உங்கள் கன்னங்களை தனியாக காட்ட உதவும்!


ஆர்கன் எண்ணெய் உடன் பவுண்டேஷன் (Apply Argon Oil On Foundation)


உங்கள் முகத்தில் ஒரு சீரான தோற்றத்தை பெற , சிறிது ஆர்கன் (argon oil) எண்ணையை உங்கள் பவுண்டேஷனில் கலந்து பூசுங்கள். இது உங்களுக்கு ஒரு மென்மையான அமைப்பு மட்டுமில்லாமல் ஜொலிக்கும் தோற்றத்தையும் குடுக்கும்.


கண் ஒப்பனை மற்றும் ஐ பிரௌ டிப்ஸ் (Eye Makeup Tips)


4makeup tips in tamil


இயல்பான தோற்றத்திற்கான இலகுவான ஸ்ட்ரோக்ஸ் (Easiest Strokes For Normal Appearance) 


ஒரு ஐ பென்சிலில் உங்கள் புருவங்களை கோடுகளாக வரையாமல்,  இறகை போல வரைந்து விடுங்கள் . இது உங்கள் புருவங்களின் முடியை இன்னும் அழகாகவும் இயல்பாகவும் காண்பிக்கும் . இதற்கு நீங்கள் அடர் பழுப்பு/சாம்பல்  நிற பென்சிலை பயன்படுத்தலாம்.


பளிச்சிடும் ஐ ஷாடோவிற்கு (Applying Eyeshadow)


உங்கள்  கண்களின் மேல் இருக்கும் சருமத்தின் நிறம் நீங்கள் பூசும் ஐ ஷாடோவை தெளிவாக காட்டாமல் போகலாம். ஆகையால், முதலில் ஒரு வெள்ளை நிற அடித்தளத்தை பூசுங்கள். அதற்கு மேல் நீங்கள் விரும்பும் நிறத்தில்  ஐ ஷாடோவை பூசுங்கள். இது உங்கள் நிறங்களை பளிச்சென்று காட்டும் . மேலும், அதிக நேரம் நீடிக்கும்! அருமையான டிப் அல்லவா இது?!


ஐ லைனர் அழிந்துவிடாமல் இருக்க ஐ ஷாடோ (Apply A Little Eyeshadow On Your Eyeliner)


ஆம்! உங்கள் ஐ லைனர் அழிந்துவிடும் என்று பயந்தே நீங்கள் அதை பூசுவதில்லை என்றால் இனி பயம் வேண்டாம்! ஒரு சுலபமான ட்ரிக்கை நாங்கள் அளிக்கிறோம். உங்கள் ஐ லைனரின் மீது கொஞ்சம் ஐ ஷாடோவை பூசவும்.  இது உங்கள் ஐ லைனரை லாக் செய்து அழியாமல் பாத்துக்கொள்ளும்.


புருவங்களுக்கு மஸ்க்கார அப்ளிகேட்டார் (Mascara Applicator) -


முன்னதாக நாங்கள் புருவங்களை அப்படியே வரைய வேண்டாம் என்று கூறினோம். இப்போது, அதை இன்னும் இயல்பாக காட்ட ஒரு பழைய மஸ்க்கார அப்ளிகேட்டரை பயன்படுத்தவும்.அதன் பிரஷால் உங்கள் புருவங்களை வரைய ஒரு எளிமையான வழி.


டைட்லய்னிங் ஐ ப்ரோ (Tightlining) -


ஆரம்பத்தில் நாங்கள் உங்களிடம் கூறியது போல, ஒப்பனையை இலகுவாகவும் இயல்பாகவும் காண்பிக்க, மற்றொரு ட்ரிக்! ஐ லைனரை கண் இமைகளின் மேல் பூசாமல் அதற்கு உள்ளே உள்ள வரிகளில் பூசுங்கள். இது தான் டைட்லய்னிங்! இது உங்கள் கண்களை ஒப்பனை இடாதது போல் காண்பிக்கும்.


Also Read: ஒரு பெர்பெக்ட் லுக்கிற்கு ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது


கவர்ச்சிகரமான உதடுகளை பெற டிப்ஸ் (Tips to Get Attractive Lips )


3makeup tips in tamil


நடுவில் இருந்து லிப்ஸ்டிக்கை பூசவும் (Apply Lipstick From Mid)


அட !  அப்படியா ?! என்று நினைக்கிறீர்களா? நடுவில் இருந்து ஆரம்பிக்கும்போது உங்கள் லிப்ஸ்டிக் மிக அற்புதமான தோற்றத்தை அடையும்! முதலில் உங்கள் உதட்டின் நடுவை கண்டறியுங்கள். அதிலிருந்து வெளியில் நோக்கி பூசவும்.  இது உங்களுக்கு ஒரு அட்டகாசமான பினிஷ் அளிக்கும்!


லிப் லைனரை லிப்ஸ்டிக்கிற்கு பிறகு பூசவும் (Apply Lip Liner After Lipstick)


 நீங்கள் உங்கள் உதட்டின்  அவுட்லைன்னை பூசிவிட்டு , உள்ளே பூசுகிறீர்கள் என்றால் அது தவறு! முதலில் நீங்கள் லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு பிறகு லிப் லைனரால் அவுட்லைன் செய்துபாருங்கள்.  இது உங்களுக்கு ஒரு நீட் பினிஷ் அளிக்கும்!


லிப்ஸ்டிக்  மற்றும் கன்னத்தின்  நிறம் (Lipstick And Cheek Color)


பொதுவாக ஒப்பனையில், பல நிறங்கள் இருந்தாலும், உங்கள் சருமத்திற்கு ஏற்ற நிற பாலேட்டை (color palette) கண்டறிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு, உதட்டுக்கு நீங்கள் பிங்க் பூசினால், கணங்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது வேறு தொடர்பான நிறங்களை பூசலாம்  , உதட்டில் பீச்/நுட் நிறம் என்றால் கணங்களில் பீச் ,வெளிர் பழுப்பு, உதட்டிற்கு சிவப்பு என்றால் கன்னங்களுக்கு சிவப்பு தொடர்பான நிறங்களை பயன்படுத்தலாம். இது உங்கள் தோற்றத்தை இன்னும் கிளாசியாக காட்டும்!


லிப்ஸ்டிக் உதட்டில் அதிக நேரம் தங்க (How To Make Lipstick Last Longer)


நாம் அனைவருமே மிக அற்புதமாக உதட்டுச்சாயம் பூசினாலும், அது அதிக நேரம் நீடிக்க எதுவும் செய்வதில்லை. அதுவோ , சாப்பிடும்போது அல்லது சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும். இதை தவிர்க்க ஒரு அற்புதமான வழி- ஒரு ட்ரான்ஸ்லுசென்ட்(translucent)  / ஒரு க்ளோஸ்ஸி பௌடரை பூசவும். இது உங்கள் உதட்டு சாயத்தை அழியாமல் பாதுகாக்கும்.


எக்ஸ்போலிஎட் (Exfoliate) -


அதாவது உங்கள் உதட்டில் இருக்கும் டெட் செல்ஸ்கலை  அகற்றி ஒரு மென்மையான உதடை பெறுவது அவசியம். அப்போதுதான் நீங்கள் பூசும் லிப்ஸ்டிக் அற்புதமாக தோன்றும். ஆகையால், வாரம் ஒரு முறை அல்லது லிப்ஸ்டிக் பூசும் முன்னதாக லிப் எக்ஸ்போலிஎட் செய்து லிப்ஸ்டிக் அணிய ஆரம்பியுங்கள்.


கன்ஸீலிங் மற்றும் கண்டோரிங் டிப்ஸ் (Concealing & Contouring Makeup Tips) 


5makeup tips in tamil


வெவ்வேறு இடங்களை மறைப்பதற்கு வெவ்வேறு கண்சீலர்ஸ் (Use Different Concealers)


உங்கள் முகத்தில் இருக்கும் குறைபாடுகளை ( அடர் நிறம், புள்ளிகள், பருக்கள், கருமுள்) மறைக்க கண்சீலரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், நீங்கள் ஒரே ஒரு கன்சீலரை மட்டும் பயன்படுத்துறீர்கள் என்றால் இதை கவனியுங்கள்- உங்கள்  பிரச்னைக்கேற்ற வெவேறு கன்சீலரை உபயோகியுங்கள். உதாரணத்திற்கு, ஆரஞ்சு நிற கன்சீலரை கரு வளையங்களும், பீச் அல்லது உங்கள் சருமத்தின் நிறத்தை ப்ருகளிற்கும் பயன் படுத்தவும்.


முக்கியமான புள்ளிகளை அறிந்துகொள்ளவும் (Find Out Important Points)


உங்களுக்கு முகத்தில் எங்கெங்கே கரும் புள்ளிகள் இருக்கிறது என்று நன்கு அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் மூக்கின் நுனிகளில், வாயின் கீழ், கண்களை சுற்றி இருக்கலாம். இவை அறிந்தால் சட்டென்று கன்சீலரை பூசி இதுபோல் இருக்கும் குறைபாடுகளை மறைத்துவிடலாம்.  


கண்டோரிங்கில் கன்னங்களை குறைக்க (If You Have A Bigger Cheeks)


உங்கள் கன்னங்கள் பெரிதாக இருந்தால், அதை சிறிதாக காண்பிக்க , மீன் வாயை போல செய்த்துக்கொண்டு உங்கள்  கன்னங்களை உள்ளே இழுங்கள். குழி விழும் இடங்களில் ஒரு மெட் ப்ரோன்சர் பவுடரை பூசுங்கள். இது உங்கள் கணங்களை சிறிதாக காட்ட உதவும். மேலும் இதற்கு மேல் கணங்களுக்கு ப்ளஷை  தடவலாம்!


கலர் பாலேட்  (Finding Color According T0o Skin Tone)


உங்கள் சருமத்தின் அடிப்படையை கொண்டு நீங்கள் உங்களுக்கு ஏற்ற நிறங்களை கண்டறிய வேண்டும்.  உங்கள் நிறம் வெள்ளையாக இருந்தால், பீச், பிங்க், இதன் அடிப்படையை கொண்ட வெளிர் நிறங்கள் உங்களுக்கு பொருந்தும். இதுவே அடர் நிறம் கொண்ட சருமம் ஆக இருந்தால், அதற்கேற்ற அடர் நிறங்களை கண்டறியுங்கள்.


மேக்கப் ப்ரஷ் (Makeup Brushes)


6makeup tips in tamil


ப்ரஷை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (Learn About The Brush)


மேக்கப் செய்ய  ப்ரஷ் இருந்தாலும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். சிறிதாக இருக்கும் ப்ரஷை நுணுக்கங்களுக்கும் பெரிதாக இருக்கும் ப்ரஷை பௌடர் / பவுண்டேஷன் பூசவும் உபயோகிக்கவும்.


பேர்பெக்ட் பினிஷை பெற (Get The Perfect Finish)


உங்கள் ப்ரஷை தண்ணீரில் டிப் செய்து அதன் பிறகு உபயோகித்தால்(ஆம், பெயிண்ட் செய்வதுபோல )  ஒப்பனை இன்னும் அழுத்தமாக இருக்கும்.


ப்ரஷை சுத்தம் செயுங்கள் (Clean The Brush)


ப்ரஷை அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் நிறைய பாக்டீரியா , கெமிக்கல்கள் இருக்கலாம். இவை உங்களுக்கு மேலும் சருமத்தை பாதிக்கும் வாய்ப்புகளை உண்டாக் கலாம். இதை தவிர்க்க, உங்கள் ப்ரஷை பேக்கிங் சோடா / ஷாம்புவால் கழுவி  சுத்தம் செய்யுங்கள்.


போனஸ் டிப் - சூரியனின் ஒளியில் ஒப்பனை செய்து பழகுங்கள். பெரும்பாலும் நாம் ட்யூப் லைட் அல்லது வேறு வெளிச்சத்தில் செயும்போது, ஒப்பனை சிறிது குறைவாகவோ/அதிகமாகவோ போகலாம். ஆகையால், இயற்கையான வெளிச்சம் இருக்கும் இடத்தில உட்காந்து செயுங்கள்.


பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் (FAQ's)


1) ஐந்தே நிமிடத்தில் ரெடியாக எந்த ஒப்பனை பொருள் கைகொடுக்கும் ?


நீங்கள் ஐந்து நிமிடத்தில் பளிச்சென்று தெரிய , ப்ளோட்டிங் பேப்பரில் உங்கள் முகத்தை ஒத்தி எடுக்கவும். இது உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கு , எண்ணெய் அனைத்தையும் அகற்றிவிடும். அதற்கு பிறகு ஒரு பளிச்சிடும் லிப்ஸ்டிக்கை பூசுங்கள்!


2) பவுண்டேஷனை கேக்கியாக (வேஷம்போல்) தெரிவதிலிருந்து எவ்வாறு அகற்றலாம் ?


ஒன்று, நீங்கள் அளவுக்கு அதிகமாக பவுண்டேஷனை பூசுகிறீர்கள் அல்லது ஒரு மொய்ஸ்சுரைசரை பூசிக்கொண்டு உங்கள் பவுண்டேஷனை பூசவும்.


3) உங்கள் பையில் அவசியம் இருக்கவேண்டிய மூன்று ஒப்பனை பொருட்கள்?


கிளென்சர், மொய்ஸ்சுரைசர் உடன் வரும் சன்ஸகிரீன் லோஷன், லிப்ஸ்டிக்.


மேலும் படிக்க - உங்கள் ஒப்பனை செலவை குறைத்து மாதாந்திர சேமிப்பை எப்படி அதிகரிக்கிறது?


பட ஆதாரம்  - instagram, shutterstock,pexels,instagram 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.