logo
ADVERTISEMENT
home / Acne
சருமத்திற்கும், கூந்தலுக்கும் நெய் செய்யும் மகத்துவங்கள்!

சருமத்திற்கும், கூந்தலுக்கும் நெய் செய்யும் மகத்துவங்கள்!

சமையலில் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும்; ஓமம் வளர்க்கும்போதும் நெய் பயன்படுத்தி பார்த்திருக்கிறோம். வெண்ணையில் இருந்து தயாரித்தாலும், நெய்யில் வெண்ணையைவிட ஒரு சதவிகிதம் சத்து அதிகமாகவே இருக்கிறது. மருத்துவ குணம் கொண்ட நெய் (ghee) சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல பயன்களைத்(benefits) தரும். 

  • பியூத்திரிக் அமிலம்(butyric acid) – நோய் எதிர்ப்பு சக்திக்கும்,
  • வைட்டமின் ஏ – கண்கள், சருமம், கூந்தல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும்,
  • வைட்டமின் ஈ – ஆற்றல்மிகு ஆன்டி-ஆக்ஸிடன்ட் – உடலுக்கும்,
  • வைட்டமின்கே2 – ஆரோக்கியமான பற்களுக்கும், எலும்பிற்கும், இருதயத்திற்கும், 
  • கொலெஸ்ட்டிரால் – உடல் ஆரோக்கியம், ஹார்மோன் சீராக வேலை செய்ய
  • ஓமெகா3,4 பேட்டி அமிலங்கள் – மூளை வளர்ச்சிக்கும், நல்ல மனநிலையை தக்கவைத்துக்கொள்ளவும்
  • லினோலெய்க் அமிலம் – நோயை எதிர்த்து போராடவும் பயன்படுகிறது.

உங்கள் உணவில் நெய் சேர்ப்பதன் நன்மைகள்

Shutterstock

  1. நெய்யில் நல்ல கொழுப்புசத்து உள்ளதால் இருதயத்திற்கு நல்லது,
  2. அல்சர், கான்செர் போன்ற பிரச்சனைகளை விலக்கி, செரிமான கோளாறை சரி செய்யும்.
  3. லாக்டோஸ் இல்லாததால், பால் பொருட்களால் அலர்ஜி உள்ளவர்கள்கூட நெய் பயன்படுத்தலாம். 
  4. கெட்ட கொழுப்பை கரைய வைக்கும் தன்மை உள்ளதால், உடல் எடை குறைக்க உதவும்
  5. ஒழுங்கற்ற மாதவிடாய் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்
  6. குழந்தைகளுக்கு பசியைத் தூண்டும்
  7. தைராய்டு பிரச்சனையை சரி செய்யும்
  8. உணவின் ருசியை மேன்படுத்தும்
  9. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். 

கூந்தலுக்கு நெய் அளிக்கும் நன்மைகள்

இத்தனை நன்மைகள் செய்யும் நெய், கூந்தலுக்கு (hair) என்னென்ன நன்மைகள் செய்யவல்லது என்று பார்க்கலாம்.நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். 

ADVERTISEMENT
  • கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும்.
  • கூந்தல் நன்றாக வளரும்
  • கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும்
  • கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்

கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். 

1. பொடுகுத் தொல்லை

Shutterstock

நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.

ADVERTISEMENT

2. கூந்தல் நிறம் குறைந்திருந்தால்

எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம். 

3. இளநரை மற்றும் சொரியாசிஸ்

Shutterstock

இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். 

ADVERTISEMENT

4. கூந்தல் அடர்திக்கு

நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும். 

நெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்

உதடு காய்ந்து, கருமையாக இருந்தால், நெய் தடவி வாருங்கள். மிருதுவான, ரோஸ் நிறத்தில் மாறிவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க, பயப்படாமல் நெய் தடவலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நல்ல விளைவையும் தரும். 
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிப்பதற்கு முன் நன்றாக தடவி ஊறவைத்து 15 நிமிடங்கள் களித்து குளித்துக்கொள்ளுங்கள். மிருதுவான, மென்மையான சருமம் கிடைக்கும்.

முகத்திற்கு நெய் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய முகப்பூச்சுகள்:

1. பொலிவற்ற முகத்திற்கு

பாலுடன், கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவுங்கள். அழகான பொலிவான முகம் கிடைத்துவிடும்.

ADVERTISEMENT

2. வறண்ட சருமத்திற்கு

Shutterstock

ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

3. புண்- கரையுள்ள சருமதிற்கு

ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் நெய், புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் எப்படி தீர்வாகும் என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்குங்கள். பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது. 

வெய்யிலில் சென்று கருத்த தோள்(skin), பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம். 

நெய்யின் பயன்களைக்  கண்டு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? நல்ல சுத்தமான நெய் வாங்கி உணவில்  மட்டுமல்லாது, உங்கள் கூந்தலுக்கும், சருமத்திற்கும் உபயோகித்து பெரும் பயன் பெறுங்கள்.

 

ADVERTISEMENT
மேலும் படிக்க – சரும அழகை அதிகரிக்கும் வாழைப்பழம் : பலன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்! மேலும் படிக்க – சருமத்தின் மீது ப்ளூபெர்ரி செய்யும் மாயாஜாலம்!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !

11 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT