logo
ADVERTISEMENT
home / Age Care
வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

பாதாம் பருப்பு(Almond) உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதில்லை, சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தருகின்றது. இதனால் செய்யப்படும் எண்ணெய் சருமத்திற்கும் மிகுந்த அழகைத் தருகிறது. சொல்லப்போனால் இயற்கை எண்ணெய் அனைத்துமே சருமத்திற்கு நல்ல அழகைத் தரும். ஆனால் அதில் பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது. சரும பராமரிப்பிற்கு மற்ற கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட, இந்த எண்ணெயை பயன்படுத்தினால் அநேக பலன்கள் கிடைக்கும்.

* பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், சருமமானது இதனை விரைவில் உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இது மற்ற சருமத்தை விட, வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஆகவே இதனை வைத்து தினமும் மசாஜ் செய்தால், சருமம் மென்மையாவதோடு, வெடிப்புக்கள் நீங்கி அழகாக இருக்கும்.

* உதடுகளில் வெடிப்புகள் இருக்கிறதா? அப்படியென்றால் அந்த பிரச்சனைக்கு ஒரே சிறந்த தீர்வு பாதாம் எண்ணெய் தான். இதனை ஒரு ‘லிப் கிளாஸ்’ மாதிரி பயன்படுத்த வேண்டும். அதற்கு 5-6 துளிகள் பாதாம் எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.

* முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் பொதுவாக போதிய சத்துக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. அத்தகைய சத்துக்களான வைட்டமின் ஏ மற்றும் பி, பாதாம் எண்ணெயில் அதிகமாக இருக்கிறது. ஆகவே அதனை அதிகம் பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, புதிய செல்களும் உருவாகும். இதனால் முகமானது நன்கு பொலிவோடும், இளமையான தோற்றத்தையும் தரும்.

ADVERTISEMENT

* பாதாம் (Almond) எண்ணெய் சருமத்திற்கு அதிகமான நன்மைகளை தருகிறது. அதிலும் முகத்தில் தோன்றும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதில் நீக்கும் அதற்கு தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை காட்டனால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளிச்சென்று இருக்கும்.

* பாதாம் எண்ணெயும் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இதனை வைத்து முகத்திற்கு செய்யும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறிவிடும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது முன்பு இருந்ததை விட, செய்த பின் நன்கு அழகாக இருக்கும்.

 

ADVERTISEMENT

Twitter

தேன் மற்றும் பாதாம் எண்ணெய் (Almond)
½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். – மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய்
1 தேக்கரண்டி அலோ வேரா ஜெல்லுடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்
1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் மெல்லியதாக படர விட்டு ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறு நாள் காலையில், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முயற்சி செய்யவும். 

ADVERTISEMENT

Twitter

பால் மற்றும் பாதாம் எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்துங்கள். இந்தக் கலவையை மெதுவாக உங்கள் முகத்தில் தடவி விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சுத்தப்படுத்தவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை முயற்சி செய்யவும்.

பழுப்புச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய்
1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும். மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை, இந்த முகப்பூச்சை உபயோகிப்பதன் மூலம் உங்களுடைய சருமம் மிகவும் பிரகாசமான ஒளியைப் பெறும்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! 
ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

06 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT