தேவதை சருமத்தில் தென்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் - (Skin Problems Solution In Tamil)

தேவதை சருமத்தில் தென்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் - (Skin Problems Solution In Tamil)

மற்ற உறுப்புகளை போலவே நாம் உடலின் மிக பெரிய உறுப்பான சருமம் பற்றிய அக்கறை கொள்கிறோமா என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.


நமது மொத்த உடலுக்கும் இயற்கை தந்த கவசம்தான் சருமம் (Skin). சருமம் இல்லாத நம்மை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... உள்ளிருக்கும் உறுப்புகள் எல்லாம் வெளியே தெரியும்படி இருந்தால் அழகு என்கிற வார்த்தையே இந்த உலகத்தில் உருவாகியிருக்காது இல்லையா.


நம் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான சருமம் பற்றியும் அதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் மற்றும் தீர்வுகளை உங்களுக்காக கொடுத்திருக்கிறோம். உங்கள் சருமத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.


 • நம் உடலின் மிக பெரிய உறுப்பு சருமம்

 • சருமத்தின் வகைகள் மற்றும் விபரங்கள்

 • சாதாரண சருமம்

 • எண்ணெய் பசை சருமம்

 • வறண்ட சருமம்

 • உணர்திறன் சருமம் (Sensitive)

 • சருமத்திற்கு ஏற்படும் சில முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான       பரிகாரங்கள்

 • முகப் பரு

 • சோரியாசிஸ்

 • சரும சுருக்கம்

 • வரி தழும்புகள்

 • கரும்புள்ளி மங்கு

 • தோல் அழற்சி மற்றும் வேனல் கட்டிகள்

 • சூரிய வெப்பத்தால் ஏற்படும் மாற்றம்


நம் உடலின் மிக பெரிய உறுப்பு சருமம்


ருமத்தின் வகைகள் மற்றும் விபரங்கள்


சருமத்திற்கு ஏற்படும் சில முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள்நம் உடலின் மிக பெரிய உறுப்பு சருமம் (Skin The Biggest Part Of Our Body)


பொதுவாக நாம் உடலின் உறுப்புகளில் பிரச்னைகள் வராமல் காக்க விரும்புவோம். வந்தாலும் அதற்கான மருத்துவத்தை கவனமாக எடுத்து அந்த உறுப்புகளை சிதைவில் இருந்து காப்போம்.


ஆனால் உடலிலேயே மிக பெரிய உறுப்பான சருமம் பற்றிய கவலை நமக்கு அதிகமாக இருப்பதில்லை. பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற முகத்தில் வரும் சரும பாதிப்புக்களை கூட ஒரு சிலர் கவனிப்பதில்லை. அதே சமயம் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமைகள் திடீரென தோன்றும் கட்டிகள் போன்றவற்றை நாம் கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறோம். தானாக மறைந்து விடும் என்று நினைக்கிறோம்.


உண்மையில் சருமத்தில் ஏற்படும் பல நோய்களுக்கும் உளவியல் ரீதியான சம்பந்தம் இருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஆழ்மனதில் சில உளவியல் சிக்கல்களை நீங்கள் மறைப்பதை காட்டி கொடுக்கும் கண்ணாடியாக உங்கள் சருமம் இருக்கிறது.


பொதுவான சில சரும பிரச்னைகள் மற்றும் நோய்களும் அதற்கான சில தீர்வுகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சருமத்தின் மீது எப்போதும் காதல் கொள்ளுங்கள் முழுதாய் நேசியுங்கள். பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சருமம் இல்லாவிட்டாலும் நாம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Also Read About வேப்ப எண்ணெய் நன்மைகள்ருமத்தின் வகைகள் மற்றும் விபரங்கள் (Types Of Skin And Its Details)


எப்படி ஒவ்வொருவர் முகம் மற்றும் நிறங்கள் வித்யாசப்படுகிறதோ அதை போலவே அவர்களின் தோலும் மனிதருக்கு மனிதர் மாறுபடும். அவரவர் சருமத்திற்கேற்ப அதனை பராமரிக்க வேண்டியது அவசியம்.


சாதாரண சருமம் (Normal)


இந்த வகை சருமம் உலர்வாகவும் இருக்காது , எண்ணெய்பசையோடும் இருக்காது. இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் காரணம் எந்த வகை மேக்கப்பும் இவர்களுக்கு ஒத்துக் கொள்ளும். வெடிப்புக்கள் ஏற்படாது.


எண்ணெய் பசை சருமம் (Oily)


காலையில் புத்துணர்வோடு காணப்படும் இவர்கள் சருமம் நேரம் ஆக ஆக எண்ணெய் தன்மை பிசுபிசுக்க ஆரம்பித்து விடும். இந்த சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் , கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


வறண்ட சருமத்திற்கு என்ன காரணம் என்பதையும் படியுங்கள்


வறண்ட சருமம் (Dry)


சாதாரண நேரங்களில் சருமத்தை கீறினால் ஒரு கோடு வெண்மையாக விழும். இவைதான் வறண்ட சருமத்திற்கான அறிகுறி. குளிர் நேரங்களில் மேலும் வறண்டு விடும். பாதங்களில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் சருமத்தின் பல இடங்களில் வெடிப்பு ஏற்படும். வரைந்த சருமத்தால் வெகு சீக்கிரம் வயதான தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது.


உணர்திறன் சருமம் (Sensitive)


மிகவும் மென்மையான சருமம் கொண்டவர்களை சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் என்கிறோம். விரல்களால் லேசாக தேய்த்தாலே சிவந்து விடும் வண்ணம் இவர்கள் சருமம் மெல்லியதாக இருக்கும். காலை வெயில் கூட இவர்களுக்கு தாங்காது. தோல் சிவக்கும் தடிக்கும் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.சருமத்திற்கு ஏற்படும் சில முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் (Skin Problems Solution In Tamil)


முகப் பரு (Acne)


முகப்பரு ஒரு வகையான சரும பாதிப்பு. பெரும்பாலும் எண்ணெய்ப்பசை சருமத்தினர்தான் இதனால் அதிக பாதிப்பினை சந்திப்பார்கள். சருமத்துளைகளில் எண்ணெய் அடைப்பதால் பருக்கள் வருகின்றன.
பருக்கள் பெரும்பாலும் முகத்தில் வரும் என்றாலும் ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு மற்றும் முதுகு பகுதி முழுவதும் கூட வரலாம்.


Also Read How To Remove Warts From Face In Tamil


மரபணு காரணங்களும் பருக்கள் வர காரணம். ஹார்மோன் பாதிப்புகளால் மட்டுமே டீன் ஏஜ் மக்களுக்கு வருகிறது. பருவ வயதினர் என்றாலே பருவுடன் இருக்க ஹார்மோன் வளர்ச்சிகள்தான் காரணம் .


எண்ணெய் சருமத்தின் அறிகுறிகளையும் படியுங்கள்


தீர்வுகள் (Solution)


 • வெங்காரம் எனப்படும் போராக்ஸ் பொடியை பொரித்தால் அது மாவுப்பதத்தில் மாறும். அதனை நீரில் நனைத்து அதனை பருக்கள் மீது தடவி வர பருக்கள் மறைய தொடங்கும்.

 • திருநீறு இதற்கு நல்ல தீர்வு. திருநீற்றை நீருடன் கலந்து அந்த பசையை முகத்தில் அல்லது பருக்கள் உள்ள இடத்தில் தடவ நல்ல தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும்.

 • குங்குமாதி லேபம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி பரு உள்ள இடத்தில் தடவி பின்னர் கழுவி விடுங்கள். இதனால் பரு மறைவது மட்டும் அல்லாமல் பருவோடு சேர்ந்த தழும்புகளும் சேர்ந்தே மறையும்.


சோரியாசிஸ் (Psoriasis)


இது பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோய் அல்ல. உண்மையில் சொல்ல போனால் நீண்ட காலமாக உடலில் வாழும் தொற்று. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சருமத்தின் தவறான இடங்களில் செல்களை அதிகரிக்க கூறி தவறான தகவலை மூளைக்கு அனுப்புவதன் காரணமாக ஏற்படுகிறது. மேலும் சோரியாசிஸ் உள்ளவர்களின் உறவினர்களுக்கு இது வரும் வாய்ப்பிருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களுக்கு அதிகம் இந்த நோய் பாதிப்பு இருக்கும்.


அறிகுறிகள் (Symptoms)


இது பெரும்பாலும் முழங்கால் முழங்கை மற்றும் தலை பகுதிகளில் தோன்றும். இது இருக்கும் இடத்தில தோல் தடிமனாக சிவந்து காணப்படும். சில சமயம் அதில் இருந்து செதில்களும் உதிரலாம். நாட்பட்ட சோரியாசிஸ் என்றால் சில சமயம் அதில் இருந்து ரத்தம் வரலாம்.


தீர்வுகள் (Solution)


இந்த நோய்க்கு முழுமையான தீர்வுகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான சித்த மருத்துவ குறிப்புகள் இதன் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. கவனிக்காமல் விடப்படும் சோரியாசிஸ் ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டுவலி நோய்க்கு வழி வகுக்கிறது.


தீவிரமான மனக்கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும் இருந்தால் நிச்சயம் குணமாக வாய்ப்பு உண்டு. மேலும் சரும பாதுகாப்பு க்ரீம்கள் இந்த நோயை தடுக்கும். உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு உள்ள உணவுகள் உண்பது நல்லது.ஆரஞ்சு சாறு, தயிர், மஞ்சள்கரு, செறிவூட்டப்பட்ட பால் இந்த நோயின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவரும்.சரும சுருக்கம் (Wrinkles)


உடலுக்கு வயதாகும்போது அது தயாரிக்கும் எண்ணெய் பொருள்களை நிறுத்தி விடுகிறது. வறண்ட சருமமா கொண்டவர்களுக்கு கொஞ்சம் விரைவாகவே நிறுத்தி விடுகிறது.


தீர்வுகள் (Solution)


வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு வாழ்க்கைமுறையில் சில விஷயங்களை மாற்றினால் சருமத்தின் வறட்சி நீங்கி விடும். சோப்பு மற்றும் சென்ட் போன்ற ரசாயனங்களை தவிர்ப்பது, குளிர்ந்த நீரில் குளிப்பது வெந்நீரை தவிர்ப்பது தினமும் மாய்ச்சுரைசர்களை உபயோகிப்பது போன்றவை நல்ல தீர்வாக அமையும்.வரி தழும்புகள் (Stetch Marks)


உடல் எடை அதிகமாக இருந்து குறைக்க படும்போது விரிந்த தோல் சுருங்குகிறது. இதனால் உடலில் வரி தழும்புகள் உண்டாகின்றன. பிரசவத்திற்கு பின்பு பெண்களில் வயிற்றில் மற்றும் தொடைகளில் இவை ஏற்படும். உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பவர்களுக்கும் ஏற்படலாம்.


தீர்வுகள் (Solution)


 • வெண்மையான கோடுகளை நீக்க ஸ்க்ரப் செய்தால் போதுமானது. உங்கள் உடலில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப்பிங் நீக்கும் போது இந்த வெண்கோடுகள் மறைந்து விடும்.

 • வரி தழும்புகளை மறைய செய்யும் பல க்ரீம் மற்றும் ஆயின்மெண்ட்கள் தற்போது விற்பனையில் இருக்கின்றன. அவற்றை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 • மேலும் இது தவிர நிரந்தர வரி தழும்புகள் நீங்க காஸ்மெட்டிக் சர்ஜரி , லேசர் தெரபி போன்றவை செய்யப்படுகின்றன.கரும்புள்ளி மங்கு (Pigmentation)


வயதாவதால் ஏற்படும் இன்னொரு மாற்றம் முகத்தில் மங்கு எனப்படும் கரும்புள்ளிகள் கூட்டமாக ஒரே இடத்தில் தோன்றுவது. சில சமயம் வெயில் அதிகமாக இருப்பதாலும் இது நேரலாம்.


தீர்வுகள் (Solution)


மருத்துவர் அறிவுரைப்படி தக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். அதை போலவே மருத்துவரிடம் முறையாக ஸ்கின் பீலிங் செய்து கொள்ளலாம்.


ஆப்பிள் சீடர் வினிகர் மங்கு கரும்புள்ளிகளை நல்ல தீர்வு. சம அளவு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை எடுத்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இருமுறை இதனை முகத்தில் தடவி உலர வைத்து பின்னர் கழுவி விடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.தோல் அழற்சி மற்றும் வேனல் கட்டிகள் (Rashes)


தோல் அழற்சிகள் பல்வேறு காரணங்களால் வருகிறது. உடல் ஏற்று கொள்ளாத உணவு மூலம் வரலாம், மருந்துகளின் பக்க விளைவுகளால் வரலாம் அல்லது மரபணு மூலமாக வரலாம்.


தீர்வுகள் (Solution)


 • குளிக்கும்போது குப்பை மேனி இலையை பொடித்து அதனுடன் பாசிப்பயிறு கலந்து தடவி ஊற வைத்து குளித்தால் தோல் அழற்சி மாறலாம்.

 • அருகம்புல்லை அரைத்து அதனோடு மஞ்சள் சேர்த்து சிவப்பு தடிப்புக்கள் உள்ள இடத்தில தடவி வந்தால் இது குணமாகும். அதைப்போலவே வேப்பிலையையும் பயன்படுத்தலாம்.

 • தோல் நோய் உள்ளவர்கள் அடிக்கடி அருகம்புல் சாறு அருந்தி வரலாம். கத்திரிக்காய், புளி, தக்காளி, மீன், கருவாடு. கொய்யா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.சூரிய வெப்பத்தால் ஏற்படும் மாற்றம் (Sunburn)


பொதுவாக வெயிலில் அதிகம் வெளியே செல்பவர்களுக்கு இந்த சரும பாதிப்பு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சருமம் சிவந்து சில சமயம் கொப்புளங்கள் கூட காணப்படும். இன்னும் தீவிரமானால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.


தீர்வுகள் (Solution)


 • கற்றாழை இந்த வகை சன்பர்ன்களுக்கு மிக நல்ல தீர்வு. வெளியே செல்லும்போதும் வந்த பின்பும் கற்றாழை ஜெல் கொண்ட க்ரீம்களை தடவினால் சருமம் சூரிய வெப்ப எரிச்சலில் இருந்து மீண்டு வரும்.

 • அடிக்கடி குளிர்ந்த நீரினால் குளிப்பது உடலையும் சருமத்தையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் சூரிய வெப்பம் பட்டாலும் மேனி அதனை தாங்கும். சிவக்காது

 • அடிக்கடி உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நீர் இளநீர் போன்றவைகளை எடுத்து கொள்ளுங்கள்.

 • வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் பூசி வந்தால் சருமம் குளிர்ந்து சூரிய சூட்டில் இருந்து ஆறுதலடைய ஆரம்பிக்கும். 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்          


முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!                     


மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !                    


---                                                                                                                                                    


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                 


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.