logo
ADVERTISEMENT
home / அழகு
பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருள் நம் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது என்றால் டு இன் ஒன் சந்தோஷம்தான் இல்லையா! சமையலுக்குப் பயன்படுத்திய மீதப் பொருள்களை நம் அழகை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டால் நாமெல்லாம் என்றும் பேரழகியாகவே இருப்போம்தானே!

மலிவான விலையில் ஒரு கட்டு 15ரூபாய்க்கு வாங்கும் கொத்தமல்லி தழை (coriander leaf) உங்கள் முகத்தை சருமத்தை எப்படிப் பளபளக்க வைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பார்லரில் நீங்கள் பல ஆயிரங்களைக் கொடுத்து வாங்கி வரும் பளபளப்பை கொத்தமல்லி சில நிமிடங்களில் தந்து விடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! 

பயன்படுத்திப் பாருங்கள்! கொத்தமல்லி தழை மூலம் கட்டழகைப் பெறுங்கள் !

காயும் நிலவில் களங்கம் போல ஒளிரும் முகத்தில் பருக்களா!பருக்களை தடுக்க சில எளிய குறிப்புகள்

ADVERTISEMENT

Youtube

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க நீங்க விரும்பினால் முதலில் தினமும் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி சாறு, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கி விடும்.

பருவப் பெண்களுக்கு முகப்பரு ஒரு பெரும் அவஸ்தை. அதற்கு கொத்தமல்லிதான் சூப்பர் தீர்வு. ஒரு கப்பில் கொஞ்சம் கொத்தமல்லித்தழை கொஞ்சம் சீமை சாமந்திப்பூ கொஞ்சம் எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து அரைத்து அதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்துக் கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் முகவரியில் இருந்த முகப்பரு வேறு இடம் பார்த்து சென்று விடும். 

ADVERTISEMENT

கொத்தமல்லி தழை என்பது நம் முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தும் கிருமிநாசினி கூட. முகத்தில் அலர்ஜி அல்லது சிவப்பு தடிப்புகள் ஏற்பட்டால் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி சாறு, இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து ஒன்றாகக் கலந்து முகத்தில் தேய்க்கவும். உங்களை எரிச்சலூட்டிய ரேஷஸ் மாயமாக மறைந்து விடும்.

மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

Youtube

ADVERTISEMENT

தினமும் இரவில் உறங்குமுன் கொத்தமல்லி சாறு எடுத்து உதடுகளில் தடவி வாருங்கள். உதடுகளின் பளபளப்பு லிப் பாம் இல்லாமலே ப்ரகாசமாகத் தெரியும். 

சருமத்திற்கு மட்டும் அல்லாமல் தலைமுடிக்கும் கொத்தமல்லி உதவுகிறது. வாரத்தில் இரண்டு முறை கொத்தமல்லி இலையை அரைத்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வு சரியாகிறது. இதை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு முழுமையாக தடுக்கப்பட்டு தலைமுடி அடர்த்தியாகவும், மிகவும் பொலிவுடனும் இருக்கும்.

சருமம் மென்மையாக கொத்தமல்லி இலை, தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக அரைத்த பின் ஒரு ஸ்பூன் அரிசி மாவு  சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகம் மிகவும் மென்மையாகவும், பட்டு போன்றும் காணப்படும்.

“கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில்
பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?”

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                     

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

மேலும் வாசிக்க – 

Coriander Benefits in Hindi

04 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT