தலைமுதல் கால் வரை 'தழுவவா' ஒருமுறை?. என உங்களவர் கேட்க வேண்டுமா?

தலைமுதல் கால் வரை 'தழுவவா' ஒருமுறை?. என உங்களவர் கேட்க வேண்டுமா?

மாறிவரும் நவீன யுகத்தில் நேரம் தவிர எல்லாமே கிடைக்கிறது. பணம் கொடுத்தால் நேரத்தைத் தவிர எல்லாமே கிடைக்கும் என புதுமொழியே
எழுதலாம் போல அந்தளவு நேர பற்றாக்குறை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனைக் காரணம் காட்டி பெண்கள்(Girls) பலரும் தங்கள் உடல் அழகில் அக்கறை காட்ட மறந்து விடுகின்றனர்.ஒருவேளை நேரம் இருந்தாலும் முன்பதிவு செய்து பியூட்டி பார்லர் செல்கின்றனர். அங்கு காத்திருந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இதில் நேரத்துடன் சேர்த்து பணமும் செலவாகிறது என்பதனை பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை. அதற்காக பெண்கள்(Girls) யாரும் பியூட்டி பார்லர் பக்கம் போகக்கூடாது என சொல்லவில்லை.


மாதம் ஒருமுறை திரெட்டிங், பேஷியல் என பியூட்டி பார்லரில் செய்து கொள்ளலாம். பணம் அதிகம் செலவாவது போல உணர்ந்தால் வீட்டிலேயே
இயற்கையான முறையில் பேஷியல் செய்து கொள்ளலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிக செலவின்றி(Cost Free) வீட்டிலேயே செய்து கொள்ளும் வகையில் சில பேஷியல் டிப்ஸ்களை(Beauty Tips) இங்கே பார்க்கலாம்.


பாதங்கள்எடுத்தவுடன் பாதங்களா என்று கேட்க வேண்டாம். நமது உடல் எடை தாங்குவதில் தொடங்கி, நடப்பது,ஓடுவது என எல்லாவற்றுக்கும் முன்னாடி
குதித்துக்கொண்டு வருவது நமது பாதங்கள் தான். அதனால் அதனை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.


கால்வலி (Cost Free)வாரம் ஒருமுறை வாயகன்ற ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு அதில் மிதமான சுடு தண்ணீரை ஊற்றி சிறிது ஷாம்பூ, சிறிது லாவண்டர் ஆயில், ஒரு கைப்பிடி கல் உப்பு ஆகியவற்றைப் போட்டு உங்கள் பாதங்களை அதில் வையுங்கள். அரை மணி நேரம் கழித்து ஏதேனும் ஒரு நார்(பீர்க்கன் நார், தேங்காய் நார்) அல்லது பழைய டூத் பிரஷ் கொண்டு பாதங்களை மென்மையாகத் தேயுங்கள். அழுக்கு, சொரசொரப்பு நீங்கி உங்கள் பாதங்கள் மென்மையாக மாறிவிடும். பாதங்கள் சுத்தமாவதுடன் கால் வலியும் பறந்து போய் விடும்.


மருதாணிமருதாணி என்றாலே அதன் சிவப்பு தான் உடனடியாக நினைவுக்கு வரும். கைகளுக்கு மட்டுமின்றி கால்களுக்கும் இந்த மருதாணி பெஸ்ட் பிரண்டாக
திகழ்கிறது. கால்களில் நீங்கள் மருதாணி இடுவதால் செருப்பு போடுவதால் உண்டாகும் வடு மறையும். கிருமிகளை அண்ட விடாமல் செய்வதோடு
பாதத்தையும் மருதாணி அழகாக்குகிறது.


முகம் பளிச்சென மின்ன (Face)ஒரு துண்டு பப்பாளியுடன், ஒரு துண்டு வாழைப்பழம், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து
தண்ணீரால் கழுவுங்க. முகம் பளிச்சென மின்னும்.


இதேபோல தயிர்+தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து சற்று நேரம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவினாலும் முகம் பளிச்சென,களைப்பின்றி
தெரியும்.


தலைமுடி (Hair)நம்மை இளமையாகக் காட்டுவதிலும், நமது இளமையைத் தக்க வைப்பதிலும் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.


குளிப்பதற்கு முன்நார்மலாக தலைக்கு குளிக்கும் முன் எண்ணெய் தேய்த்து குளித்தால் முடி(Hair) அதிகளவில் கொட்டாது. இது தவிர தேங்காய் எண்ணெய்+நல்லெண்ணெய்+ பாதாம் எண்ணெய் மூன்றையும் லேசாக சுடவைத்து தலைக்கு தேய்த்து சற்று நேரம் கழித்து ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். முடிக்கு தேவையான ஊட்டம் கிடைத்து முடியும் நன்கு வளரும்.


முடி பளபளக்க(Hair)உங்கள் முடி ஷைனிங்காக மின்ன வேண்டுமா? அப்படி என்றால் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்றாக அடித்துக் கலக்கி தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளியுங்கள். உங்கள் தலைமுடி(Hair) பளபளப்பாக மின்னும்.


கண்கள்உருளைக்கிழங்கை ஒன்றை துருவி, பிழிந்து சாறு எடுங்கள். அரைக்கக் கூடாது. இந்தச் சாற்றில் சிறிதளவு பனங்கற்கண்டு, 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து, பனங்கற்கண்டு கரைந்ததும், அந்தக் கலவையைத் தொட்டுத் தொட்டு கண்களின் கீழ் தடவி வந்தால், கருவளையம், சுருக்கம் ஆகியவை மெள்ள மெள்ளச் சரியாகும்.


கண் இமைகளின் மேல் தினசரி இரவு விளக்கெண்ணெய் தடவி வந்தால் கண் இமைகள் கருப்பாகவும்,அடர்த்தியாகவும் இருக்கும்.
குளித்து முடித்ததும் கை,கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது உங்கள் சருமத்தினைப் பாதுகாத்திட உதவும். இதேபோல மேலே சொன்ன
அதிகம் செலவில்லாத(Cost Free) வழிமுறைகளைப்(Beauty Tips) பின்பற்றி அழகுடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்திடுங்கள்.


 


இதை முறையாக பின்பற்றி வந்தால் தலைமுதல் கால் வரை 'தழுவவா' ஒருமுறை?.. என உங்களவர் கட்டாயம் உங்களிடம் கேட்டிடுவார்.