logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
மத்தவங்க ‘பொறாமைப்படுற’ மாதிரி ஒரு ‘ரொமாண்டிக்’ வாழ்க்கை வேணுமா?

மத்தவங்க ‘பொறாமைப்படுற’ மாதிரி ஒரு ‘ரொமாண்டிக்’ வாழ்க்கை வேணுமா?

ஒரு முத்தம், எதிர்பாராத அணைப்பு, மழலையின் சிரிப்பு, எதிர்பாராத மழை, திடீர் விடுமுறை என வாழ்க்கையின் சின்ன சின்ன தருணங்களும்
வாழ்வில் நமக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை தான். தற்போதைய சூழலில் தம்பதிகள் பலரும் செக்ஸ்(Sex) வேறு, ரொமான்ஸ்(Romance) வேறு என்பதை புரிந்து கொள்வதில்லை. இதைவிட இன்றைய காலகட்டத்திலும் தனது செக்ஸ் தேவையை நேரடியாக/மறைமுகமாக கணவனிடம் கேட்கத்தயங்கும் பெண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.

கேட்டால் ஒருவேளை தவறாக எடுத்துக்கொள்வாரோ என்ற தயக்கமும், அவரே முதலில் தொடங்கட்டும் என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. இதுதவிர குடும்ப சண்டைகள், ஈகோ, பண நெருக்கடிகள், வேலை தொடர்பான நெருக்கடிகள் ஆகியவை காரணமாக தம்பதிகள் செக்ஸ்(Sex) வைத்துக்கொள்வதில் இடைவெளி விழுந்து விடுகிறது.

ADVERTISEMENT

இது தொடர்கதையாகும் போது திருமண (Marriage) வாழ்வில்  கணவன்(Husband)-மனைவி(Wife) இடையே ஒரு பெரிய பள்ளமே விழுந்து விடுகிறது. இதனை எப்படி சரிசெய்வது என தெரியாமல் பெயரளவுக்கு குடும்பம் நடத்தி,குழந்தைகளை படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணம் நடத்தி என வாழ்வை உப்பு சப்பில்லாமல் வாழும் தம்பதியர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். ‘ரொமான்ஸ்(Romance) இல்லாத செக்ஸ்(Sex) என்பது துடுப்பு இல்லாத பாய்மரத்திற்கு சமம்‘, ஏனெனில் எந்த நேரத்திலும் நீங்கள் மூழ்கி விடக்கூடும் அப்படி இல்லாமல் வாழும் வாழ்க்கையை நிறைவாகவும்,மகிழ்ச்சியுடனும் எப்படி வாழ்வது? என்பதை இங்கே பார்க்கலாம்.

எதிர்பாராத பரிசு

திருமண(Marriage) வாழ்வில் ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்தாதீர்கள். நமது கணவன்(Husband) தானே என உங்களுக்குப் பிடித்த விஷயங்களை அவரிடம் திணிக்காதீர்கள். உங்களுக்கு மஞ்சள் கலர் பிடித்தால் உங்கள் துணைக்கும் அந்த கலரே பிடிக்க வேண்டும் என அவசியமில்லை. அதற்குப் பதில் அவருக்குப் பிடித்த கலரில் ஒரு ஷர்ட்,வாட்ச், டீ-ஷர்ட் என ஏதாவது ஒன்றை வாங்கி சர்ப்ரைஸாக கொடுத்துப்பாருங்கள். என்மீது எவ்வளவு அக்கறை என மனிதர் நெகிழ்ந்து விடுவார்.

ADVERTISEMENT

சமையல்(Cooking)

ஞாயிறு மதியம் சமையல்(Cooking) உனது விரும்பி நீ சமைத்திடுவாய் என திரிஷா,விக்ரமை பார்த்துப்பாட பதிலுக்கு அவரும் தக்காளி-வெங்காயம் வெட்டி மாங்கு,மாங்கென சமையல்(Cooking) செய்து கொண்டிருப்பார். இதுபோல நீங்களும் உங்கள் மனைவிக்கு வாரத்தில் ஒருநாள் சமைத்துக் கொடுங்கள். நீங்கள் சுமாராக சமைத்திருந்தாலும் அதனை சூப்பர் என சொல்லி மிச்சம் வைக்காமல் உங்கள் மனைவி சாப்பிடுவார்.பிரமாதமாக சமைத்து அசத்துவதை விட அன்பே பிரதானம் என்பதை நீங்கள் உணரும் தருணமாக அது இருக்கும்.

சின்னச்சின்ன

ADVERTISEMENT

திருமணத்துக்கு(Marriage) முன் அல்லது காதலிக்கும்போது மற்றவரின் பாசிட்டிவ் பக்கம் மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும். தொடர்ந்து திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் போதுதான் மற்றவரின் நெகட்டிவ் சைடும் உங்களுக்குத் தெரியவரும். ஒருவேளை கணவன்/மனைவியின் நெகட்டிவ் பக்கம் அதாவது கோபம்,பிடிவாதம் போன்றவை தெரியவரும்போது இவனப் போய் கல்யாணம் (Marriage) பண்ணிக்கிட்டோமே என யோசித்து வாழ்க்கையை நொந்து கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக அவரின் சின்னச்சின்னஆசைகளையும்,விருப்பங்களையும் தெரிந்து கொண்டு நிறைவேற்றப் பாருங்கள். சின்ன வயதில் அவர் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன விஷயத்தை நீங்கள் மெனக்கெட்டு அவருக்காக செய்யும்போது, பதிலுக்கு அவரும் நெகிழ்ந்து போய் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முன்வருவார்.அப்புறம் ஒன்றா ரெண்டா ஆசைகள்னு நீங்க ரொமாண்டிக்(Romantic) டான்ஸ் ஆடலாம்.

தோள்கொடுங்கள்

ADVERTISEMENT

உங்கள் கணவன்(Husband)/மனைவியின்(Wife) கனவுகளுக்குத் தோள் கொடுங்கள். தோள் கொடுப்பது என்றால் அவர் எதையாவது செய்யும்போது விழாமல் கீழே பிடித்துக்கொள்வது அல்ல.அவரின் மேல்படிப்புக்கு உறுதுணையாக இருப்பது, புதிய விஷயங்களை அவர் கற்கும்போது உற்சாகமூட்டுவது என அவரின் செயல்களுக்கு ஒரு உற்ற தோழியாக இருங்கள். அவ்வளவு ஏன் ஒரு ராயல் என்பீல்டு வாங்க வேண்டும் என்பது கூட அவரின் நெடுநாள் ஆசையாக இருக்கலாம். அந்த ஆசையை நீங்கள் நிறைவேற்றும்போது அல்லது அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கும்போது எவ்வளவு நல்ல மனைவி என நெகிழ்ந்து போய்விடுவார்.பிறகு வாழ்நாள் எல்லாம் வசந்தகாலம் தான்.

மரியாதை

என் கணவன்(Husband)/மனைவிக்கு(Wife) ஒண்ணுமே தெரியாது என மற்றவர்கள் முன்னிலையில் சொல்லி விடாதீர்கள். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுங்கள். அதற்காக வாங்க,போங்க என பேசவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த இடத்திலும் இடத்திலும் உங்களவரை விட்டுக்கொடுத்தில்லை என்னும் உணர்வு நீங்கள் அவருக்கு அளிக்கும் விலைமதிப்பில்லாத பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

தாம்பத்தியம்(Sex)

கடமைக்கு தாம்பத்தியத்தில்(Sex) ஈடுபடாமல் உங்கள் கணவன்/மனைவிக்கு எது பிடிக்கும்? எந்த மாதிரி விஷயங்கள்? அவரை ஈர்க்கும் என்பதைத் தெரிந்து கொண்டால் அது இன்னும் இனிமையாக இருக்கும்.எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்தாமல் இருவரும் மனம் விட்டு பேசி தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ‘ஐஸ்கிரீம் மீது இருக்கும் செர்ரி’ போல கொஞ்சம் எக்ஸ்ட்ரா இனிப்பாக இருக்கும்.இதெல்லாம் சரியா நடக்கும்போது வாழ்க்கை ரொம்பவே ரொமாண்டிக்(Romantic) ஆக இருக்கும்.

மேலே சொன்ன விஷயங்களைப் படித்துவிட்டு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா டைம் இல்லப்பா என ஓடாமல், இவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் எல்லோரும் உங்களைப் பாத்து ‘சுத்திப்போடுங்கப்பா இந்த ஜோடிக்குன்னு’ சொல்வாங்க. அப்புறம் என்ன மத்தவங்க ‘பொறாமைப்படுற’ மாதிரி ஒரு ‘ரொமாண்டிக்’ (Romantic) வாழ்க்கை வேணுமா? அப்டின்னு நீங்க மத்தவங்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுக்கலாம்..

ADVERTISEMENT
23 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT