logo
ADVERTISEMENT
home / அழகு
பல்வேறு நற்குணங்கள் நிறைந்த ஆலிவ் ஆயில் பாடி வாஷ்… வீட்டிலேயே தயாரிக்கலாம்!

பல்வேறு நற்குணங்கள் நிறைந்த ஆலிவ் ஆயில் பாடி வாஷ்… வீட்டிலேயே தயாரிக்கலாம்!

தற்போது பாடி வாஷ் எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவருகிறது. பாடி வாஷ் எளிமையான முறையில் உடலை சுத்தப்படுத்த உதவினாலும் இதன் விலை சற்று அதிகம் தான். மேலும் கடைகளில்  வாங்கும் பாடி வாஷில் உள்ள ரசாயனங்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டுள்ளன. 

இதனால் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இந்த பிரச்னைகளை தவரிக்க வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம். 

இதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களுடன் ஆலிவ் ஆயில் கலந்து எளிமையாக தயாரிக்கலாம். ஆலிவ் எண்ணெய் (olive oil) நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. 

ADVERTISEMENT

pixabay

குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம். 

மேலும் படிக்க – சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வாழைப்பழத் தோல்!

சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.

ADVERTISEMENT

இத்தகைய நற்குணங்கள் நிறைந்த ஆலிவ் ஆயிலை கொண்டு பாடி வாஷ் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம். 

தேவையான பொருட்கள் 

தேன் – 4 ஸ்பூன் 
நாட்டுச் சர்க்கரை – 2 ஸ்பூன், 
ஆலிவ் ஆயில் – 5 ஸ்பூன் 

செய்முறை : 

ADVERTISEMENT

முதலில் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் கலந்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் (olive oil) சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு குப்பியில் எடுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள். 

இதில் சிறிதளவு கலவையை கைகளில் எடுத்து 5 முதல் 10 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 

pixabay

ADVERTISEMENT

இதனை வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும்.

மேலும் படிக்க – பெப்பர்மிண்ட் எண்ணெய் மற்றும் ஆச்சர்யம் தரும் அதன் பயன்கள் !

தேனில் உள்ள உமிழும் பண்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. நாட்டுச் சர்க்கரை இறந்த சரும செல்களை அகற்றி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும். 

ஆலிவ் எண்ணெயில் (olive oil) ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைத் தரும். மேலும் ஆலிவ் ஆயில்லில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் சருமத்தின் அழுக்கு, மாசு மற்றும் யுவி கதிர்கள் உள்ளிட்ட பிரிரேடிகள்களில் இருந்து காக்கிறது. 

ADVERTISEMENT

pixabay

மேலும் சூப்பர் மாய்ஸ்சரைசிங் அளிப்பதோடு முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து பருக்களையும் இது குறைக்க உதவுகிறது. 

தேங்காய் நீரில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக மாற்றுகிறது. 3 தேக்கரண்டியளவு தேங்காய் நீர், 2 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் அப்ளை செய்து கழுவுங்கள்.

ADVERTISEMENT

இதனை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்யலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – உங்களுக்கும் வேண்டுமா என்றும் இளமை ரகசியம்-நடிகை தமன்னாவின் அழகு ரகசியங்கள்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT