உங்களுக்கு யாராவது 'இப்படி' முத்தம் குடுத்து இருக்காங்களா?

உங்களுக்கு யாராவது 'இப்படி' முத்தம் குடுத்து இருக்காங்களா?

ஆஹா கூசுது முத்தம் முத்தம் அந்தப் படத்துல அத்தன லிப்லாக் சீன், பேமிலியோட போய் பாக்க முடியாது போல இந்த வசனங்களை வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். பெரும்பாலான படங்களிலும், காதல் கதைகளிலும் முதல் முத்தத்தை அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருப்பார்கள். காதல் தோல்வி அடைந்தவர்களால் மட்டுமல்ல, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாலும் கூட தங்களது முதல் முத்தத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.இன்னும் கூட 'படம்னா அது இங்லீஷ் படம் தான்யா என்னமா கிஸ் அடிக்கிறான்' என்று ஆதங்கப் படாதவர்கள் இங்கு மிகக்குறைவே. முத்தம் குடுக்குறது மட்டும் இல்ல, அதப்பத்தி பேசுறது, படிக்கிறது, பாக்குறது எல்லாமே நம்மள கண்டிப்பா சந்தோஷப் படுத்தும். நமக்கு புடிச்ச ஹீரோ காதலிக்கு உருகி,உருகி முத்தம் குடுக்கும்போது நாமளும் இப்படி லவ் பண்ணி நம்ம காதலிக்கு முத்தம் குடுக்கணும்னு நம்ம அறியாமலேயே தோணும்.


 


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த முத்தத்துல எவ்வளவு வெரைட்டி இருக்கு, எந்த எடத்துல முத்தம் குடுத்தா என்ன அர்த்தம், முத்தம் எப்படி குடுக்கணும் அப்படிங்கிறத பத்தி இங்கே பாக்கலாம்.


 


முத்த வகைகள்(Types Of Kisses): 


பிரெஞ்ச் முத்தம் (French Kiss): இதுதான் ரொம்ப நீளமான,ஆழமான முத்தம். உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கை தொட்டுக் கொடுப்பது. வெகுநேரம் நீடிக்கும் முத்தம்.


சாதாரண முத்தம்: உதட்டை லேசாக டச் பண்ணிவிட்டு, விட்டுவிடுவது.


மென்மையான முத்தம்(Light Kiss): கீழ் உதட்டை மட்டும் முத்தமிடுவது.


பட்டாம்பூச்சி முத்தம்(Butterfly Kiss): காதலன் காதலிக்கோ-காதலி காதலனுக்கோ கண்ணில் முத்தம் கொடுப்பது. முத்தம் கொடுக்கும்போது கண் இமைகள் மூடிக்கொண்டு, இமைகள் வந்து இறக்கைகள் போல மறைக்கும் என்பதால் இந்த பெயர்.


 ஸ்பைடர்மேன் முத்தம்(Spiderman Kiss): ஆணும், பெண்ணும் தலைகீழாக இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது.


உதட்டோடு உதடு: குறைந்தபட்சம் 20 விநாடிகள் முத்தம் கொடுப்பது.


முத்தத்தின் நன்மைகள்:


ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, மன அழுத்தம் குறையும். ஒவ்வாமை குறையும். உடல் ரிலாக்ஸ் ஆகும். தொடர்ந்து 1 நிமிடத்திற்கு மேல் முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.உணர்ச்சிகளுக்குக் காரணமான அட்ரினலின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும்.எந்த இடத்துல முத்தம் குடுத்தா? என்ன அர்த்தம்?


பொதுவா நமக்கு புடிச்சவங்கள பாக்கும்போது நெத்தில முத்தம் குடுப்போம். கொழந்தைங்க, சின்ன பசங்களுக்கு நெத்தி, கன்னத்துல முத்தம் குடுப்போம். காதலி,மனைவினா யாரும் இல்லாதப்ப உதட்டுல முத்தம் குடுப்போம். இது தாண்டியும் நெறைய முத்த வகைகள் இருக்கு. எந்த இடத்துல முத்தம் குடுத்தா?என்ன அர்த்தம்னு? தெரிஞ்சிக்கலாம் வாங்க..உதட்டு முத்தம்:யாராவது உங்க உதட்டுல முத்தம் குடுத்தா அவர் உங்கள உயிரை விட மேலாக நேசிக்கிறார்னு அர்த்தம்.


கைகளில் முத்தம்:உங்க கைல முத்தம் குடுத்தா அவர் உங்கள ரொம்ப மதிக்கிறார்னு அர்த்தம். கழுத்து முத்தம்:உங்க கழுத்துல ஒருத்தர் முத்தம் குடுத்தா பதிலுக்கு நீங்க அவருக்கு வேணும்னு அர்த்தம்.


கன்னத்து முத்தம்:உங்க கன்னத்துல ஒருத்தர் முத்தம் குடுத்தா உங்ககிட்ட பிரெண்ட்ஷிப்பா இருக்க விரும்புறார்னு அர்த்தம்.


நெற்றி முத்தம்: உங்க நெத்தில ஒருத்தர் முத்தம் குடுத்தா அதுக்கு வாழ்நாள் முழுக்க உங்களளோட அன்பு அவருக்கு வேணும்னு அர்த்தமாம்.


மூக்கு மேல முத்தம்: உங்க மூக்கு மேல ஒருத்தர் முத்தம் குடுத்தா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள விட அழகு வேற யாரும் இல்லேன்னு அர்த்தம்.


கண்களில் முத்தம்: உங்க கண்கள்ல யாராவது முத்தம் குடுத்தா அதுக்கு நான் எப்போதும் உன்கூட இருக்க விரும்புறேன்னு அர்த்தம்.
முத்தம் குடுக்குறதுல இவ்வளவு விஷயம் இருக்கானு? இத படிச்சிட்டு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு ஆர்வமா முத்தம் குடுக்க போறீங்களா? அதுக்கு முன்னால இதையும் படிச்சிட்டு போங்க. முத்தம் குடுக்குறதுக்கு முன்னால சிகரெட்,ட்ரிங்ஸ் கண்டிப்பா வேண்டாம். சிகரெட் குடிச்சிட்டு, ட்ரிங்ஸ் சாப்ட்டு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு நீங்க முத்தம் குடுத்தா, அடுத்த தடவ அவங்க உங்கள பக்கத்துலயே விட மாட்டாங்க. முடிஞ்சா ஏலக்காய், பெப்பர் மிண்ட் இந்த மாதிரி ஏதாவது சாப்பிட்டு உங்க ஆளுக்கோ, மனைவிக்கோ குடுத்து பாருங்க. அது வெறும் முத்தத்தோட நிக்காம இன்னும்,இன்னும்னு போயிட்டே இருக்கும்...


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ, பேக்செல்ஸ்   


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.