logo
ADVERTISEMENT
home / அழகு
இயற்கையான முறையில் உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வுகள்!

இயற்கையான முறையில் உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வுகள்!

சில பெண்களுக்கு காது ஓரங்களிலும், கன்னத்திலும், தாடையின் கீழும், உதட்டுக்கு மேல் மீசை போன்றும் அதிகப்படியான முடிகளைப் பார்க்கலாம்.  அதிகமான ஹார்மோன்  உற்பத்தி காரணத்தினால் இப்படி முடி வளரும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். 

ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும். முடி வளர்ச்சியை  கட்டுப்படுத்தும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் இவை தற்காலிக தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரமாக இருக்காது. இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

pixabay

ADVERTISEMENT
  • உதட்டிற்கு மேல் மீசை போன்று வருவதை தடுக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மைதாவுடன், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து உதட்டிற்கு மேல் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்.
  • தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து உதட்டிற்கு மேல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் உதட்டின் மேல் (upper lip) வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

அனைத்து வித சரும பிரச்சனைகளையும் நீக்க கடலை மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொண்டு, அதனுடன் துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

pixabay

  • எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி பின் அதனை இறக்கி குளிர வைத்து காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.
  • மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து அந்த கலவையை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து பின் அதனை மேலும் கீழுமாக தேய்த்து கழுவ வேண்டும். விரைவில் முடி உதிர்ந்து விடும். 
  • ஒரு பௌலில் எலுமிச்சையை சாறு எடுத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதனை உதட்டிற்கு மேல் (upper lip) பகுதியில் தடவி உலர விட வேண்டும். பின்னர் தேய்த்து கழுவினால் விரைவில் சரியாகும். 

குளிர்காலத்தில் உங்கள் சரும அழகை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

ADVERTISEMENT
  • பொட்டுக்கடலை மாவுடன் நீர் சேர்த்து, அதில் 1 சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும். உதட்டின் மேல் இந்த கலவையை தடவவும். நன்றாக காய்ந்தவுடன் முடிகள் இருக்கும் பகுதியில் மேல் நோக்கி ஸ்க்ரப் செய்து அந்த கலவையை நீக்கி விட்டு நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம். 

pixabay

  • ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, யோகர்ட் மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். இந்த பேஸ்டை கொண்டு உதட்டின் மேற்புறம் மென்மையாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடம் கழித்து மென்மையாக காய்ந்த கலவையை தேய்த்து எடுத்து விட்டு தண்ணீரால் முகத்தை கழுவவும். உதட்டின் மேல் உள்ள முடிகள் உதிரும் வரை இதனை செய்யலாம். 
  • குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து இரவு தூக்கம் முன்னர் மேல் உதட்டில் (upper lip) பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் மீசை போல் இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
22 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT