இந்த விஷயத்துல 'தல' அஜித்த அடிச்சுக்கவே முடியாது... முழுவிவரம் உள்ளே! | POPxo

இந்த விஷயத்துல 'தல' அஜித்த அடிச்சுக்கவே முடியாது... முழுவிவரம் உள்ளே!

இந்த விஷயத்துல 'தல' அஜித்த அடிச்சுக்கவே முடியாது... முழுவிவரம் உள்ளே!

அஜித்குமார்தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். வெற்றி,தோல்வி,பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதைத் தாண்டி தியேட்டர்களில் இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைப்பதால் 'ஓபனிங் கிங்' என பெயரெடுத்தவர். தல என ரசிகர்களாலும், சக நடிகர்களாலும் அழைக்கப்படும் அஜித் ஒரு ட்ரெண்ட் செட்டரும் கூட. சால்ட்&பெப்பர் லுக்கில் வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ட்ரெண்ட் செட் செய்தவர். வீரம் படத்தில் வேட்டி-சட்டை அணிந்து கலக்கிய தல நீண்ட இடைவெளிக்குப் பின் விஸ்வாசம் படத்தில் வேட்டி-சட்டை அணிந்து கிராமத்து மனிதராக நடித்திருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அஜித்,நயன்தாரா காஸ்ட்யூம்கள்(Costumes) குறித்து இங்கே பார்க்கலாம்.


விஸ்வாசம் (Viswasam) விவேகம் படத்திற்கு பின் சரியாக 1 வருடம் 4 மாதங்கள் கழித்து தல அஜித்குமாரின் நடிப்பில் 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வருகின்ற ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித்-சிவா கூட்டணி இப்படத்தில் இணைந்திருக்கிறது.


நயன்தாரா


 பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக நயன்தாரா (Nayanthara) இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முந்தைய 3 படங்களிலும் செம ஸ்டைலிஷாக நடித்திருந்த நயன் இப்படத்தில் புடவை கட்டி அசல் கிராமத்து பெண்ணாக நிரஞ்சனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


வேட்டி-சட்டைமுன்னதாக அட்டகாசம்,வீரம் படங்களில் படம் முழுவதும் வேட்டி-சட்டை அணிந்து அஜித் (Ajith) நடித்திருந்தார்.அதேபோல இப்படத்திலும் வேட்டி-சட்டை அணிந்து அஜித் நடித்திருக்கிறார். ஆனால் அட்டகாசம், வீரம் படங்களைப் போல முழுவதும் வெள்ளை-வேட்டி சட்டை இல்லாமல், வயதான தோற்றத்தில் வரும் அஜித் வெள்ளை-வேட்டி சட்டையும், இளமையான தோற்றத்தில் வரும் அஜித் வெள்ளை வேட்டி-கலர் சட்டைகள் அணிந்தும் நடித்திருக்கிறார்.


முறுக்கு மீசை 


இப்படத்தில் மதுரைக்காரராக நடித்திருக்கும் அஜித் முழு வெண்மையில் உடை அணிந்து அதற்கு ஏற்ப வெள்ளை முடி, முறுக்குமீசை என அசல் கிராமத்துக்காரராக கம்பீரமாக இருக்கிறார்.


கலர் சட்டை-கருப்பு முடிமங்காத்தா தொடங்கி ஆரம்பம், வீரம், வேதாளம்,என்னை அறிந்தால்,(இப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் வருவார்) விவேகம் உள்ளிட்ட படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த தல விஸ்வாசம் படத்தில் இளமையான அஜித்தாக வருகிறார். இது அவரது ரசிகர்களை தீவிர உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல சிவப்பு, ஊதா, கருப்பு, பச்சை,மஞ்சள் என கலர் சட்டைகள் அணிந்து வெள்ளை கலர் வேட்டி கட்டி நடித்துள்ளார். வெள்ளை கலர் க்ளோஸ் பனியன் அணிந்து அதற்கு மேல் அஜித் கலர் சட்டை அணிந்து நடித்திருக்கிறார்.ட்ரெண்டிங்வீரம் படத்தில் அஜித் முழு வெள்ளை வேட்டி-சட்டை அணிந்து நடித்தபோது அந்த ஆண்டில் கோ-ஆப்டெக்சில் மட்டும் சுமார் 2.75 லட்சம் வேட்டிகள் விற்பனையானது. இதுதவிர இப்படத்தின் வெளியீட்டிற்குப்பின் வேட்டி விற்பனை அதிகரித்ததை முன்னணி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.அதேபோல இந்த ஆண்டும் பொங்கலுக்கு வேட்டி மற்றும் கலர் சட்டைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரசிகர்கள்வழக்கமாக ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகனின் படம் வெளியாகும் போது அதேபோல உடை அணிந்து தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் 'தூக்குதுரை' போல வெள்ளை வேட்டி, க்ளோஸ் பனியன், கலர் சட்டை, தங்க வாட்ச், கூலிங்கிளாஸ் அணிந்து விஸ்வாசம் படத்தை தியேட்டருக்கு சென்று ரசிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.


புடவைஅஜித் போல நயன்தாராவும் கட்டம் போட்ட புடவை அணிந்து கிராமத்து தேவதையாக நிரஞ்சனா என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். கடந்த வருடம் வெளியான 96 படத்தில் திரிஷா அணிந்து நடித்த மஞ்சள் கலர் டாப் இளம்பெண்கள் மத்தியில் மிகுந்த பிரபலமாகி, கடைகளிலும் விற்பனைக்கு வந்தது. அதேபோல இந்த ஆண்டு நயனின் புடவைகள் இளம்பெண்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைகளில் இந்த ரக புடவைகள் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.


பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo...

Read More from Fashion
Load More Fashion Stories