KhayalRakhna By Philips
  Power Women List

  Advertisement

  Dating

  முதல் தடவை அது’ நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்

  Deepa LakshmiDeepa Lakshmi  |  May 14, 2019
  முதல் தடவை அது’ நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்

  முன்பெல்லாம் தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்ய தனக்கு பிடித்த ஆணை முடிவு செய்ய பெண் பார்க்கும் படலம் என்றொரு விஷயம் இருந்தது. ஆனால் மில்லினியம் கிட்ஸ் களுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

  தன்னோடு வாழ போகும் பெண்ணையோ ஆணையோ தானே பழகி பார்த்து முடிவெடுக்கிறேன் என்கிறார்கள். டேட்டிங் ( Dating) என்று இதற்கு பெயர். முதலில் இருவரும் சந்திப்பார்கள். அந்த சந்திப்பு இருவருக்கும் ஓகே என்றால் இரண்டாவது டேட்டிங் செல்வார்கள். இப்படியே ஐந்தாறு டேட் சென்ற பின்னர் உடன் வரும் துணையின் குணங்களை அலசி ஆராய்ந்த பிறகு அவர்கள் திருமணத்திற்கு ஓகே சொல்வார்கள்.

  நாங்கள் திருப்தி அடையவில்லை – தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்

  ஐந்தாறு டேட்டிங் என்பது விதி என்றாலும் ஒரு சிலர் ஒரு வருடம் வரைக்கும் கூட டேட் செல்கின்றனர். லிவிங் டுகெதர் வாழ்வில் இருக்கின்றனர். அதெல்லாம் முடிந்து தன்னை சகித்து கொள்ளும் தான் சகித்து கொள்ளும் ஒரு துணை கிடைத்தால் ஓகே சொல்கின்றனர்.

  அப்படி நடந்த டேட்டிங் கில் முதல் முறை அவர்களுக்குள் ஏற்பட்ட சுவாரஸ்யமான விஷயங்களை பெண்கள் ஆன்லைன் மூலம் பகிர்ந்தனர்.

  நீண்ட நாள் முன்பே நாங்கள் இந்த டேட்டிற்கு பிளான் செய்திருந்தோம். ஹோட்டலுக்கு அருகே வரும்போது அவனுக்கு ஒரு கால் வந்தது. ப்ளூடூத் ஸ்பீக்கரில் அதனை அட்டென்ட் செய்தான். நானும் ஆகா என்ன ஒரு நேர்மை என்று வியந்தேன். ஒரு பெண் பேசினாள். இன்றுதான் அவள் ஊரில் இருந்து வந்தாள் என்றும் உன்னை சந்திக்கலாமா என்றும் கேட்டாள். அதுமட்டும் இல்லாமல் உன்னை ரொம்ப எதிர்பார்க்கிறேன் என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னாள். கவலையே படாத இன்னிக்கு நைட் உன்ன ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என்றான் என்னையும் வைத்து கொண்டே!

  உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!

  நாங்க டேட் போனப்ப அவன் கார்ட் மறந்து வச்சுட்டேன் னு சொன்னான். பரவாயில்லைனு நானே செலவு பண்ணினேன். அன்னைக்கு நைட் ஒரு பொண்ணு இன்ஸ்டால மெசேஜ் பண்ணினா. நானும் அவனும் 3 வருஷமா லவ் பண்றோம். நீ எப்படி என் பாய்பிரெண்டோட டேட் போகலாம்னு செம டோஸ் விட்டா. என்னால ஒரு நாளே அவன் கூட இருக்க முடியல.. அவ எப்படித்தான் 3 வருஷமா இருக்காளோ தெரியல.

  விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..

  நீண்ட நாளா ஆன்லைன்ல பேசிட்டே இருந்த ஒருத்தர எனக்கு பிடிச்சுது. ஒவ்வொரு வாரமும் டேட்  போலாம் போலாம்னு அவர் கேட்டுகிட்டே இருந்ததால நானும் போனேன். அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது அவர் ஒரு எம்எல்எம் ஆள்னு. எல்லாம் என் நேரம் னு பேசாம வந்துட்டேன்.

  உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..

  நாங்க டேட்டிங் போனப்ப எல்லாமே நல்லாத்தான் போய்ட்டிருந்தது. சாப்பிட்டு முடிஞ்சதும் பக்கத்துல பார்க் இருக்கு வாங்க பேசிக்கிட்டே நடக்கலாம்னு கூப்பிட்டான். நல்ல கிளைமேட் அழகான பார்க் னு நானும் போனேன். ஆளரவம் இல்லாத ஒரு இடத்துக்கு வந்ததும் உன்ன கொலை பண்ணி இங்க போட்டுட்டா யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுல்லன்னு வித்யாசமா சிரிக்க வேற ஆரம்பிச்சான். அதோட சரி அவன் எப்ப டேட் கூப்பிட்டாலும் நான் போகவே இல்ல. ஆத்தாடி என்னமா டேட் பண்ணறாய்ங்க இந்த பசங்க !

  அது ஒரு ரொமான்ஸான டேட். அந்த ஹாட்டான நேரத்துல எனக்கு ஒரு கால் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனு. அதப்பத்தி அவன்கிட்ட நான் பேசிக்கிட்டிருக்கும்போதே விடாம கிஸ் பண்ண ஆரம்பிச்சான். அதோட சரி. அதுக்கு மேல அவனை மீட் பண்ண நான் விரும்பவே இல்ல.

  இந்த பொசிஷன்களை ட்ரை பண்ணினால் மல்டிபிள் ஆர்கஸம் கேரண்டீ !

  அன்னிக்கு நானும் அவனும் டேட் போறதா இருந்தது. காலைல பிக்கப் பண்ணிக்கறேன் னு சொன்னான். கொஞ்சம் லேட் பண்ணினான். வெயிட் பண்ணறப்ப ஒரு மெஸேஜ் வந்தது. சாரி பேப் (babe) நான் இன்னிக்கு சர்ச்சுக்கு போறேன் வர முடியாது அப்படினு வந்தது. நான் எனக்கு வந்த மெஸேஜ் னு நினைச்சு பதில் அனுப்பறதுக்குள்ள அவன்கிட்டேர்ந்து அவசரமா ஒரு மெஸேஜ் வந்தது. தங்கச்சிக்கு அனுப்பறதுக்கு பதிலா உனக்கு அனுப்பிட்டேன்னு. எந்த அண்ணனாவது தங்கச்சிய அப்படி கூப்டுவானா . அதோட டேட் கட்.

  அன்றில் பறவைகள் ஒன்றாகும் போது.. லிவிங் டு கெதர் – தேவைகளும் தீர்வுகளும் !

  நாங்க டேட்டிங் போனப்ப காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அவன் அவனோட காதல் தோல்விகளை சொல்லிகிட்டே இருந்தான். என்ன சண்டை ஏன் பிரிஞ்சாங்க இதேதான் பேச்சு. இதுக்கு எதுக்கு என்கூட டேட் வரணும் போன்லயே பேசிருக்கலாம்னு நினைச்சேன். கடைசில பார்த்தா நீ எங்க வேலை செய்யற எவ்வளவு சம்பளம் வாங்கற உன் பிளாட்ல எத்தனை பேர் இருக்காங்கனு நான் தங்கலாமா னு கேட்டான். இனிமே டேட் போவியான்னு என்னை நானே கேட்டுக்கிட்டது தான் மிச்சம்.

   

  டேட்டிங் கு வீட்டுக்கு கூப்ட ஒரே ஆள் என் ஆளாத்தான் இருக்கணும். எனக்கும் அவரை பிடிச்சதால போனேன். அங்க போனா அவரோட அப்பா அம்மா இருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு பேசிகிட்டு இருந்தோம். அது டேட்டிங் கா நிச்சயதார்த்தமானே தெரியல. கடைசில எங்களுக்கு நிச்சயம் ஆகி கல்யாணமும் நடந்துட்டது.

  உங்களை ஆள்பவரை மயங்க வைக்க சில தித்திக்கும் முத்த வகைகள் !

  புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

  வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் – நடிகரின் வேதனை

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.