நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்

நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்

தாம்பத்யம் எனும் தமிழ் வார்த்தையே அற்புதமானது. எல்லாவகையிலும் ஒன்றான இரண்டு இதயங்கள் உடல் அளவிலும் ஒன்று படுவதே தாம்பத்யம். இதனை தற்போதைய நவீன யுகம் வேறு வேறாக பேசி கூறுகளாக்கி வீசி இருந்தாலும் இன்றளவும் தாம்பத்யம் என்பது தம்பதிகளுக்குள்ளே நடக்கும் விஷயமாக பெரும்பாண்மை குடும்பங்களில் நடந்து வருகிறது.


இன்னாருக்கு இன்னார்தான் என்று முடிவான பின்னர் அவருடனே நம்முடைய வாழ்க்கை பயணம் தொடர போகிறது என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு உண்டு. அப்படி திருமணம் முடிந்த பெண்கள் தாம்பத்யத்தில் சிறப்பை காணவில்லை என்றால் அவர்களது மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்.


முதல் வருடம் வரை சந்தோஷமாக போகும் தாம்பத்ய உறவு குழந்தை எனும் புதிய உயிர் உள்ளே வருகையில் கொஞ்சம் தயங்கி நேரம் எடுத்து கொண்டு மெல்லமாக உள்ளே நுழையும். இருவரும் வேலைக்கு போவது தொழிலில் சாதிப்பது போன்ற காரணங்களும் தாம்பத்யத்தின் இடைவேளைக்கு காரணம் ஆகிறது.


தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!


sex %281%29


தாம்பத்யத்தில் (sex) பெண்கள் திருப்தி அடைவது குறைவான சதவிகிதம் என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. திருமணம் முடிந்த பெண்களிடம் சர்வே செய்த போது 31 சதவிகித பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாக தகவல் கிடைத்திருக்கிறது. 44 சதவிகிதம் பெண்கள் ஏதோ திருப்தி அடைவதாகவும் 12 சதவிகிதம் பெண்கள் சுத்தமாக திருப்தி இல்லை என்றும் கூறி இருக்கின்றனர். மீதம் உள்ள 13 சதவிகித பெண்களுக்கு திருப்தி என்றால் என்ன என்றே தெரியவில்லை.


தாம்பத்யத்தில் பெண்களை சந்தோஷப்படுத்துவது


பெண்களின் தாம்பத்யம் குறித்த சர்வே இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்துள்ளது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் முன் விளையாட்டுக்கள் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். சென்னை பெண்களில் 92 சதவிகிதம் பேர் முன்விளையாட்டுகளில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று விரும்புகின்றனர்.


அதன் மூலமே தாங்கள் திருப்தி அடைந்து விடுவதாக 64 சதவிகித பெண்கள் கூறுகின்றனர். இதனை டெல்லி பெண்கள் மற்றும் மும்பை பெண்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர்.


தமிழ்நாட்டில் வாரம் எவ்வளவு முறை


30-35 வயது கொண்ட தமிழ்நாடு தம்பதிகள் வாரத்துக்கு மூன்று முறை கலவி கொள்கிறார்களாம். தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் ஒரு மாதத்தில் 5 முதல் 12 முறை வரை கலவி கொள்கிறார்களாம். வெகு சிலரே மாதம் 2 முறை கலவி கொள்கின்றனர்.


உங்களவரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கும் சில முத்த வகைகள்வடமாநிலங்களில் பெண்கள் நிலை


இதே சமயம் வடமாநிலங்களில் பெண்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் போன்ற கவனசிதறல்கள் இருப்பதால் அவர்கள் அந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவது இல்லையாம். மாதம் 5 முதல் 8 தடவை என்பதே அதிகம் என்கின்றனர்.


முதல் அழைப்பு


இன்னமும் பெரும்பாலான பெண்கள் 88 சதவிகிதம் பேர் கலவிக்கு தாங்களே முன்வந்து அழைப்பதை தவறாக நினைக்கிறார்களாம். என்னவாக இருந்தாலும் ஆண்தான் அதற்கான படிகளை எடுக்க வேண்டும் என்கிறார்களாம். அலுவலக வேலைக்கு செல்லும் பெண்களோ வீட்டிற்கு சீக்கிரம் வருகிறேன் போன்ற சங்கேத மொழிகளை கணவருக்கு அனுப்புவார்களாம். வீட்டில் இருக்கும் பெண்கள் பூ வாங்கி வாங்க என்பதை சங்கேத மொழியாக வைத்திருக்கிறார்களாம்.


உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..அவரால் முடிந்தது இவ்வளவுதான்


பெரும்பாலான தாம்பத்ய உறவுகள் ஆணின் வேட்கை தீர்ப்பதற்காகவே நிகழ்வது இன்னமும் காலத்தின் கொடுமைதான். அவர்களை விட்டு விட்டு பார்த்தால் தாம்பத்ய உறவிற்கு பின்னர் இருவரும் அது பற்றி பேசுவது ஆரோக்கியமானது என்கிறது மருத்துவம். சூப்பர், குட், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் போன்றவை தூண்டுதலாக இருக்கும். இந்திய பெண்களில் 82 சதவிகிதம் பேர் இப்படி பேசுகிறார் என்கிறது சர்வே.


ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரையோ இன்னமும் நம் பெண்கள் முகம் மூடி வெட்கி கிடக்கவே விரும்புகிறார்களாம். கூச்சங்கள் இருப்பதாலும் அது பற்றி பேசினால் கணவருக்கு பிடிக்காது என்பதாலும் பேசுவதில்லை என்கிறார்கள். ஒரு சிலர் குறிப்பால் உணர்த்துவதாகவும் ஒரு சிலரோ அவரால் முடிந்தது இவ்வளவுதான் என்று விட்டு கொடுக்கிறார்களாம்.


ஷில்பா ஷெட்டியின் தாம்பத்ய ரகசியங்கள் !


உச்சக்கட்டம்


தாம்பத்யத்தில் முக்கியமே உச்ச கட்டம் என்பதால் இதை பற்றி பேசாமல் இந்த கட்டுரையை நிறைவு படுத்த முடியாது. க்ளைமேக்ஸ் சுகங்கள் அவர்களின் பார்ட்னரின் உதவியுடன்தான் பெண்கள் பெற முடியும் என்பது இயற்கை விதி. சுய இன்பம் மூலம் 62 சதவிகித பெண்களும் ஓரல் செக்ஸ் மூலம் 34 சதவிகிதம் பெண்களும் ஆர்கஸம் அடைவதாக கூறியிருக்கின்றனர். வேறு சிலர் வெஜினாவை தூண்டுவதன் மூலமே ஆர்கஸம் அடைவதாகவும் முன் விளையாட்டுகளிலேயே ஆர்கஸம் வந்து விடுவதாகவும் கூறி இருக்கின்றனர்.


ஒருவருக்கொருவர் மாறுபடும் இந்த சர்வே உங்கள் தாம்பத்யத்தை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்.பேச்சு செயல் எதுவும் தேவை இல்லாமால் மெல்லிய மலர் மிக இயற்கையாக விரிவது போல உங்களுக்குள்ளே காமம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மலரட்டும். அப்படியான காமம் தனக்கான சுகங்களை தானே தேடி கொள்ளும்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.