உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..

உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..

காமம் என்பது இல்லை என்றால் இந்த உலகமே இயங்கியிருக்காது. மிருகங்கள் முதல் மனிதர்கள் இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்த அற்புத உணர்வுதான் காமம்.


இந்த உணர்வு அளவுக்குள் இருப்பதால் உலகம் சிக்கல் இல்லாமல் இயங்கலாம். எப்போது இது அளவுக்கு மீறி போகிறதோ அப்போது பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளையும் வன்புணரும் கொடூரங்கள் நடக்கிறது. நெஞ்சம் பதறும் பயங்கரமான கொலைகள் அரங்கேறுகின்றன.


ஐந்தறிவுள்ள மிருகங்களில் சில குறிப்பிட்ட இனங்கள் கூட தனது இணையை தவிர வேறு எதனோடும் உறவு கொள்ளாது. ஆனால் மிருகங்களை விட பக்குவப்பட்ட மனிதனோ முறைகேடான செக்ஸ் உறவுகளை மறைமுகமாக வைத்து கொள்கிறான்.அதே சமயம் இந்த உணர்வுகளை கட்டுப்படுத்தினால் உடல் ரீதியான பல்வேறு சிக்கல்கள் நடக்கின்றன. இயற்கை உடலுக்குள் செய்திருக்கிற ப்ரோக்ராமிங் தான் செக்ஸ் (sex) என்று வைத்து கொண்டால் அதனை ஆக்டிவேட் செய்து பின்னர் பயன்படுத்தாமல் இருப்பது நிச்சயம் உடல் அளவில் சில சிக்கல்கலை உருவாக்கும்.


தலைவலியில் ஆரம்பித்து மனநிலை பாதிப்பு வரை பல நோய்கள் உருவாக அடக்கப்பட்ட செக்ஸ் உணர்வுகள் காரணமாகின்றன. இதனை தாம்பத்யம் எனும் முறை மூலம் நேராக்கலாம். அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்யலாம் என்பதையும் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.


தொடர்ந்து காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி, காய்ச்சல், மூட்டு வீக்கம்,பலவீனம், இடுப்புவலி, உடல்நடுக்கம், இருதய நோய் வரும் வாய்ப்புகள் உள்ளன.நோய் எதிர்ப்பு சக்தி


ஆரோக்கியமான செக்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. செக்ஸ் சமயத்தில் எண்டார்பின்கள் வெளியேறுவதால் நோய்கிருமிகளோடு போராடும் வலு அதிகமாகிறது.


பிறப்புறுப்பு ஆரோக்கியமாகும்


நீண்ட இடைவெளிக்கு பின்னர் உடல் உறவு கொள்ளும் போது பெண்களின் பிறப்புறுப்பில் வலி அதிகமாக இருக்கும். பெண்களின் உடல்தன்மை படி வெஜினாவில் மென்மையான உடல் உறவு நடக்க தேவையான எண்ணெய்த்தன்மை சுரக்க அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளுமாம். தொடர்ந்த உடலுறவு அல்லது சுய இன்பம் செய்வது வெஜினாவில் உள்ள திசுக்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும்.மாதவிலக்கு வலிகள்


மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் கடுமையான வலிகள் வயிற்று வலி, உடல்வலி , நரம்பு பிடிப்பு போன்றவைகளுக்கு செக்ஸ் அற்புத மருந்தாகும். செக்ஸ் இல்லாத பெண்களுடன் ஒப்பிடுகையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் நலமாக இருக்கின்றனர். அவர்களுக்கு வலிகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடலுறவு தான் வேண்டும் என்றில்லை சுய இன்பம் போதுமானது.


இதய நோய்கள் நீங்கும்


தொடர்ந்த செக்ஸ் பழக்கம் இல்லாதவர்கள் நிச்சயம் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. உடலின் எஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் சமநிலையில் இருக்க உடல் உறவு உதவி செய்கிறது. இது உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும்


உடலுறவின் போது என்டார்பின்ஸ் மற்றும் ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் வெளியேறுகின்றன. இவைதான் நரம்பியல் ரசாயன கூறுகளில் அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துபவை. ஆக்சிடோசின் நம்மை அமைதியாக தூங்கவும் வைக்கிறது. உடலுறவு இல்லாத நேரங்கள் அதிகமாகும்போது இந்த ஹார்மோன்கள் வெளியேற வாய்ப்பில்லாத காரணத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது.


இதனை தவிர்க்க கண்டிப்பாக உடல் உறவு வைத்து கொண்டேதான் ஆக வேண்டும் என்று இல்லை. சுய இன்பம் இதற்கு மிக நல்ல தீர்வாக அமைகிறது.மேலும் பாலியல் உணர்வுகளை அடக்குவதால்தான் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. பாலியல் இச்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மேலும் சிறப்பானது. இச்சைக்கான படங்கள் பார்ப்பது , உணவுகளில் ஒழுங்கின்மை போன்றவைகளை தவிர்க்கலாம்.


மது மற்றும் போதை பழக்கங்கள் காமத்தை அதிகமாக்குமே தவிர குறைக்காது. அடிக்கடி காமம் கொள்பவர்கள் தங்கள் நெருக்கமானவர்களுடன் இதனை பற்றி உரையாடலாம். பேசும்போது பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.


ஆன்மீகத்தில் விருப்பம் இருந்தால் அதில் ஈடுபடலாம். வலுக்கட்டாயமாக உங்கள் மீது ஆன்மிகத்தை திணிக்காதீர்கள். விருப்பம் இருந்தால் மட்டுமே தொடருங்கள். நல்ல இசை உங்கள் காமத்தை குறைக்கும். உடற்பயிற்சிகள் மூலம் காமத்தை தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்த படுமாம்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


ஷில்பா ஷெட்டியின் தாம்பத்ய ரகசியங்கள் !


13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது!


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo