வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் - நடிகரின் வேதனை

வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் - நடிகரின் வேதனை

ஆர் கே சுரேஷ் அனைவரின் அடிவயிற்றையும் கலங்க வைக்கின்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது அடையாளத்தை உலகுக்கு காட்டினார். தாரை தப்பட்டை திரைப்படம் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் வில்லனுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.


தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஆர் கே சுரேஷ் ( RK Suresh) அர்ப்பணிப்புள்ள நடிகர் என்பதை அவரது திரைப்படங்களை பார்த்தவர் அறிந்து கொள்வர்.


தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் ஹீரோவாகவே அறிமுகம் ஆகியிருக்கிறார். கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என்னும் மலையாள திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்திருக்கிறார். தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இது வெளிவருகிறது.இந்த மர்மம் கலந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மஞ்சித் திவாகர். இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர் கே சுரேஷ் நடிகர் விஷால் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.


மலையாள திரைப்படங்களில் ஈகோ இல்லை அங்கே குடும்பமாக நினைத்து வேலை செய்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்படி நடப்பதில்லை. மதுர ராஜா திரைப்படத்தின் மூலம் நடிகர் மம்மூட்டி உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இனி நிறைய மலையாள படங்களில் நடிக்க போகிறேன்.இந்த திரைப்படம் பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவங்களை உங்களுக்கு நினைவு படுத்தும். இந்த படம் அனைவருக்கும் விருப்பமான படமாக இருக்கும்.


தவிர நடிகர் சங்க தேர்தலில் நான் விஷாலை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க தயாராக இருக்கிறேன். ஜேகே ரித்தீஷை அவர் பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டு விட்டார். அவர் இறந்தாலும் அவரது ஆசையை நாங்கள் நிறைவேற்றுவோம். விஷாலுக்கு எதிராக வேறொரு போட்டியாளரை நிற்க வைத்து தலைவராக்குவோம். ஜேகே ரித்தீஷ் மட்டும் அல்ல.. பலரையும் விஷால் பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டிருக்கிறார். நடிகை வரலட்சுமி இதில் அடக்கம். இதனை நான் நட்பு ரீதியாக குறிப்பிடுகிறேன்.


கார்த்தி தலைமையில் அணி இருந்தால் நாங்கள் ஆதரிப்போம். இல்லாவிட்டால் நாங்கள் வேறொரு பொறியாளரை நிற்க வைப்போம் என்று தனது மன வேதனைகளை பொது வெளியில் பேசியிருக்கிறார் ஆர் கே சுரேஷ்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                                        


---                                


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                               


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.