திருச்சி(Trichy) அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. இடத்தின் பெயர் தோற்றம் பற்றி பல்வேறு சிந்தனைகள் உலா வருகின்றன. திருச்சிராப்பள்ளி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான ‘த்ரிஷிராபுரம்’ என்ற சொல்லில் இருந்து வருகிறது.
16 ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஒரு பாறையில் உள்ள கல்வெட்டில் திருச்சிராப்பள்ளியை ‘திரு-சிள்ள-பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ‘புனித-மலை-நகரம்’ என்று பொருள். சில அறிஞர்கள் இந்நகரத்தின் பெயரானது சிறிய புனித நகரம் என்று பொருள்படும் ‘திரு-சின்ன-பள்ளி’ என்ற பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.
திருச்சி(Trichy) நகரம் தமிழ்நாட்டின் பழமையான வசிப்பிடங்களில் ஒன்றாகும். இது ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது மற்றும் பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
திருச்சியை சுற்றி உள்ள கண்கவர் இடங்கள்
வளமான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் திருச்சியை மிகவும் உன்னதமான வரலாற்று, சமய இடங்கள் நிறைந்ததாகவும் மலை கோட்டை நகரமாகவும் உருவாக்கியுள்ளது. விராலிமலை முருகன் கோயில், மலைகோட்டை கோயில், ஸ்ரீ ரங்க நாதசுவாமி கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், எறும்பீஸ்வரர் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், குணசீலம் விஷ்ணு கோயில் நாதிர் ஷா மசூதி, புனித யோவான் தேவாலம் மற்றும் புனித ஜோசப் தேவாலயம் முதலானவை இந்த வளமான வரலாற்றின் படைப்புகள் ஆகும். அத்துடன் நவாப் அரண்மனை மற்றும் கல்லணை அணக்கட்டு மற்றூம் முக்கொம்பு அணை முதலியன திருச்சியின் முக்கியவத்தும் நிறைந்த பழமையான கட்டமைப்புகள் ஆகும். பல்வேறு திருவிழாக்களான பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, பக்ரீத் , ஸ்ரீரங்கம் கார் திருவிழா, தீபாவளி மற்றும் பண்டிகைகள் மிகவும் ஆடம்பரமாகவும் புகழ் நிறைந்தும் கொண்டாடப்படுகின்றன. இவை இப்பகுதிக்கு ஒரு ஈர்ப்பை அளிக்கிறது. உள்ளூர் கைவினை பொருட்கள் மற்றும் நகைகள் இந் நகரத்தில் ஒரு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை கொடுப்பதால் இந்த இடம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக காட்சி தருகிறது.
திருச்சிக்கு பயணம்
திருச்சி விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இது சென்னை, பெங்களூர், இலங்கை மற்றும் கோலாலம்பூர் விமான நிலையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி 45, NH 45B, 67, 210 மற்றும் 227 தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான பேருந்துகள் திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன. திருச்சி ரயில் நிலையம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய ரயில் சந்திப்பாக உள்ளது. அதோடு நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்துடனும் நல்ல ரயில் இணைப்பை பெற்றுள்ளது. திருச்சியின் வானிலை ஆண்டின் பெரும்பாலான பகுதிகளிலும் சூடாகவும் வறண்டும் காணப்படுகிறது. கோடைகாலம் பகலில் மிகவும் சூடாக இருக்கும் ஆனால் மாலை போது சற்று குளிர்ச்சியாக காணப்படும். பருவ மழை நன்கு பெய்கிறது, இதன் காரணமாக வெப்பநிலை தணிந்து ஒரு பெரிய அளவிற்கு குளிர்ச்சியை தருகிறது. திருச்சியில் குளிர்காலம் குளிர்ச்சியாகவும் இனிமையானதாகவும் உள்ளது. ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் இடையே குளிர்கால மாதங்களில் நகரத்திற்கு வருகை தருதல் மிக சிறந்த நேரமாகும்.
கல்லணையின் சிறப்பு
இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று முக்கியமாக சோழர்களின் வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் நீடித்து விளங்குவது இந்த கல்லணை. இந்த கல்லணையின் கட்டுமான ரகசியம் இன்றளவும் வெளியில் தெரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அதில் மணல் அரிப்பு, மிகப் பெரிய கற்கள் பயன்பாடு உள்ளிட்ட ஒரு சிலவிசயங்கள் நமக்கு தெரிய வருகின்றன. இப்படி ஒரு பிரம்மாண்ட அணையைப் பற்றி தெரிந்ததும் இங்கிலாந்து ராணியே வியந்தாராம். ஆங்கிலேயர் காலத்தில் கல்லணைக்கு மட்டுமே தனி நிர்வாகம் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல சாதனைகளை கொண்டுள்ள இந்த கல்லணைக்கு எப்படி செல்வது, அருகில் என்னவெல்லாம் காண்பது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் தொடர்ந்து காண்போம். அதோடு கல்லணையின் ரகசியங்கள் சிலவற்றையும் தெரிந்து கொள்வோம்.
கிராண்ட் அணைக்கட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கல்லணை சோழர்களின் முக்கிய மன்னராகிய கரிகால் சோழரால் கட்டப்பட்டது என்பது வரலாற்று தகவல். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்ட அழகிய அணை. திருச்சி மாநகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை.
உலகுக்கு உணர்த்திய ஆர்தர்
ஆர்தர் எனும் பொறியாளர்தான் இந்த அணையின் மகிமையை உலகுக்கு உணர்த்தியவர். இதன் தொழில்நுட்பம் எப்படி பெரிய விசயம் என்பதை இந்தியர்களாகிய நமக்கு உணர்த்தியவரும் இவர்தான்.
வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்
தொழில் நுட்பம்
அதிக எடையுள்ள கற்களை அடுக்கி அடுக்கி இந்த அணையைக் கட்டியுள்ளனர். அடடே. கல்லிலா என ஆச்சர்ய படுவீர்கள் தானே.. அதைவிட ஆச்சர்யம் கல்லைத் தாங்கி நிற்பது மண். எந்தவித பிடிப்பும் இல்லாமல் அவ்வளவு எடை கொண்ட கற்கள் எப்படி நிற்கிறது என்ற கேள்வி எழுகிறதா?
பிடிப்பு இருக்கிறது
பிடிப்பு இல்லாமல் இல்லை. அது மணலினுள் புதைந்துள்ள கற்களில் மறைந்துள்ளது. அந்த ஒரு விசயத்தை மட்டும்தான் ஆங்கிலேயர்கள் கண்டுபிடிக்கவில்லை. இப்போது கற்களை ஒட்டச் செய்யும் வேதிப் பொருள்கள் பல இருக்கின்றன. ஆனால், 2000 வருடங்களுக்கு முன்பு… இதனால்தான் சொல்கிறோம். சோழர்கள் விஞ்ஞானத்தை வென்றவர்கள் என்று. சரி வரலாற்றை மட்டும் தெரிந்துகொண்டு இதன் அழகை காண மறந்துவிடப் போகிறீர்கள்.. வாருங்கள்..
அணைக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
➫ கல்லணை வாரத்தின் எல்லா நாட்களிலும் கண்டு களிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
➫ காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணி வரைக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
➫ அணையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் என எதுவும் இல்லை.
➫ பூங்காவுக்கு கட்டணம் பெறப்படுகிறது. ➫ வரலாற்று ஆர்வமுள்ளவர்களும், இயற்கை விரும்பிகளும் இங்கு செல்லலாம்.
முக்கொம்பு
ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன் ஜாலியாக சுற்றித் திரிய திருச்சியில் ஏற்ற இடம் முக்கொம்பு தான். காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரியும் இடம் தான் முக்கொம்பு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முக்கொம்புவில் சிறுவர் பூங்கா அமைந்திருப்பது, அழகிய மீன்களை காணும் நிகழ்வு என நிறைய பொழுது போக்கும் அம்சங்கள் இருக்கின்றன். நேரம் போவதே தெரியாத வகையில் இந்த பயணம் அமையும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
➫ மலைக்கோட்டை கோவில் கல்லணையிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
➫ ஜம்புகேஸ்வரர் கோவில் கல்லணையிலிருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
➫ ரங்கநாத சுவாமி கோவில் கல்லணையிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகரிலிருந்து 7 கிமீ தொலைவு ஆகும்.
டல்லான முகத்தையும் பளிச்சிட செய்யும் மஞ்சள்
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
திருச்சி என்றவுடன் கண் முன்னே நிற்பது மலைக்கோட்டையின் கம்பீரமும், உச்சி பிள்ளையார் கோவிலின் அழகும்தான். சுமார் 1080 வருடங்களுக்கு முன்பே, கட்டத்தொடங்கிய இந்த கோவில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. . மலையின் உச்சியில் இந்த கோவில் அமைந்திருக்கின்றது. இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து, பார்த்தால், திருச்சி நகர் முழுவதும் அழகாய் காணலாம். மேலும், ஸ்ரீரங்கம் கோவிலும் காவேரி நதியும் கொள்ளிடமும் நன்கு தெரிகிறது. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட புனித தலம் இது ஆகும். இந்த கோவிலில் இரண்டு குகைகள் உள்ளன. இவை இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு ஆகும். ஒன்று மலை மீது உள்ளது. அதில் கிரந்தத்திலும், கீழே உள்ள குகையில் 104 செய்யுள்கள், அந்தாதி யாக இருக்கின்றது. இந்த கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும்.
படிகள்
மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
மலையில் அமைந்துள்ள கோவிலின் வடிவம்
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில்
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
திருச்சி வந்தால் கட்டாயம் இது போன்ற வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களை காண தவறாதீர்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.