ஒரு சரியான பயணம் 100 புத்தகங்கள் படிக்கும் அறிவை நமக்குத் தருவதாக ஒரு பழமொழி உண்டு. எனவே தான் பயணங்களை அனைவரும் தன்னையும் அறியாமல் விரும்புகிறார்கள். பெரும்பாலும் குடும்பத்தோடான பயணங்கள்தான் இந்தியாவில் அதிகமாக மேற்கொள்ளப் படுகிறது.
ஆனாலும் துணிச்சலுக்கு வீரத்துக்கும் சாகசங்களும் பெயர் போன சக்தி வடிவமாகிய பெண்கள் தன்னந்தனியே பயணிப்பது என்பது இங்கே இன்னும் முழுமையாக நடக்கவில்லை. லட்சத்தில் ஒரு பெண் தனியாக பயணிக்க விரும்புகிறாள். ஆயினும் அவளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறிதான்.
அதனாலேயே தனியாக பயணிக்க விரும்பும் (female solo traveler) தைரிய பெண்மணிக்களுக்கான பயணக் குறிப்புகள் எந்த ஊருக்கு எப்படி பாதுகாப்பாக செல்லலாம் போன்றவைகளை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். உங்கள் வாழ்க்கைப் பயணம் போலவே இந்தப் பயணமும் சிறப்பான சேருமிடத்தை அடைய எங்கள் வாழ்த்துக்கள்.
பெண்கள் பயணிக்க சிறந்த இடங்கள்
பெண்கள் தனியாக பயணிக்க என்று சில சிறந்த இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்
Nainital
உத்தரகாண்டின் பச்சைப் பள்ளத்தாக்குகளுக்கிடையில் இயற்கை எழிலோடு அமைந்திருக்கும் இடம்தான் நைனிடால். பூமியின் ஸ்வர்க்கம் என்றால் மிகையே இல்லை. அங்கு வசிக்கும் மக்கள் குமோனி மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இயல்பிலேயே இனிப்பான மக்கள். நைனிடால் மிக சிறிய இடமாக இருந்தாலும் பார்க்க வேண்டிய அனுபவிக்க வேண்டிய அழகியல்களைக் கொண்ட மிகப் பாதுகாப்பான ஊர்.
சிறப்பு
நைனிடால் என்றாலே ஏரிகளுக்கு பெயர் போன இடம். மெல்லிய நீர்ப்பரப்பில் மேல் இளம் வெயில் நேரங்களில் படகில் செல்வது உங்கள் ஆன்மாவிற்கு இதமளிக்கும். நைனிடால் ஏரி , சட்டல் ஏரி , பீம்தால் ஏரி போன்றவை புகழ்பெற்ற இடங்கள். இவை தவிர முக்தேஸ்வரர் கோயில், ஈகோ குகைகள், நைனா பீக், ஸ்னோ வியூ பாயிண்ட் என பல இடங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
எப்படி செல்வது
நைனிடாலுக்கு அருகில் இருக்கும் பாண்ட்னாகர் வரை விமான வசதி இருக்கிறது. புதுதில்லியில் இருந்து இங்கே வர ரயில் மற்றும் பேருந்து வசதிகளும் உண்டு.
எவ்வளவு செலவாகும்
புது தில்லியில் இருந்து விமானத்தில் வந்தால் 3700 வரை செலவாகும். தங்கும் நாட்கள் பொறுத்து உங்கள் செல்வுகளை நீங்கள் கணக்கிடலாம். தோராயகமாக 25000 இருந்தால் உங்கள் நைனிடால் பயணம் அற்புதமாக இருக்கும்.
Mysore
கர்நாடக மாநிலத்தின் கலாச்சார மையமாக இருக்கும் மைசூர் பெண்கள் தனியே பயணிக்க பாதுகாப்பான இடமாகும். சூரியன் மறையும் வரை பரபரப்பாக இருக்கும் மைசூரில் மாலைக்கு மேல் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் அறைக்கு திரும்பி விடுவதே நல்லது. இந்திய கலாச்சாரம் மீது நேசம் கொண்ட பெண்கள் இங்கே பயணிக்கலாம்.
ஈர்ப்பு – சாமுண்டிஸ்வரி கோயில் , மைசூர் பேலஸ் , பிருந்தாவன் கார்டன் கரைஞ்சி ஏரி போன்ற இடங்கள் மைசூரில் உங்களை ஈர்க்கும்.
எப்படி செல்வது – சென்னையில் இருந்து நேரடி பேருந்துகள் இயங்குகின்றன. கர்நாடக அரசின் பேருந்துகள் நவீன வசதிகளுடன் நம்மை பயணிக்க வைக்கின்றன.
எவ்வளவு செலவாகும் – மூன்று நாட்கள் தங்கி சுற்றி பார்த்து வர 10000 முதல் செலவாகலாம்.
Shimla
மலை வாசஸ்தலங்கள் எல்லாமே குழுக்களோடு போகும்போதே பாதுகாப்பான உணர்வையும் மகிழ்வையும் தரும். ஆனாலும் ஒரு சில மலைவாசஸ்தலங்கள் தனியாக செல்பவருக்கும் பாதுகாப்பாகவே இருக்கும். அந்த வகையில் சிம்லா ஒரு பாதுகாப்பு தலமேதான். பாதுகாப்பான தங்குமிடங்கள் இங்கே பல உள்ளன.
சிறப்பு
ஷிம்லாவில் பார்த்துக் களிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. தி ரிட்ஜ் ஆப் சிம்லா, ஜாக்கூ மலைக்கு க்ரீன் வேலி ச்சைல் போன்றவை முக்கியமான இடங்கள்.
எப்படி செல்வது
சென்னையில் இருந்து சண்டிகர் வரை விமானத்தில் செல்லலாம். அங்கிருந்து பேருந்தில் ஷிம்லாவை அடையலாம்.
எவ்வளவு செலவாகும்
நீங்கள் தங்கும் நாட்களை பொறுத்து செலவுகள் வேறுபடலாம். பயண செலவுகள் 10000துக்குள் அடங்கும். தங்குவதும் சாப்பிடுவதும் ஷாப்பிங் செய்வதும் பொறுத்து உங்கள் செலவுகளை நீங்கள் தீர்மானியுங்கள்.
Kajuraho
யுனெஸ்கோ அங்கீகரித்திருக்கும் பாரம்பர்ய சின்னமான கஜுராஹோ இந்திய சிற்பக்கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வார இறுதியை செலவழிக்க பாதுகாப்பான இடமும் கஜுராஹோ தான். ஆனால் அதிகமான மக்கள் வருகையால் முன்பே நீங்கள் பதிவு செய்து பின்னர் செல்வது நல்லது.
சிறப்பு
லக்ஷ்மணர் கோயில், கண்டாரியா மஹாதேவ் கோயில், மாதங்கேஸ்வர மஹாதேவ் கோயில், பழைய கிராமம் மஹாவீரர் கோயில் என பல கோயில்களையும் அதில் உள்ள சிற்ப கலைகளையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
எப்படி செல்வது
சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து விமான மார்க்கம் மூலமோ பேருந்து மூலமோ அடையலாம்.
எவ்வளவு செலவாகும்
நீங்கள் பயண செலவை எப்படி செய்கிறீர்கள் என்பதில் இருந்தே இதனை கணக்கிட முடியும். விமானத்தில் என்றால் 30000திற்கும் மேல் செலவாகும். ரயில் மார்க்கம் என்றால் அதுவே பாதியாக குறைந்து விடும்.
Sikkim
உயரமான மலைகள் சூழ்ந்த சிக்கிம் உங்கள் பயணத்தை மிகுந்த அர்த்தமுள்ளதாக ஆக்கி விடுகிறது. உயரமான மலைகள் கீழான பள்ளத்தாக்குகள் நடுநடுவே உள்ள புத்த மடங்கள் உங்கள் பயணத்தை உயர்வாக மாற்றி விடுகிறது. தனியாக செல்பவர்களுக்கான சிறந்த வரவேற்புகளை இந்த மாநிலம் செய்கிறது.
சிறப்பு
சாம்கோ ஏரி, நதுலா பாஸ், கஞ்சண்சங்கா கேம்ப் போன்றவை சிறந்த இடங்கள்.
எவ்வளவு செலவாகும்
பேக்கேஜ் டூரில் சென்றால் 10000துக்குள் முடிந்து விடும். அது போக உங்கள் தனிப்பட்ட செலவுகள் உங்கள் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.
Munnar
பச்சை நிறம் படர்ந்திருக்கும் கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலம் மூணார். செல்லும் வழியெங்கும் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மருந்தாகவும் அமைகிறது. இங்கு இருக்கும் மக்கள் நேர்மைக்கும் கடும் உழைப்பிற்கும் பெயர் போனவர்கள் என்பதால் நம்பி தனியாக பயணிக்கலாம்.
சிறப்பு
அத்துக்கல் அருவி, போத்தமேடு வியூ பாயிண்ட், டாடா டீ மியூசியம், குந்தளா ஏரி போன்றவை இங்கே பிரபலமான இடங்கள்.
எவ்வளவு செலவாகும்
10000துக்குள் உங்கள் மூணார் ட்ரிப்பை மகிழ்வாக முடிக்கலாம். நீங்கள் தங்கும் நாட்களை பொறுத்து இது மாறுபடலாம்.
https://www.shutterstock.com/image-photo/sunrise-view-tea-plantation-landscape-533392369?src=K0-FDSSGTVph7bcA5hD5lg-1-7
Kaziranga assam
ஒரு உயிரியல் பூங்கா பெண்களை ஈர்க்காது என்பது உண்மையல்ல. இங்கிருக்கும் பூங்கா உங்கள் மனதை நிச்சயம் கவரும். சாகசங்களை விரும்பும் பெண்களுக்கான பயணமாக இது இருக்கலாம். திறந்த வெளி ஜீப்பில் ஒற்றை கொம்பு ரைனோசரஸ்களை காண உங்களுக்கு விருப்பமாக இருக்கும் அல்லவா. செல்லுங்கள்.
சிறப்பு
உயிரியல் பூங்காவும் அதில் இருக்கும் அரிய வகை விலங்குகளும் நாம் அவற்றை திறந்த வெளியில் சந்திக்க முடியும் என்பதுமே இதன் சிறப்பு
எவ்வளவு செலவாகும்
சென்னையில் இருந்து கல்கத்தாவிற்கு எதில் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே . விமானத்தில் என்றால் 30000 வரை ஆகலாம். அதுவே ரயில் என்றால் பாதி செலவிற்கும் குறைவாகவே ஆகும்.
பெண் பயணிகளுக்கான பாதுகாப்பான இடங்கள்
பெண்கள் என்றால் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. ஆகவே தனியாக பயணித்தாலும் பாதுகாப்பான இடங்களை நோக்கிய பயணம் சிறந்தது. அவ்வகையான சில இடங்கள் உங்களுக்காக.
Rishikesh
ரிஷிகேஷ் ஆன்மிக தேடலுக்கான இடம் மட்டுமல்ல சாகசங்கள் , நீர் சறுக்கு விளையாட்டுக்கள் போன்ற பல விஷயங்களுக்கு சிறப்பான இடம். சாகச பயணத்தை நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ தொடரலாம்.
சிறப்பு
ஆன்மீக தலம் , சாகச இடங்கள், பஞ்சீ ஜம்பிங், ராட்சத ஊஞ்சல் போன்றவை இங்கே சிறப்பு வாய்ந்தவை. ஒரு விதமான பச்சை மற்றும் நீல வண்ணம் கலந்த நீரின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
எவ்வளவு செலவாகும்
சென்னையில் இருந்து நீங்கள் ரயில் மார்க்கமாக ரிஷிகேஷ் செல்லலாம். அல்லது விமானம் மூலமும் செல்ல முடியும். தங்குமிடங்கள் 1000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. விமானம் மூலமாக சென்றால் உங்கள் பயண செலவுகள் 10000 மற்றும் தங்குமிட செலவுகள் தனி.
Kovalam
கோவளம் கேரளாவின் பேரழகு பெட்டகம். நீங்கள் ஒரு கடல் காதலர் என்றால் நிச்சயம் இங்கே செல்லத்தான் வேண்டும். வசதியான தங்குமிடங்கள் மற்றும் தனிமை சுதந்திரம் இரண்டும் இங்கே உண்டு.
சிறப்பு
கேரளாவில் பலவகையான பீச் இருந்தாலும் கோவளம் கடற்கரை சிறப்பு வாய்ந்தது. திருவானந்தபுரத்து கோயில்கள் மற்றும் ஹவா பீச் போன்றவை இங்கே பிரபலம். உடல் மன அலுப்பு தீர்க்கும் ஆயுர்வேதிக் மசாஜும் இங்கே பிரபலம்.
எவ்வளவு செலவாகும்
பேக்கேஜ் டூர் 7500ல் இருந்து ஆரம்பிக்கிறது. தனிப்பயணம் என்றால் உங்கள் பயண மார்க்கம் பொறுத்து மாறுபடும்.
Jaipur
ராஜபுத்திரர்கள் ஆண்ட ஜெய்ப்பூர் தற்போது செல்லமாக பிங்க் சிட்டி என்றே அழைக்கப்படுகிறது. சரித்திர கதைகளையும் வீரபிரதாபங்களையும் கொண்ட ஜெய்ப்பூரில் நீங்கள் பார்க்க வேண்டிய கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்துள்ளன.
சிறப்பு
ஜெய்ப்பூர் அரண்மனை, ஜோத்பூர் அரண்மனை மற்றும் உதய்ப்பூர் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.
எவ்வளவு செலவாகும்
பேக்கேஜ் டூர் எனில் 15000 முதல் தொடங்குகிறது. தனிப்பட்ட பயணங்கள் என்பது அவரவர் செல்லும் மார்க்கம் பொறுத்தது.
Pondicherry
பாண்டிச்சேரி பெண்கள் தனியாக பயணிக்க ஏற்ற ஒரு ஊர்தான். இங்கே அன்னை அரபிந்தோ ஆஸ்ரமம் இருக்கிறது கூடவே பீச் போட்டிங் போன்ற பல்வேறு சாகச பயணங்களுக்கு பாண்டிச்சேரி ஏற்ற இடம்.
சிறப்பு
ஆரோவில், பாரடைஸ் பீச், ராக் பீச், பழைய லைட் ஹவுஸ், அரவிந்தர் ஆஸ்ரமம் போன்றவை இங்கே சிறப்பு.
செலவு
உங்கள் கைகளில் 5000 இருந்தால் போதுமானது. மேற்கொண்டு உங்கள் ஷாப்பிங் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
Varanasi
இந்தியாவின் புனித தலங்களில் தலையாயது காசி ஆகும். ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பயணிக்க வேண்டிய ஒரு இடமும் கூட. கங்கை இங்கே இறைவனை சுற்றிக் கொண்டு ஓடுவதால் புனிதமான நீராக மாறி மக்களின் பாவங்களை கழுவுகிறாள். இங்கே பெண்ணாக தனியாக செல்ல பெருமை கொள்ளலாம். இந்தியக் கலாசாரத்தை நேசிப்பவர்களுக்கான ஒரு இடம்
சிறப்பு
இங்கே காசி விஸ்வநாதர் கோயில் அன்னபூரணி கோயில் காலபைரவர் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்தது.
செலவு
சென்னையில் இருந்து செல்பவர்களுக்கென தனி பேக்கேஜ் வசதி உள்ளது. 10000 முதல் தொடங்குகிறது.
Ley ladak
இமயமலை மற்றும் கரக்ரம் மலைகளுக்கு நடுவே மிக பெரிய லேண்ட் ஸ்கெப்பில் பரந்து விரிந்த இடமே லே லடாக். ஜம்மு காஷ்மீர் மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக். சீன எல்லையில் அமைந்திருப்பது லடாக். லடாக் மேலும் இரண்டாக பிரிந்து லே மற்றும் கார்கில் ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு
இங்குள்ள இயற்கை அழகு கொஞ்சம் மலைகளும் ஏரிகளும் தான் இதன் சிறப்பு. முன் பதிவு பெற்று அனுமதி வாங்கி அதன் பின்னரே செல்ல வேண்டும். 21 நாட்களுக்கு மேல் இங்கே யாரும் தங்க முடியாது. அது சட்டம்.
செலவு
பேக்கேஜ் டூர் 30000 முதல் ஆரம்பிக்கிறது. தனிப்பட்ட பயணம் என்றால் உங்கள் பயண மார்க்கம் பொறுத்து அமையும்.
shillong
மலைகள் சூழ்ந்த மேகாலயாவில் அழகிய சிகரமாக இருக்கிறது ஷில்லாங், பல்வேறு வித சிகரங்கள் , அருவிகள் என மனதை குளுமை செய்யும் பல இடங்கள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. இது குழும காரணமாகவே இதனை கிழக்கின் ஸ்காட்லாந்து என அழைக்கின்றன.
சிறப்பு
மாவ்லிநொங் , உமையம் ஏரி , யானை அருவி, ஷில்லாங் உச்சி போன்றவை பார்க்கவேண்டிய இடங்கள்.
செலவு
10000 போதுமானது. பேக்கேஜ் டூர் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிக்கனமான பயணம் வேண்டும் என்றால்
என்னதான் இருந்தாலும் பெண்கள் ஆயிற்றே. நம் தனிமை பயணங்களில் பணத்தை அள்ளி இறைக்காமல் சிக்கனமாக செல்ல விரும்புவோம். அப்படியான சில இடங்கள் உங்களுக்காக.
Hambi
கர்நாடக மாநிலத்தின் பெருமையாக விளங்கும் ஹம்பி சுற்றுலா பயணிகளுக்கான சொர்க்க வாசல். யுனெஸ்கோ தத்தெடுத்த ஹம்பிக்கு கலாச்சார அடையாள சின்னங்கள் ஏராளம் உள்ளன. 500கும் மேற்பட்ட புராதான சின்னங்கள் ஹம்பியில் இருக்கிறது.
சிறப்பு
இங்கு கோயில்கள்தான் சிறப்பு. விருபாக்ஷர் கோயில், விதாலா கோயில், தாமரை அரண்மனை , அனுமன் கோயில் என பல இடங்கள் விஜய நகர சாம்ராஜ்யத்தின் சிற்பக்கலைக்கு கட்டிடக் கலைக்கு உதாரணமாக விளங்குகின்றன.
செலவு
பேக்கேஜ் டூர் 4000 முதல் இருக்கின்றன. அதன் பின்னர் உங்கள் தனிப்பட்ட செலவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
Fort kochi
எர்ணாகுளத்திற்கு மிக அருகில் இருக்கும் சிறப்பான சுற்றுலா தளம்தான் கொச்சி கோட்டை. போர்த்துகீசியர்கள், டட்சர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் அதிகம் புழங்கியதால் பல்வேறு கலாச்சாரங்கள் ஒருங்கே இணைந்த இடம்.
சிறப்பு
ஜியூ டவுன், பேக் வாட்டர் சீ மற்றும் படகு இல்லங்கள் இங்கே சிறப்பானது.
செலவு
உங்கள் பர்சில் 6000 இருந்தால் போதுமானது. படகு இல்லத்தில் தங்க விரும்பினால் அதிகமாக பணம் கொண்டு வாருங்கள். 25000 போதுமானது.
Gangtok
தனியாக பயணம் செய்ய சிக்கிம் எப்போதுமே சிறந்த இடம் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதில் முக்கியமான இடம் கேங்டாக். பௌத்தமும் இந்து சமயமும் இணைந்த நேபாளிகள் இந்த இடத்தை அழகாக்குகின்றனர்.
சிறப்பு
ஏரிகள் மற்றும் திபெத்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வகை செய்யும் திபெத் யூனிவர்சிட்டி
செலவு
50000 முதல் பேக்கேஜ் டூர் சென்னையில் இருந்தே கிடைக்கின்றன.
Amritsar
தங்க கோயில் இதன் அழகை நாம் காணும்போது நிச்சயம் நெஞ்சம் சிதறிப் போகும். அங்கிருப்போரின் அன்பும் அரவணைப்பான நடத்தையும் நம் மனதை உயர்த்தும் குணங்களாக இருக்கும். இதன் பழமை மாறாமல் இந்த நகரம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தங்க கோயில், பாகிஸ்தான் எல்லை
செலவு
தனியாக சென்றால் 6000திற்குள் பார்த்து விட்டு வரலாம். பேக்கேஜ் டூர் வசதிகள் உண்டு.
Ahmadabad
அஹமதாபாத் அமைதியும் ஆன்மிகமும் சூழ்ந்த நாடு. வன்முறைகள் இங்கே நடப்பதில்லை. இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் அஹமதாபாத் இரண்டாவது இடத்தில் இருப்பதே இதன் சாட்சி.
சிறப்பு
இங்கு மஹா கும்பமேளா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சபர்மதி ஆஸ்ரமம் , அக்ஷ்ராடம் கோயில் இஸ்கான் கோயில் போன்றவை இங்கே சிறப்பு வாய்ந்த இடங்கள்.
செலவு
6500 முதல் பேக்கேஜ் டூர் கிடைக்கின்றன. அதற்கு மேல் உங்கள் தனிப்பட்ட வழி செலவிற்கு பணம் எடுத்துக் கொண்டால் போதுமானது.
Delhi
பாலியல் வேறுபாடின்றி பயணிக்க சிறந்த இடங்களில் ஒன்றுதான் புது தில்லி . நிறைய குழப்பங்கள்கூச்சல்கள் என முதல் முறை நம்மை பயமுறுத்தினாலும் கொஞ்சம் பழகினால் உயிர் கொடுக்கும் ஊர் தான் டெல்லி. கூட்டத்திலும் தனியாக வாழ விரும்பினால் ஒருமுறை இங்கே அதனை செய்து பாருங்கள்.
சிறப்பு
தாஜ் மஹால், குதுப் மினார், இந்தியா கேட் , ஜந்தர் மாந்தர், ஹுமாயுன் கல்லறை போன்றவை இங்கே சிறப்பு மிக்கவை.
செலவு
10000 முதல் உங்கள் விருப்பம் போல பேக்கேஜ் டூர் கிடைக்கின்றன. தனியாக பயணிக்க விமானங்கள் உள்ளன. முன்பே திட்டமிட்டு கிளம்பினால் பணத்தை மேலும் மிச்சம் செய்யலாம்.
Rajasthan
ராஜஸ்தானில் இருக்கும் பூண்டி எனும் சிற்றூர் உங்கள் தனிமை பயணத்தை முழுமையாக்கும். இங்கே நீங்கள் எங்கும் பார்க்காத ஒரு விஷயத்தை காணலாம். மனிதர்களின் உண்மையான புன்னகையை. இங்கே கடைகள், வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் என யாருமே இல்லை. மனிதர்கள் மட்டுமே ஒரு புன்னகையோடு நம்மைக் கடப்பார்கள்.
சிறப்பு
தாராகார் கோட்டை, ஃபேரி டேல் அரண்மனை மற்றும் இமாகுலேட் கிணறுகள் இது இங்கே நம் கவனத்தை ஈர்க்கும். இதன் புது வாசமும் புதிய காற்றும் உங்கள் மனதை மயக்கும்.
செலவு
13500ல் இருந்து பேக்கேஜ் டூர் கிடைக்கின்றன. தனியே உங்கள் பயணம் அமைந்தால் இதனிலும் பாதியாக குறையலாம்.
தனியே பயணிப்பவர்கள் உடன் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொருள்கள்
தனியாக பயணிக்கும் சமயம் சில முக்கியமான பொருள்கள் உங்களுடன் இருக்கட்டும். வழக்கமான ஆடைகள் அதற்கேற்ற அணிகலன்கள் மேக்கப் பொருள்கள் இவற்றுடன் உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இவையெல்லாம் தேவை.
தனியாக செல்லும் போது உங்கள் பையில் கீழ்கண்டவைகளை மறக்காமல் இணைத்துக் கொள்ளுங்கள்
குளிர்கால ஆடைகள் திடீரென மாறும் வானிலையில் உங்களை காக்கும்.
விசில் ஏதேனும் தவறாக நடந்தால் நீங்கள் அழைத்தால் மற்றவருக்கு கேட்கலாம். உதவி உடனே கிடைக்கும்.
பவர் பேங்க் உங்கள் பயணம் தடைபட்டால் சார்ஜ் இருந்தால்தான் உதவி கேட்க முடியும்.
டார்ச் லைட் உங்கள் போனையே எல்லாவற்றிக்கும் நம்பக்கூடாது. இருள் நேரங்களில் இதனை பயன்படுத்துங்கள்
நம்பர் லாக் பூட்டுக்கள் உங்கள் பயணத்தை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும்.
பிலிப் பிளாப் மற்றும் ஷூக்கள்
வெயிலில் முகம் கறுக்காமல் இருக்க ஒரு பெரிய தொப்பி
ஒரு அவசர போர்வை
தண்ணீர் பாட்டில்
டவல்கள்
ஒரு பேசிக் மாடல் மொபைல் அவசரத்திற்கு உதவலாம்.
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்
ஒரு பெண் எப்படித் தனியாக பயணிப்பது
முன்பே திட்டமிட வேண்டும். எங்கே தங்க போகிறீர்கள் என்பதை இங்கேயே முடிவு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு போன்றவற்றது முன்பே யோசித்து கொள்ளுங்கள். கையில் எமெர்ஜென்சி விளக்குகள் வேண்டும். அதிகமாக பேக்கிங் செய்ய வேண்டாம்.அதிக சுமை நமக்கு நல்லதல்ல. உங்கள் கார்டுகள் டாகுமெண்ட்களை பத்திரப்படுத்துங்கள். மற்ற பெண் பயணிகளை சந்தியுங்கள்.
சோலோ ட்ராவலர் என்றால் என்ன
நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தனியாக பயணிக்கிறீர்கள் என்றால் அதுதான் சோலோ ட்ராவலர். பயணங்கள் தனியாக இருந்தாலும் ஆங்காங்கே உங்கள் நண்பர்களை நீங்கள் உருவாக்கலாம் அல்லது சந்திக்கலாம்.
தனியாக செல்லும்போது எப்படி உங்களை பாதுகாக்கலாம்
உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை முன்பே அறிந்து கொள்ளுங்கள். உங்கள் சேருமிடம் பற்றி எல்லா தகவல்களையும் தெரிந்த பின்னரே செல்லுங்கள். ட்ராவல் இன்சூரன்ஸ் புக் செய்து கிளம்புங்கள். பகல் நேரத்தில் நீங்கள் சேருமிடத்திற்கு செல்வது உறுதி செய்யுங்கள். ஒரு மேப்பை புரிந்து பின்னர் கிளம்புங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் தங்குங்கள். விழிப்புணர்வோடு இருங்கள். எங்கே தங்குகிறீர்கள் என்பதை உறவுகளிடம் பகிருங்கள். பணத்தை வெளியே அதிகமாக காட்டாதீர்கள். நகைகளை தவிருங்கள்.அருந்தும் பானங்களில் கவனமாக இருங்கள்.கவனம் ஈர்க்காத ஆடைகள் அணியுங்கள்..
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!