logo
ADVERTISEMENT
home / Family Trips
ஸ்பெயின் நாட்டின் இபிசா தீவில், சமந்தா! இபிசாவில் அனுபவிக்க 10 சுவாரசியமான விஷயங்கள்!

ஸ்பெயின் நாட்டின் இபிசா தீவில், சமந்தா! இபிசாவில் அனுபவிக்க 10 சுவாரசியமான விஷயங்கள்!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு படமான ‘ஏ மாயா சேசவே’ என்ற படத்தில் முதன் முதலில்  சமந்தாவும், நாக சைதன்யாவும் சந்தித்தார்கள். எட்டு வருடங்கள் கழித்து 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவரது மாமனார் நடிகர் நாகார்ஜூனாவின் 60ம் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்த ஜோடி குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இபிசா (Spain – Ibiza)என்ற பெலோரிக் கடலில் அமைந்துள்ள தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இபிசா தீவு இரவு நேர கிளப்களுக்கு  மிகவும் பிரபலம். இபிசா என்றால் பார்ட்டி என்றுதான் நியாபகத்திற்கு வரும். இந்த அழகிய ஸ்பெயின் தீவு இரவு நேரங்களில் மிகவும் ஆரவாரத்தோடு காணப்படும்.

Instagram

ADVERTISEMENT

இபிசா தீவின் சுவாரசியமான விஷயங்கள் (Interesting things to do in Ibiza)

1. இபிசா தீவின் கடற்கரைகள் ( Ibiza beach)

Instagram

தீவு என்றாலே கடல் சூழ்ந்திருக்கும். உலகில் இப்படி பல தீவுகள் இருந்தாலும் மக்கள் சென்று (travel) ரசிக்க என ஒன்று இரண்டு இடங்களே இருக்கும். ஆனால், இபிசா (ibiza) தீவில் பல இடங்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்று விடாமல், அவற்றின் தனிச் சிறப்பை பற்றி காணலாம். 

  • தலமேன்கா(Talamanca) ஸ்னோ-வைட் நிறத்தில் மணல் கொண்ட அதிகம் கூட்டம் இல்லாத கடற்கரை இது. இந்த இடத்தைச் சுற்றியும் சின்ன சின்ன மலைகள் சூழ்ந்திருக்கும் ஒரு அழகான இடம். இந்த இடத்தில் பெலோரிக் ஸ்பெஷல் உணவு வகைகள் கிடைக்கும்.
  • ப்லையா டி’என் போசா(Playa d’en Bossa) என்ற உல்லாசஇடம்(resort) ஒரு சொர்க்கம். இதை ஒட்டிய பீச்தான் இந்த தீவின் மிக நீளமானது. ஜெட் ஸ்கிஸ், பேடில் படகுகள் இங்கு வாடகைக்கு எடுத்து ஓட்டலாம். பசித்தால் புசிக்க பல இடங்கள் இதைச் சுற்றி இருக்கின்றது. 
  • சாண்டா யுலாலியா(Santa Eulalia) இபிசா  என்ற இடத்தில் இருந்து 15 கிமி தொலைவில் அமைந்துள்ளது இந்த பேமிலி உல்லாசஇடம்(resort). இதன் அருகில் உள்ள பீச் மணல் தங்க நிறத்தில் இருக்கிறது. குடும்பத்தோடு செல்பவர்களுக்கு இந்த இடம் மிகவும் சவுகரியமாக இருக்கும். 
  • காலா கோம்டே(Cala Comte) சாண்டா யுலாலியாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது இந்த சிறிய கடற்கரை. இங்கு நீங்கள் காணும் காட்சி உங்களை பறக்க வைத்துவிடும். டர்காய்ஸ்(turquoise) நிற தண்ணீரைப் பார்க்கலாம். 800 மீட்டர் நீளமுள்ள இந்தக் கடற்கரையில் இருந்தும் சூரியன் மறைவதை ரசிக்கலாம். 

2. டால்ட் விலா யுனெஸ்கோ (Dalt Vila UNESCO site)

இபிசா தீவின் பழமையான, உயரமான இடம் இந்த கோட்டை. சார்லஸ் V இந்த இடத்தில் மறுமலர்ச்சி செய்து மிகவும் உறுதியான கோட்டையை எழுப்பியுள்ளார். பிரெஞ்சு போன்ற அரசர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த கோட்டை நிறுவப்பட்டுள்ளது. ஏழு கோட்டை கொத்தளங்கள் உடையது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கும் அற்புதமான இடம். பார்க்கத் தவறாதீர்கள். 

ADVERTISEMENT

3. இபிசா தேவாலயம்(Ibiza Cathedral)

கோட்டையில் இருந்து பழைய ஊரை பார்க்கச் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த தேவாலயம். பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் வேலைப்பாடுகள் மிகவும் பிரமிப்பாக கோதிக்(Gothic) மற்றும் பரோக்(Baroque) ஸ்டைலில் இருக்கிறது.

4. டால்ட் விலா தெருக்கள்(Streets of Dalt Vila)

Instagram

பழைய கட்டிடங்களும், புதிய கட்டிடங்களும் சேர்ந்து காணப்படும் இந்த ஊரைச் சுற்றி வாருங்கள். காலை முதல் மாலை வரை ரம்யமாக காட்சிதரும் தெரு வீதிகள் ஐரோப்பிய பொக்கிஷங்களில் ஒன்று.

ADVERTISEMENT

5. சான் அன்டோனியோ(San Antonio)

இபிசா தீவின் மேற்கே இந்த கடற்கரை அமைந்துள்ளது. சூரியன் மறைவதை இந்த கடற்கரையில் இருந்து பார்க்கலாம். பீச் மற்றும் உலகப் புகழ்பெற்ற நைட் கிளப்களும் இந்த இடத்தில் காணலாம்.

6. புண்டா டி’எஸ் மாஸ்கார்டெர்(Punta d’es Moscarter)

தேவதாரு(pine) காடுகள், விவசாய நிலங்கள், மேலும் அங்கங்கே விடுமுறை நாட்களை கழிக்கும் இடங்கள் என இந்த தீவின் வடக்குப் பகுதி அமைந்துள்ளது. 52 மீட்டர் உயரமுடைய லைட்ஹவுஸ் இருக்கிறது. ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள் இந்த இடத்தை தேர்வு செய்யலாம். 

7. எஸ் வெத்ரா ராக் (rock of Es Vedrà)

Instagram

ADVERTISEMENT

இபிசா தீவின் மேற்கே சற்று விலகிய இடத்தில், மனிதர்கள் வாழாத மர்மமான 400 மீட்டர் உயரம் கொண்ட பாறை உள்ளது. படகு மூலம் இந்த இடத்திற்குச் செல்லலாம். பல பழங்கதைகள் இந்த பாறையை வைத்து வளம் வந்தாலும், இந்த தீவு கண் எரிச்சலைப் போக்கும் மாயம் கொண்டது. 

8. ஃபார்மென்டெரா(Formentera)

இபிசா தீவின் தெற்கில் 20 நிமிட படகு சவாரியில் இந்த தீவிற்குச் செல்லலாம். இபிசாவில் பார்ட்டி முடித்து விட்டு, சில்லாக ஃபார்மென்டெரா செல்லலாம். இங்கும் உலகம் சிறந்த கடற்கரை இருக்கிறது.

9. உணவு

இபிசா தீவில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி பார்க்கலாம். 

  • பிஷ் ஷேக்(Fish Shack) – இங்கு மெனு எல்லாம் கிடையாது. அன்று என்ன மீன்களைப் பிடிக்கிறார்களோ அதை பணியாளர் வந்து சொல்லுவார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த மீனாக இருந்தாலும், அதோடு உருளைக்கிழங்கு, சாலட், ஆலிவ் ஆயில் பயன்படுத்தி சுவையாக சமைத்து பரிமாறுவார்கள். புல்லிட் டீ பெய்க்ஸ் (bullit de peix) என்பது மீனைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு மெயின் டிஷ். 
  • பைக்ஸ் தங்கும்விடுதி(Pikes Hotel) – ஆடம்பரமான அழகான ஒரு விடுதி. இதில் பார் வசதியும் இருக்கிறது. நீச்சல் குளம், உணவு என அனைத்தும் புகழ்பெற்று விளங்கும் இடம் இது. சற்று பழமையான விடுதி என்றாலும், இன்றளவும் பெயர்போன இடம். 29 அறைகள் மட்டுமே கொண்டது. மேலும், வெறும் பார்ட்டி செய்யவதற்குகூட நீங்கள் புக் செய்து கொள்ளலாம். 
  • பலோமா(Paloma) – தீவிற்கு நடுவே கார்டன் ரெஸ்டூரண்ட் இந்த பலோமா. கடற்கரை காற்றில் இருந்து சற்று விலகி  இருக்க நினைத்தால், இந்த இடத்திற்கு செல்லலாம். வீட்டில் செய்த உணவுபோன்ற சுவையில் மீன் அல்லாத உணவுகளும் கிடைக்கும். இங்கு ஏதாவதொரு பிரபலத்தை பார்க்க நேரிடலாம். 

10. மீன் பண்ணை(Aquarium Cap Blanc)

ADVERTISEMENT

Instagram

கடலுக்கு அடியில் ஒரு குகைக்குள், குரூபெர்(grouper), ரேய்ஸ்(rays), மொரேய்ஸ்(morays) மற்றும் கொங்கர்(conger) போன்ற நீர் வாழ் உயிரினங்களைப் பார்க்கலாம். கடல் ஆமைகள் கூட இங்கு சிகிச்சைக்காக வைத்திருக்கிறார்கள். 

குதிரை ஏற்றம், ஜெட் ஸ்கீயிங் போன்ற இடங்களும் இங்கு பிரபலமானது. இந்த தீவில் சமந்தா கடற்கரையில் எடுத்த புகைப்படம் உடனடியாக 2 லட்சத்திற்குமேல் லைக்ஸ் பெற்றது. நீங்களும் உங்கள் விடுமுறையை இந்த அழகிய இயற்கை சூழலில் செலவிடலாமே!

 

ADVERTISEMENT

பட ஆதாரம்  – Instagram, Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

11 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT