தமிழகத்திற்கும் ஆன்மிகத்திற்கும் காலம் காலமாகத் தொடர்புகள் இருந்து வருகின்றன. பல சக்தி வாய்ந்த கோயில்கள் இருப்பதாலேயே தமிழக அரசின் சின்னம் (logo) ஆக கோயிலின் கோபுரம் இருக்கிறது. இங்குள்ள பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கோயில்களுக்கும் பல ஆன்மிக சக்திகள் இருப்பது உண்மையாக இருப்பதாலேயே அங்கே மக்கள் செல்கின்றனர்.
அதில் முக்கியமான ஒரு கோயிலாகப் பார்க்கப்படுவது திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில். சித்தர்கள் இப்போதும் நடமாடும் இடமாகவே திருவண்ணாமலை இருந்து வருகிறது. சிவபெருமான் அருளும் பஞ்ச பூத கோயில்களில் அக்னிக்கான தலமாக திருவண்ணாமலை (thiruvannamalai) விளங்குகிறது.
முன்வினையில் நம் கர்மாக்களால் நமக்கு நாமே வைத்துக் கொண்ட தீ தான் இந்தப் பிறவியில் வாட்டுகிறது. அதன் வெம்மை தாளாமல் நாம் ஏதேதோ செய்கிறோம். தற்காலிகமாக பிரச்னைகள் தீர்ந்தாலும் மீண்டும் துன்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை – அதிசயமும் அற்புதமும்
Youtube
நாம் பிறவிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். நமது பழைய தவறுகளின் கணக்கை நேர் செய்ய முயலாமல் மீண்டும் மீண்டும் நாம் இப்போதும் தவறுகளை இழைத்தபடியே போகிறோம். இதன் முடிவு பல கோடி பிறவிகள் எடுத்து நாம் நமது கணக்குகளை நேர் செய்யும் வரை தொடரும்.
திருவண்ணாமலை கிரிவலம் (girivalam) என்பது நமது முற்பிறவி பாவங்களைத் தீர்க்க வல்லது. 1000 ரூபாய் செலவழித்து ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதால் நமது கர்மாக்கள் கரையாது. எந்த உடம்பினால் நாம் அதனை செய்கின்றோமோ அதே உடமை சற்று வருத்தி இறைவனை சந்திக்க வேண்டும். நம்மை வருத்திக் கொண்டு செய்யும் பக்தியினால் மனம் இளகும் இறைவன் நாம் எங்கிருந்தாலும் என்ன ஆபத்தில் இருந்தாலும் ஓடோடி வந்து நம்மைக் காத்தருள்வார்.
அதற்கு முக்கிய தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை. இங்கே செல்ல வேண்டும் என்று நினைத்த அக்கணமே நாம் முக்தி அடைவதாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை சிவன் சுயம்பு ரூபமாக மலை வடிவத்தில் அமர்ந்திருக்கிறார். அவரைத் தரிசிக்க பௌர்ணமி முழு நிலா நாளில் அபிராமியாக சிவகாமி பார்வதி அம்மன் சிவனை வானில் இருந்து தன்னுடைய கிரணங்களால் தழுவிக் கொள்கிறார்.
ஆன்மீகத் தேடல் கொண்டவர்களின் வாழ்நாள் கனவாக காசி இருப்பது ஏன் ? அறிவோம் வாரணாசி
Youtube
இந்த அர்த்த நாரீஸ்வர ஐக்கியத்தை பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலையை கிரிவலம் வருபவர்கள் தரிசிப்பதால் மூலம் பலகோடி ஜென்ம பாவங்கள் நீங்குகின்றன. திருவண்ணாமலை இறைவன் கோயிலிருந்து கிளம்பி மலையை சுற்றி மீண்டும் கோயிலுக்கு வர 14 கிமீ தூரம் நாம் நடக்க வேண்டும்.
கிரிவலம் ஆரம்பிக்கும்போது அண்ணாமலையார் கோயிலுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வழியில் பூத நாராயணரிடம் அனுமதி வாங்க வேண்டும். அதன் பின்னர் இரட்டைப் பிள்ளையாரிடம் ஆசி பெற்றுக் கொண்டு திருவண்ணாமலையார் கோயிலில் இருந்து நமது கிரிவலத்தை தொடங்க வேண்டும்.
நினைத்ததை நடத்தி வைக்கும் வலிமை இந்த திருவண்ணாமலை கிரிவலத்திற்கு உண்டு. பல்வேறு சிந்தனைகளுடன் பலருடன் கசகச என பேசிக்கொண்டு எந்த வீட்டு பிரச்னைகளையோ விவாதித்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இங்கே கிரிவலம் செல்வது சிறந்த முறை அல்ல.
கேதார்நாத்தை பற்றி நீங்கள் அறிந்திடாத / அறியவேண்டிய சில சுவாரசியமான விஷயங்கள் !
Youtube
நிறைமாத கர்ப்பிணி தன்னுடைய குழந்தையை மனதில் கவனத்தில் வைத்து எப்படி பார்த்து பார்த்து அடியெடுத்து வைப்பாளோ அதைப் போலவே நமது மனமாகிய கர்ப்பத்தில் இறைவன் சிவனை சுமந்து அவர் மீதான கவனத்துடன் நாம் மலையை பார்த்த வண்ணம் நமது கிரிவலத்தை செய்ய வேண்டும்.
எல்லோராலும் தானங்கள் செய்ய முடியாது. ஆனாலும் அந்நாளில் உங்களால் இயன்றதை தானம் செய்யுங்கள். இனிப்புகள் வாங்கி எறும்புகளுக்குத் தானம் செய்வது கூட உங்கள் ஊழ்வினையை நீக்கும். நமது பல ஜென்ம பாவங்களை நீக்கும் திருவண்ணாமலை கிரிவலம் நம் வாழ்வின் பெரும் வரம்.
இவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா?
Youtube
என்ன கிழமை கிரிவலம் சென்றால் என்ன பலன்
ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும் .
திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .
புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.
சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.