நாம் நினைக்கும் மாத்திரத்திலேயே நமக்கு முக்தியை அருளும் தலம் திருவண்ணாமலை. இங்கே மிக சிறப்பான விஷயம் மலையே லிங்கமாக காட்சி அளிப்பதுதான். மலையைப் பார்த்தால் மலை மாதிரிதானே தெரிகிறது இங்கே எங்கே லிங்கம் என அனைவருக்கும் சந்தேகம் வரலாம்.
திருவண்ணாமலையின் விசேஷமே மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்கள் மூலம் ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கப்பெறும். கிரிவல முடிவில் திருவண்ணாமலையில் பஞ்சலிங்க தரிசனம் என்றொரு இடம் இருக்கிறது.
அங்கே இசக்கி சித்தர் சமாதி அருகே நின்று உங்கள் ஐந்து விரல்களை விரித்து பாருங்கள். ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு மலையை சுட்டிக் காட்டும். அதில் நடுவிரல் காட்டும் மலையை இன்னும் ஆழகமாக பார்த்தால் ஒற்றை லிங்கமாக அங்கே உச்சியில் நம் அண்ணாமலையார் வீற்றிருப்பார். இதனை அங்கே உள்ள ஒரு சித்தர் எனக்கு காட்டி அருளினார்.
Youtube
இப்படியான திருவண்ணாமலை கார்த்திகை பௌர்ணமி அன்று மிக விசேஷமாக காணப்படும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள். மனிதபிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கார்த்திகை மகா தீபத்தை (thiruvannamalai deepam) பார்ப்பது மோட்சத்தை அருளும். இன்னொரு பிறவித்துன்பம் இனி இருக்காது.
மகா தீபம் ஏற்ற செப்பினால் ஆன கொப்பரை ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கொப்பரை ஐந்து அடி உயரமானது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும். ஒவ்வொரு தீபத்திருநாளிற்கும் இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா துணி என்ற துணி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2000 மீட்டர் வரை காடா துணி வாங்கப்படுகிறது என்கிறார்கள். அதற்கு மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும். சில சமயங்களில் அதுவும் கூட பத்தாமல் போய்விடுமாம்.
Youtube
இந்த ஐந்தடி தீபம் எண்ணெய் மூலம் ஏற்றப்படுவது இல்லை. இதற்கென பசுநெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோயில் சார்பாக 350 லி நெய் வழங்கப்படுகிறது. ஆவின் பால் நெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அளிக்கும் நெய்யின் அளவோ அளக்க முடியாதது.
பழங்காலங்களில் நெய் (ghee) வரத்து இல்லாததால் மூன்று நாட்கள் மட்டுமே இந்த மகாதீபம் எரியுமாம். இப்போது அதிக அளவில் நெய் இருப்பதால் 11 நாட்கள் நெய் விளக்கு மகாதீபம் ஏற்றப்படுவதாக சிவாச்சார்யர்கள் சந்தோஷிக்கின்றனர்.
பக்தர்கள் நெய் காணிக்கை அளிக்க சீட்டுக்கள் மூலமாகவும் அளிக்கலாம். நேரடியாகவும் நெய் வாங்கி கொடுக்கலாம். நெய் அளித்த ஒவ்வொருவருவருக்கும் தீபம் முடிந்த அன்று மகாதீப கொப்பரையில் இருந்து மை பிரசாதம் வழங்கப்படுகிறது. திருஷ்டி போன்றவற்றை நீக்கி ஆன்ம பலத்தை அதிகரிக்கும் சக்தி இந்த மைக்கு இருக்கிறது.
Youtube
மகாதீபத்தை (mahaadeepam) பார்த்தவர்களுக்கே மோட்சம் என்றால் அதனை ஏற்றுபவர்கள் எத்தனை பெரிய பாக்கியவான்கள். காலம் காலமாக மீனவ சமூகத்தினர் மட்டுமே இங்கே இந்த மகா தீபத்தை ஏற்ற முடியும். பர்வத மகாராஜா குலத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த சேவையை பக்தியுடன் செய்து வருகின்றனர்.
திருக் கார்த்திகை தீபமான இன்று முதல் 11 நாட்களுக்கு தினமும் 2500 அடி உயரம் உள்ள மலையில் கொப்பரையில் எரிந்து கொண்டிருக்கும் தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இவர்கள் கடமை. தினமும் மாலை கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய்யால் நனைத்த காடா துணியை வைத்து 11 நாட்கள் விடாமல் விளக்கேற்றுகிறார்கள்.
தினமும் சுத்தம் செய்யும்போது கொப்பரையில் உள்ள மையினை சேகரிக்கிறார்கள். இதுதான் திருவண்ணாமலை தீபமேற்றும் வழிமுறைகளும் அதன் பலன்களும்.
இன்றில் இருந்து இன்னும் 11 நாட்கள் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். பௌர்ணமி அன்று இல்லா விட்டாலும் 11 நாட்களில் ஏதாவது ஒருநாள் இந்த தரிசனத்தை காண்பது பல செல்வங்கள் நிலைக்கவும் வம்சம் தழைக்கவும் அருளி செய்கிறது.
இந்த நன்னாளில் பக்தர்கள் அவரவர் வீட்டில் விளக்கேற்றுவது உங்கள் வம்சத்தை செல்வச்செழிப்போடு வாழ வைக்கும். அறநெறி தவறாத பிள்ளைகளால் உலகம் மகிழும். ஒவ்வொரு நிலைப்படியிலும் இரண்டிரண்டு விளக்கு ஏற்றுங்கள். முன்வாசலில் குத்துவிளக்கு கொண்டு தீபம் ஏற்றுங்கள். இறை அருள் உங்கள் வீடு தேடி வரும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!