டல்லான முகத்தையும் பளிச்சிட செய்யும் அதிசய மஞ்சள்!

டல்லான முகத்தையும் பளிச்சிட செய்யும் அதிசய மஞ்சள்!

சரும அழகிற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தான் மஞ்சள். அனைத்து விதமான சரும பராமரிப்பிற்கு மஞ்சள் மிகவும் ஏற்றது. சருமத்திற்கு அழகூட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை அதிகமான ரசாயன பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட விலை குறைந்த மஞ்சளை(Turmeric) உபயோகிப்பது சரும அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் வழியும் சருமத்தினை கொண்டவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் தூள்(Turmeric) கலந்து முகத்தில் பூசவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை அலச முகம் பளிச்தான்.

வறண்ட சருமம்

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு துளி ஆலிவ் எண்ணெயை விடவும். அதில் சிறிதளவு மஞ்சள், எலுமிச்சை சாறு, பன்னீர் கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து, காது பகுதிகளில் நன்றாக பூசி உலரவிடவும். பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் சரும வறட்சி போகும்.

சராசரி சருமம்

ஸ்ட்ராபெரி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம் முகம் பொலிவுறும்.

சரும சுறுக்கம் போக

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது. மஞ்சளை(Turmeric) அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

Youtube

தேவையற்ற முடிகள் உதிர

முகத்தில் சருமம் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி குளிக்கவும். இதனால் மென்மையான சருமம் கிடைக்கும். மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும். கழுத்து, கணுக்கால்களில் தோல் கருப்பாக இருந்தால் மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும் கருமை மறையும். மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ‌ன்று மாறு‌ம்.

மஞ்சள் நீராவி

மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து ஆவி பிடிக்கவும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பொலிவு கிடைக்கும். குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி‌க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும். பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டால் குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூ‌சி வ‌ந்தா‌ல் போது‌ம் வெடிப்பு குணமாகும்.

காயங்களை போக்கி, தழும்புகளை குறைக்கிறது

மஞ்சளுக்கு இருக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மையால், சரும துளைக்குள் ஊடுருவி, சருமத்தை சீராக்குகிறது. மஞ்சளுக்கு(Turmeric) இருக்கும் ஆன்டிசெப்டிக் குணத்தால், காயங்கள் எளிதில் ஆறுகிறது. மற்றும் தழும்புகள் மெல்ல மறைகிறது. ஒரு சிட்டிகை மஞ்சளுடன், சிறிதளவு, கடலை மாவு சேர்த்து, சருமத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

Youtube

வயது முதிர்வை தடுக்கிறது

மஞ்சளில் கர்குமினாய்டு என்ற நிறமி உள்ளது. இது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட்டை இணைத்து கொடுக்கிறது. இவை சரும செல்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாத்து, வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை குறைக்கிறது. மற்றும் கரும் புள்ளிகள், கோடுகள், சுருக்கங்கள் முதலியவற்றை வராமல் செய்கிறது.

சரும வெண்மைக்கு மஞ்சள்

சருமத்தின் இயற்கையான அழகை மீட்டு தர மஞ்சள் பெரிதும் உதவுகிறது. வெயில் அதிகம் படும் இடங்கள் கருத்து காணப்படும். வெயில் படாத இடங்கள் வெண்மையாக இருக்கும். இந்த வேறுபாட்டை நீக்கி, சருமத்தில் சரி சமமான நிறத்தை பெற மஞ்சள் உதவும். ஒரு ஸ்பூன் தேனுடன், 1 ஸ்பூன் பால் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ஒரு பேக் தயாரிக்கவும். இதனை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். தீர்வுகள் வரும் வரை ஒரு வாரத்திற்கு 3 அல்லது 4 தடவை இந்த முறையை பின்பற்றவும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! 
ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.