logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
கேதார்நாத்தை பற்றி நீங்கள் அறிந்திடாத / அறியவேண்டிய சில சுவாரசியமான விஷயங்கள் !

கேதார்நாத்தை பற்றி நீங்கள் அறிந்திடாத / அறியவேண்டிய சில சுவாரசியமான விஷயங்கள் !

கேதார்நாத் சிவன் கோயில் இந்தியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இமய மலைத் தொடரில் அமைந்து புகழ்பெற்று விளங்குகிறது. முன்பு உத்தராஞ்சல் என்றும் இன்று உத்தராகண்ட் என்று மாறியிருக்கும் மாநிலத்தில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமையப் பெற்றிருக்கிறது. மந்தாகினி ஆற்றின் அருகில் இருக்கும் கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமையப்பெற்றிருக்கிறது.

கேதார்நாத் யாத்திரை : இத்தலத்தை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

1. 12 ஜோதிர் லிங்கங்க ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இந்த கேதார்நாத்(kedarnath). இலட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து இந்த கோவிலுக்கு(temple) வந்து செல்கின்றனர். 

2. குளிர்காலத்தில் பனி சூழ்ந்திருக்கும் என்பதால் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் சூழல் சொர்க்க லோகத்தின் ஒரு பகுதியாக காட்சி தந்து தியானம் செய்வதற்கு ஒரு அழகிய இடமாகத் தோன்றுகிறது. 

3. இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பாக இந்த சிவாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவலிங்கம் வேறு எந்த தலத்திலும் இல்லாதவாரு  முற்றிலும் மாறுபட்டதாக பாறையில் ஒரு முக்கோண வடிவில் காட்சி தருகிறார்.

ADVERTISEMENT

4. இங்கே பல அடி உயரத்தில், பனி படர்ந்த மலையில் வெந்நீர் ஊற்றுக்கள் இயற்கையாக பொழிகிறது. நம்ப முடிகிறதா? கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கென உருவெடுத்திருக்கிறது.  யாத்திரிகைகள் கங்கோத்திரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்திரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று கேதார்நாதருக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.

5. பார்வதி தேவி சிவனுடன் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக ஒன்று சேர இந்த இடத்தில் இருக்கும் சிவனைத் தான் வேண்டினார்.

 

 

ADVERTISEMENT

Instagram

6. இராவணன் தவம் செய்து கைலாய மலையை தூக்க முடியாமல் உயிர் தப்பி ஓடிய இடம் இத்தலமே என்று கருதப்படுகிறது . 

7. கேதார்நாத்தில் இருந்து ஒரு சிறு ஓடையாக தோன்றுகின்ற மந்தாகினி நதியும், பத்திரிநாத்தில் தோன்றும் அலக்நந்தா நதியும் ருத்ரப்ரயாக்கில் ஒன்று சேர்ந்து பல நதிகளை ஒன்றாக்கி ஹரித்வாரில் கங்கையாக பாய்கிறது. 

ADVERTISEMENT

8. இத்தலம் இமைய மலையில் பயணிக்கவும், சிவனை தரிசிக்கவும் அமைந்திருப்பதால் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைகிறார்கள். இந்த கோவில் பாண்டவர்கள் கட்டிய கோவில் ஆகும் .

9. கேதார்நாத் கோவில் தீபாவளி பண்டிகையை ஒட்டி,   மூடப்படுவதர்க்கு முன்னர் , கோவிலில் ஒரு பெரிய நெய் விளக்கு ஒன்றை ஏற்றி  கோவில் மூடப்படுகிறது. 6 மாதங்கள் களித்து (ஏப்ரல் மாதத்தில்) பனிசூழ்த்த கோவிலை மீண்டும் திறக்கும்போது அந்த விளக்கு  அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். இந்த அற்புத காட்சியை காண ஏராளமான பக்தர்கள்  கேதார்நாத் சிவனை தரிசிக்க வருவது வழக்கம். 

10. இந்த கோவில் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை மனிதர்கர்கள் வழிபடுவதாகவும், பனி மூடி இருக்கும் மாதங்களில் தேவர்கள் வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. 

கேதார்நாத் சுற்றுலா விவரங்கள்

ADVERTISEMENT

Instagram

சிவாலயத்தை தவிர இங்கு இருக்கும் பல சுற்றுலா தலங்களைக் கீழ் காணலாம் 

1. காந்தி சரோவர்: இது ஒரு சிறிய ஏரி. இங்குதான் யுதிஷ்த்திரர், சொர்க்கத்திற்கு  சென்றதாக கூறப்படுகிறது.

2. சங்கராச்சார்ய சமதி: ஆதிகுரு சங்கராச்சார்யர் இங்கு சமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. 

ADVERTISEMENT

உலகம் சிறக்க இக்கோவிலில் ஸ்ரீ ஆதி சங்கரர் திருப்பணி செய்துள்ளார். இமய மலையின் சிகரம் வழியாக ஆதி சங்கரர் கேதார்நாத்தில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு, இறைவனடி அடைந்தார் என்று கூறப்படுகிறது. 

3. பைரவ்நாத் கோவில்: கேதார்நாத் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் பைரோன் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேதார்நாத் பள்ளத்தாக்கையும் மற்றும் கேதார்நாத் கோவில் சந்நிதியையும் முழுவதுமாக காணலாம். 

4. ரடஸ் குந்த் : கேதார்நாத் கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய நீர் குன்று இது.

5. கௌரி குந்த் : இங்கிருந்து ட்ரெக்கிங் செல்ல துவங்குவார்கள். இந்த கிராமத்தில் கௌரிக்கு என ஒரு கோவில் இருக்கிறது.

ADVERTISEMENT

6. வாசுகி ஸ்தலம்: 4135 மீட்டர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த மலைப் பகுதி. கேதார்நாத் கோவிலில் இருந்து 6 கி.மீ. தூரம் ட்ரெக்கிங் செய்யலாம். சவுகம்பா குன்றின் அழகை இரசிக்க இந்த சுமாரான உயரம் கொண்ட மலையில் ஏறுங்கள்.

கேதார்நாத் கோவிலை அடைவதே ஒரு சின்ன ட்ரெக்கிங் தான். கௌரி குன்றில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கேதார்நாத். உங்களை அழைத்துச் செல்ல குதிரை சவாரி, மற்றும் தூக்கிச்செல்ல ஆட்களும் கிடைப்பார்கள். 

 கேதார்நாத்திற்கு எப்படி செல்வது ?

பெங்களூர் / சென்னையில் இருந்து கேதார்நாத்திற்கு நேரடி விமானமோ இரயிலோ இல்லை.  டெஹ்ராடூன்/ஹரித்வார் சென்று பின் அங்கிருந்து டாக்ஸியில் கேதார்நாத் செல்லலாம்.

ADVERTISEMENT

குறிப்பு: கேதார்நாத் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்கள் பயணம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய பயண அட்டை வழங்கப்படும்.

கேதார்நாத் பயண குறிப்புகள்

  • முதலில் செல்லப் போகும் இடத்தைப்பற்றியும், அங்கு இருக்கும் தட்ப வெட்ப நிலைகளை பற்றியும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஆடைகளை தேர்வு செயுங்கள்.
  • நீங்கள் செல்லும் இடத்தில் என்ன என்ன பொருட்கள் கிடைக்கும் கிடைக்காது, உங்களுக்கு மிகவும் அவசியமான பொருள் என்ன என்பதை பட்டியலிட்டு தயாராகுங்கள். 
  • பட்டியலிடுவதன் மூலம் எதையும் மறக்காமல் எடுத்துச் செல்ல உதவும். 
  • எத்தனை நாட்கள் செல்ல இருக்கிறோம் என்று கணக்கிட்டு அதற்கு தகுந்த வாரு பொருட்களை பேக்கிங் செய்யுங்கள். ஏனெனில், எல்லாவற்றையும் அத்தகைய மலைப்பகுதிகளுக்கு கொண்டு செல்வது எளிதல்ல.
  • உலர்ந்த பழங்கள், கொட்டைகள், சாக்லேட்டுகளை எடுத்துச் செல்லுங்கள். இது நீண்ட நேரம் நடக்க, மற்றும் மலை ஏற தேவையான சக்தியை அளிக்கிறது.
  • ட்ரெக்கிங் அல்லது நீண்டதூரம் யாத்திரை அல்லது நீண்ட நாட்கள் பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி தகுந்த மாத்திரைகளை முன்னெச்சரிக்கையாக எட்டுச்செல்லுங்கள்.

 

மேலும் படிக்க – பயணம் செய்யும் போது பொது / திறந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விரைவான உதவிக்குறிப்புகள் மேலும் படிக்க – இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

11 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT