திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!

திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை..  ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!

பாலிவுட்டின் டைகரான சல்மான் கானுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் திரையிலும் மற்றும் வெளியிலும் இருக்கிறார்கள். கத்ரீனா கைப், ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஜ்லானி போன்ற நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட சல்மானிற்கு தற்போது 53 வயதாகிறது.


ஆனாலும் தற்போது லூலியா வென்டுர் என்கிற அந்நிய தேச நடிகையை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. இப்போது சல்மான் கான் தனது வாழ்வின் அடுத்த கட்டம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் முடிவினை எடுத்திருக்கிறார்.


இரு கரம் கோர்த்து எழுதும் ஒரு அரும்பெரும் காவியம் .. திருமண நாள்.. சில சுவாரஸ்ய குறிப்புகள்கான்ட்ரவர்ஸியல் கான் என்றும் ஒன் மேன் ஆர்மி என்றும் டைகர் என்றும் ராபின் ஹூட் என்றும் செல்லமாக அழைக்கப்படும் சல்மான் கான் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


சல்மானுக்கு நெருக்கமான ஒருவரிடம் இருந்து இந்த உறுதியான தகவல் வந்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று கூறுகிறது.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்surrogacy எனப்படும் வாடகை தாய் முறையில் வரும் மாதங்களில் சல்மான் கான் தந்தையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சல்மான் கான் வெகு விரைவில் திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்த பாலிவுட் ரசிகர்களுக்கு சல்மான் கானின் இந்த பதில் மிக அதிர்ச்சியாக இருக்கிறது.


இந்த மாதிரி குழந்தை பெற்று கொள்வதற்கு திருமணம் செய்து கொள்ளலாமே என்கிற கேள்விக்கு சல்மானின் பதில் மேலும் அதிர்ச்சி ஊட்டுவதாக இருந்திருக்கிறது.


பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..?இப்போதெல்லாம் திருமணம் செய்வது என்றால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான பணம் என்னிடம் இல்லாததால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன் என்று பத்தி தந்து பாலிவுட்டையே அதிர வைத்திருக்கிறார் சல்மான் கான்.


சல்மான் எடுத்திருக்கும் இந்த முடிவு மற்றவர்களுக்கு எப்படியோ ஒரு நாள் கூத்திற்காக லட்சங்களில் செலவழிக்கும் நடுத்தர பெற்றோர்களும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் உச்ச நட்சத்திரங்களும் சரி அந்த பணத்தை மற்றவர் நலனுக்காகவோ அவர்களுடைய சேமிப்பாகவோ வைத்து கொள்வது அவர்கள் பாதுகாப்பிற்கு நன்மை தரும். இதன் மூலம் தனது வாழ்வில் தேவையற்ற அலட்டல்களை தவிர்த்திருக்கும் இந்த ஹம் ஆப்கே கெய்ன் கோன் நாயகன் சல்மான் கானின் மூவ் ஸ்மார்ட் மூவ் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்       


நான் கர்ப்பிணி என்று தெரிந்தும் என்னை படுக்கைக்கு அழைத்த திரை உலகம்.. சமீரா ரெட்டியின் அதிர்ச்சி பேட்டி    


எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !                    


---                                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                              


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.