logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி அமெரிக்க நாடக நடிகையான மேகன் மெர்க்கலை இரு குடும்பங்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார். இது இங்கிலாந்தில் மிகப்பெரிய விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவர்கள் திருமணம் டிவி மூலம் லைவ் செய்யப்பட்டது. திருமண மோதிரம் போடும் சமயம் அங்கு இல்லாத அம்மா டயானாவை நினைத்து கண்கலங்கினார் இளவரசர் ஹாரி (prince Harry).

அதுவும் பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது. இப்போது இந்த தம்பதிக்கு அழகிய மகன் பிறந்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பிருந்தே இளவரசர் ஹாரிக்கு சமூக சேவைகள் விருப்பமாக இருந்தது. திருமணத்திற்கு பின்னர் மேகன் மெர்க்கல் (Meghan markle) மற்றும் இளவரசர் ஹாரி இருவருமே பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து ஏழை மக்களுக்கு உதவி செய்வது பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொண்டனர்.

 

ADVERTISEMENT

Youtube

இங்கிலாந்தை பொறுத்தவரை இன்னமும் அரசாங்க முடிவுகளில் அரச பரம்பரையின் பங்குகள் இருக்கும். அரச குடும்பத்தை சார்ந்த அனைவருமே அரசாங்கத்தின் பாகமாகவே கருதப்படுகின்றனர். இப்படியான நிலையில் இளவரசர் ஹாரி திடீரென தானும் தனது மனைவி மேகன் மெர்கலும் அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் என்கிற பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கின்றனர்.

நெடு நாட்களாகவே இளவரசர் ஹாரி இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அதன் அதிகாரங்கள் மீது விருப்பம் இல்லாமல் இருந்தவர் இளவரசர் ஹாரி. அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததாலேயே தன்னுடைய அம்மா டயானாவை இழந்ததாக சமீபத்தில் பத்திரிகைகளில் பேசியும் இருந்தார். முதலில் அம்மாவை கொன்றவர்கள் இப்போது மனைவிக்கு குறி வைக்கிறார்கள் என்று பத்திரிகைகள் பாப்பரசி வன்முறையை கண்டித்திருந்தார் இளவரசர் ஹாரி.

ADVERTISEMENT

Youtube

இந்த அறிவிப்பை ராணி எலிசபெத் உடன் கலந்து ஆலோசிக்காது இளவரசர் ஹாரி வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாரி – மேகன் தம்பதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை கீழக்கண்டவாறு வெளியிட்டிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வருடத் தொடக்கத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும்.

இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தைச் சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புவியியல் சமநிலை எங்கள் மகனை, அவர் பிறந்த அரச பாரம்பர்யத்தைப் பற்றிய புரிதலுடன் வளர்க்க உதவும். அதேநேரம் இந்த முடிவு எங்கள் குடும்பத்துக்கு அதிகக் கவனம் செலுத்துவதற்கான இடத்தையும் வழங்குகிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்காக வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

ADVERTISEMENT

நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளோம். எங்களின் இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வோம். நாங்கள், இங்கிலாந்து ராணி, வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைக்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள்’ என தங்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த அறிவிப்பால் அரசகுடும்ப விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ராணி எலிசபெத் அவர்களை கேட்காது இந்த முடிவினை இவர்கள் எடுத்திருப்பது மேலும் அதிர்ச்சியாக இருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் முக்கியமான செய்திகள் எல்லாம் அரசாங்க அறிக்கைகள் போலவே வெளியிடப்படும். அவ்வகையில் இளவரசர் ஹாரியின் இந்த முடிவு பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கை என்னவென்றால் `ஹாரி மற்றும் மேகனுடான எங்கள் பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே உள்ளது. மாறுபட்ட சூழலில் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும். இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Youtube

அதைப்போலவே கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இவர்கள் அரச குடும்ப முறைப்படி கொண்டாடாமல், கனடாவில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தான் அரசக் குடும்பத்தில் இருப்பதால்தான் வதந்திகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதாகவும் ஹாரி முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது முக்கியமான காரணமாக இளவரசர் ஹாரியின் இந்த முடிவிற்கு பின்னால் இருப்பது ஒரு புகைப்படம் என சொல்லப்படுகிறது. புதிய சகாப்தத்தின் முதல் புகைப்படம் என வெளியிடப்பட்ட அரச குடும்பத்தின் புகைப்படத்தில் ராணி எலிசபெத் உடன் அவரது மகன் சார்லஸ் (அடுத்த அவகாசி என எதிர்பார்க்கப்படுபவர்) அவருடைய முதல் மகன் வில்லியம்ஸ் (இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி) மற்றும் இளவரசர் வில்லியம்ஸின் மகன் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

ADVERTISEMENT

இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இளவரசர் ஹாரி தனது மனைவியுடன் கனடா சென்றிருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் இளவரசர் ஹாரியின் மனதை கடுமையாக பாதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே இணை பிரியாத சகோதரர்களாக இருந்த வில்லியம்ஸ் மற்றும் ஹாரி பிரிய நேர்ந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

 

Youtube

ADVERTISEMENT

இப்படி புகைப்படம் வெளியிடுவது முதல் முறை அல்ல என்பதும் இதே போலவே மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட (2016 ஏப்ரல்) புகைப்படத்தில் கூட இளவரசர் ஹாரியின் புகைப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இளவரசர் ஹாரி எப்போதும் வாரிசு அரசியலில் கவனம் செலுத்தியதே இல்லை என்பதுதான் உண்மை என்கிறார் chris ship எனும் ஆய்வாளர்.

எது எப்படியோ அரச குடும்பத்தின் வாரிசு என்கிற நிலையில் இருந்து வெளியேறினாலும் துணிச்சலான முடிவெடுப்பதிலும் அரச குடும்பத்து அதிகாரங்களை வெறுத்ததிலும், ஏழை மக்களுக்கு உதவுவதிலும் அம்மா டயானாவின் அற்புதமான வாரிசாக இளவரசர் ஹாரி எப்போதும் நமது மனங்களில் உயர்ந்து நிற்கிறார்.

 

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

09 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT