நடிகை ஷர்மிளா உன்னை கண் தேடுதே போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகி ஆக நடித்தவர். மலையாளத் திரை உலகில் முதல் முதலில் அறிமுகம் ஆனவர் என்றாலும் தமிழில் தான் அதிக திரைப்படங்களில் நடித்தார்.
சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஷர்மிளா (charmila) விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படம் மூலம் ஹீரோயின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.
Youtube
இயக்குனர் கெளதம் மேனன் (Gautham vasudev menon) இயக்கிய முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதையில் (queen) ஜெயலலிதாவின் பதின்மப்பருவ கால பாட்டியாக நடித்திருந்தார். அம்மாவாக நடித்தவர் இப்போது பாட்டி வேடத்திலுமா நடிக்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது.
ஷர்மிளாவின் முகமும் பாட்டி வேடத்திற்கு பொருத்தமாகவே இருந்தது. அதன்பின்னர் அவரை வேறு எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை ஷர்மிளா துணைக்கு கூட யாருமில்லாமல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Youtube
எலும்பு பிரச்னை காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஷர்மிளாவை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். முதலில் தயங்கிய ஷர்மிளா மீண்டும் சம்மதித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை நடிகை என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவர் இருந்திருக்கிறார். ஆனாலும் ஒரு சிலர் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரிடம் பேசி வருகின்றனர். ஷர்மிளாவோ அக்கம்பக்கத்தில் கூட யாருடனும் பேசவில்லையாம். அவரைப் பார்ப்பதற்கும் யாரும் வரவில்லை.
Youtube
சினிமா வட்டாரத்தில் நடிகை ஷர்மிளா பற்றி தகவல் சேகரித்த போது கேரளாவை சேர்ந்த அவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகி இருக்கிறது. விவாகரத்தும் ஆன நிலையில் தனிமையில் குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் கூட கட்ட முடியாத கடும் பணக்கஷ்டத்திற்கு நடிகை ஷர்மிளா ஆளாகி இருக்கிறார். இவருக்கு நடிகர் சங்கம் சார்பாக சில உதவிகளை நடிகர் விஷால் செய்தும் இருக்கிறார். ஷர்மிளா நடித்த பல படங்கள் வெளிவராமல் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஷர்மிளா தெலுங்கு மற்றும் தமிழில் 30 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். 90களின் வில்லன் நடிகரான பாபு ஆண்டனி (babu antony) உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பாபு ஆண்டனி மீது இருந்த காதலால் திருமணம் செய்யாமலே அவருடன் வாழ்ந்ததாக ஷர்மிளாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பின்னர் தொலைக்காட்சி நடிகர் கிஷார் சத்யாவை பதிவு திருமணம் செய்தார் ஷர்மிளா.
Youtube
திருமணத்திற்கு பின்னர் கிஷார் பிரபலம் ஆவதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டதை உணர்ந்ததாகவும் அதனால் அவரை விட்டு பிரிந்ததாகவும் கூறி இருந்தார். அதன் பின்னர் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிற நிலையில் அவருடனும் கசப்பு ஏற்பட அவரை விட்டும் விலகி தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் வீட்டில் கீழே விழுந்து அடிபடவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் மருத்துவர்களுக்கும் இவர் யாரென தெரியவில்லை. பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் அடையாளம் கண்டு கொண்டனர். இப்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கும் திரும்பி விட்டார் ஷர்மிளா.
இதைப்பற்றி சில ஊடகங்கள் ஷர்மிளாவிடம் விசாரித்த போது ஆமாம். நான் அரசு மருத்துவமனையில்தான் மருத்துவம் பார்த்துக் கொண்டேன். இல்லாதவர்களுக்குத்தானே அரசு மருத்துவமனை இருக்கிறது என்று நறுக்கென்ற பதிலையும் கூறி இருக்கிறார்.
வாழ்வில் துரோகம் செய்யும் ஆண்களை விட அதனை அனுபவிக்கும் பெண்களுக்குத்தான் துயரங்கள் அதிகம் நேர்கின்றன.பல ஏமாற்றங்களுக்கு ஆளான நடிகை ஷர்மிளா தன்னுடைய மகனுக்காக தொடங்கி இருக்கும் இந்த வாழ்க்கை இனிமேலாவது மகிழ்வை தரட்டும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!