கர்ப்பிணி என்பது தெரிந்தும் இச்சைக்கு அழைத்த சினிமா உலகம் - உண்மைகளை உடைக்கும் சமீரா ரெட்டி

கர்ப்பிணி என்பது தெரிந்தும் இச்சைக்கு அழைத்த சினிமா உலகம் - உண்மைகளை உடைக்கும் சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் இயக்குனர் கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. முதல் படத்திலேயே நல்ல பெயர் வாங்கிய சமீரா தொடர்ந்து அஜித் உடன் அசல் மற்றும் மாதவன் உடன் வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.நடுநிசி நாய்கள் திரைப்படம் மூலம் மறுபடியும் கெளதம் மேனன் படத்தில் நடித்தார்.


இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்த சமீரா திரை கதாநாயகிகளின் வழக்கமான தொழிலதிபர் அக்ஷய் வர்தே வை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆனார். சினிமாவில் இருந்து சுத்தமாக விலகிய சமீராவிற்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.


முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்... எமி ஜாக்சனின் புதிய பார்முலா !இப்போது மீண்டும் கர்ப்பமாகி 102 கிலோ எடையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் சினிமாவில் இருந்த போது தன்னை பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களின் காம இச்சைக்கு விருந்தாக்கி கொள்ள அழைத்ததாக சமீரா புகார் அளித்திருப்பது சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


சமீபத்தில் தந்த ஒரு பேட்டியின் படி சமீரா சில வருடங்களுக்கு முன்னர் நடிப்பு உலகமே வேண்டாம் என்று விலகி கொண்டதாகவும் ஆனாலும் தான் ஏன் விலகினேன் என்பதை பற்றி ஒருவரும் கேட்கவில்லை என்பது பற்றியும் மனம் திறந்தது பேசியிருக்கிறார்.


சினிமா உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஒரு போதும் இருந்ததே இல்லை என்று வெளிப்படையாக பேசும் சமீரா தன்னையும் பலர் ஆசைக்கு இணங்க அணுகினார்கள் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியான விஷயம் என்ன என்றால் இவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் சில நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இவரை அழைத்ததாக கூறுகிறார்.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்இதனால் மனம் வெறுத்து போன சமீரா ரெட்டி சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டதாக கூறினார். நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் (sexual harassment) நடந்து கொண்டேதான் இருக்கிறது என்றும் இந்த நிலைமை மாற வெகு நாள்கள் ஆகும் என்றும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.


மீ டூ புகாரின் மூலம் சினிமா உலகமே அதிர தொடங்கி இருக்கும் நிலையில் சமீரா ரெட்டி அதன் உண்மைத் தன்மையை தனது வாக்குமூலம் மூலம் வெளிக் கொணர்ந்திருக்கிறார். ஆனாலும் யாருடைய பெயரையும் இவர் குறிப்பிடாதது குறிப்பிட்ட நபர்களுக்கு அனுகூலமாக மாறிவிட்டது என்றுதான் கூற முடியும்.


இன்னும் வெளிப்படையாக பெண்கள் இது பற்றி பயமின்றி வாய் திறந்தால் ஒழிய அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் காம வேட்கை அடங்காது. படித்த பணக்கார நாகரிகம் கொண்ட மனிதர்களாக இருந்தாலும் கூட காமம் எனும் விலங்கு தனது கோரப்பசிக்காக கர்ப்பிணிகளையும் பொருட்படுத்துவதில்லை என்பது நிச்சயம் அதிர்ச்சிக்குரிய விஷயம்தான் இல்லையா.


பிக் பாஸ் சீசன் 3 - முதல் போட்டியாளர் இவர்தானாம் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்       


பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..?                      


---                                                 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                              


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo