ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்

 ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் (Sonia agarwal) தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகி. வெகுசில படங்கள்தான் என்றாலும் அவரது பாத்திரப்படைப்புகள் வித்யாசமாக இருப்பதால் இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்கிறது எனலாம்.


தனியார் நாளிதழுக்கு பேட்டி தந்திருக்கும் சோனியா சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.


பனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி ?!சமீபத்தில் சோனியா அகர்வால் நடித்து வரும் திரைப்படம் தனிமை. இந்த படத்தில் யாழினி எனும் இலங்கை பெண் கதாபாத்திரமாக சோனியா வருகிறாராம். சென்னைக்கு தனியாக வரும் யாழினி சந்திக்கும் சவால்கள் தான் கதை. கதாநாயகியை மையப்படுத்திய திரைப்படமான தனிமையை இயக்கியவர் சிவராமன். நடன இயக்குனர் சாண்டி இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாராம்.


தனிமை என்கிற பெயரோடு சோனியாவின் புகைப்படத்தை சேர்த்து போஸ்டராக பார்க்கையில் பொருத்தமாக இருப்பது போல சினிமா ரசிகர்களுக்கு தோன்றியது. அதை போலவே உங்களுக்கும் தோன்றியதா என்று கேட்கப்பட்ட போது ஆமாம் என்று ஒப்பு கொண்டிருக்கிறார் சோனியா அகர்வால். ஆனாலும் சென்னையிலும் நண்பர்கள் உண்டு ஊரில் இருந்து யாராவது என்னை வந்து பார்த்து விட்டு போவது வழக்கம் ஆகவே நான் தனியாக இல்லை என்கிறார்.


முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்... எமி ஜாக்சனின் புதிய பார்முலா !காதல் கொண்டேன் திரைப்படம் பற்றி பேசுகையில் அப்போது எனக்கு யாரையும் தெரியாது. தனுஷ் மற்றும் உதவி இயக்குனர்கள் உதவினார்கள். செல்வராகவன் சொன்னதை அப்படியே செய்தேன் என்று கூறினார். அதை போலவே 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டையிலும் நடித்ததாகவும் அது பெருமளவில் வரவேற்பு பெற்றதாகவும் கூறினார்.


மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பயணம் பற்றி பேசுகையில் எனக்கு என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் என் வாழ்க்கை செல்லும். அந்த வழியில்தான் தான் பயணிப்பதாக சோனியா பக்குவமாக பேசியிருக்கிறார்.


உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!செல்வராகவனை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்ல முடியாது ஆனாலும் மிஸ் பண்றேன். 10 வருடங்கள் பழகி திருமணம் செய்தோம். செல்வாவின் நினைவுகள் இன்னமும் எனக்குள் இருக்கின்றன. செல்வாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது இன்னசென்ஸ் தான் என்று கூறியிருக்கிறார்.


இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆரம்பித்த பல உறவுகள் எப்படி எப்படியோ மாறித்தான் போகின்றன. அது காலத்தின் கட்டாயமா அல்லது காதலின் சாபமா என்பது யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத விடுகதை.


பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்


sonia %282%29


Sonia-Agarwal-and-Selvaraghavan-at-Aayirathil-Oruvan-Audio-2


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                                     


---                                              


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                         


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.