logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
கண் சிமிட்ட கூடாது மூச்சு விடகூடாது.. நடிப்பே வேண்டாம் என்று நினைத்த சாய் பல்லவி..ராகுல் ப்ரீத் சிங் –  செல்வராகவன் பற்றிய NGK அப்டேட்ஸ் !

கண் சிமிட்ட கூடாது மூச்சு விடகூடாது.. நடிப்பே வேண்டாம் என்று நினைத்த சாய் பல்லவி..ராகுல் ப்ரீத் சிங் – செல்வராகவன் பற்றிய NGK அப்டேட்ஸ் !

இயக்குனர் செல்வராகவன் தனது தனித்துவம் மூலம் அனைவராலும் நேசிக்கப்படுபவர். அவரது படங்களை புரிந்து கொள்ள முடியாததால் சில சமயம் வணிக ரீதியான வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

ஆனாலும் அவரது திரைப்படங்களை இப்போது பைரசியில் பார்க்கும் பார்வையாளர்கள் இப்போது செல்வாவை கொண்டாடி வருகிறார்கள். செல்வராகவன் எனும் கலைஞனின் திறமை இப்போது உச்சியில் ஏற்றப்பட்ட தீபமாக பிரகாசிக்க தொடங்கி இருக்கிறது.

நீண்ட காலம் திரைப்படம் இயக்காமல் இருந்த செல்வராகவன் தற்போது இயக்கி அடுத்த வாரம் வெளி வர போகும் திரைப்படம் NGK . அரசியல் சார்ந்த தனது பார்வையை இதில் செல்வராகவன் கொடுத்திருப்பதாக எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT

அடுத்த வாரம் இந்த படம் வெளிவரும் நிலையில்.. அதன் இரண்டு நாயகிகளும் மீடியாவிற்கு கொடுத்த பேட்டியில் செல்வராகவனின் இயக்கம் பற்றி சில ஆச்சர்யமான தகவல்களை கூறி இருக்கின்றனர்.

மற்ற படப்பிடிப்புகளை போல இல்லாமல் செல்வாவின் படப்பிடிப்பு தளம் ஒரு ஒழுங்குமுறையோடு நேர்த்தியாக நடக்கும் என்றும் படப்பிடிப்பு தளம் என்பது கோயில் போன்றது என்றும் செல்வராகவன் குறிப்பிட்டது பற்றி சாய் பல்லவி புகழ்கிறார்.

மற்ற படப்பிடிப்புகளில் அவர்கள் செல்போன் பயன்படுத்தலாம். ஆனால் செல்வராகவன் படப்பிடிப்பு முழுக்க 100 சதவிகிதம் அனைவருமே அவர்களது ஸ்க்ரிப்ட் மற்றும் வசனங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். தங்கள் கதாபாத்திரத்துக்கான பயிற்சியை மட்டும் அங்கே பார்க்க முடிந்தது. ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தான் அங்கே கற்று கொண்டதாக சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

ஷூட்டிங் முதல் நாளே வசனங்களை வீட்டிற்கு எடுத்து கொண்டு போய் பயிற்சி செய்து விட்டு வந்தாலும் ஷூட்டிங் சமயங்களில் செல்வராகவன் சொல்லி கொடுத்தால் தான் அது திருப்தியான ஷாட் ஆக முடியும் என்கிறார். ஒரு வசனம் ஒரு காட்சிக்கு எப்படி முகபாவனை வேண்டும் எப்படி அழ வேண்டும் என்பதை மிக துல்லியமாக சொல்லி தருவாராம் செல்வராகவன்.

கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் மூச்சு விடுவது கேமராவில் தெரியாமல் இருக்கும்படி கோபப்பட சொல்லி தருவாராம். அவர் நினைக்கும் உணர்வுகள் நம்மிடம் இருந்து வரும்வரை அவர் விட மாட்டாராம்.ஒருநாள் காலையில் இருந்து இரவு வரை அவர் எதிர்பார்த்த எமோஷன் சாய்பல்லவிக்கு வரவில்லையாம்.. அடுத்த நாள் பார்க்கலாம் என்று கூறி விட்டாராம் செல்வராகவன்.

அன்று இரவு தனது அம்மாவிடம் நடிப்பு வரவில்லை என்றால் நான் சினிமாவை விட்டு விலகி மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்றாராம் சாய்பல்லவி. முதல் நாள் முழுதும் அழுத்த சாய்பல்லவி அடுத்த நாள் ஒரே டேக்கில் ஓகே வாங்கியிருக்கிறார். அம்மா ஏதாவது உங்களிடம் சொன்னார்களா என்று செல்வராகவனிடம் சாய்பல்லவி கேட்க நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது என்றிருக்கிறார் செல்வராகவன்.

ADVERTISEMENT

சூர்யாவிடம் இதுபற்றி டிஸ்கஸ் செய்த போது அவரும் நிறைய டேக் வாங்கித்தான் நடிப்பதாக கூறினாராம். இவரைப்பற்றி ராகுல் ப்ரீத் சிங் கூறும் போது செல்வராகவன் மற்ற இயக்குனர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்கிறார்.

நமக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதில் அவர் சிறந்தவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால் இத்தனை முறை கண்சிமிட்ட வேண்டும் என்பது முதல் மூச்சு விடுவதால் தோள்பட்டைகள் உயர்ந்து இறங்குவதை கூட தவிர்க்க சொல்வதாக ராகுல் ப்ரீத் சிங் வியக்கிறார்.

சின்ன கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பார் செல்வராகவன் என்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.

அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

ADVERTISEMENT

 

ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனம் வரும்வரை 3 நொடி இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பாராம் செல்வா. அப்போதுதான் எடிட்டிங் டேபிளில் வேலைகள் சுலபமாக முடியும் என்பது அவரது கணிப்பு.

தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் செல்வராகவன் பெயர் எப்போதும் நிலையாக நிற்க அவரது கதைக்கான இந்த மெனக்கெடல்கள் மற்றும் அர்ப்பணிப்பு தான் காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்

 

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

ADVERTISEMENT

—-

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

ADVERTISEMENT
24 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT