அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

கோலிவுட்டின் பிளேபாய் ஆர்யா திருமணம் செய்து கொண்டதையே இன்னமும் நம்ப முடியவில்லை. அதற்குள் அவர் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


தமிழ் சினிமாவில் கண்ணியமான கமர்சியல் வெற்றியை பெற்று கொடுக்கும் நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். நீண்ட நாள் பேச்சிலர் (?) வாழ்க்கை வாழ்ந்த ஆர்யாவுக்கு ஆயிரக்கணக்கில் ரசிகைகள் இருப்பதை உணர்ந்த ஒரு தொலைக்காட்சி சேனல் அவரை வைத்து தங்கள் சேனலை பிரபலமாக்கியது.


கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயிஎங்க வீட்டு மாப்பிள்ளை என்றும் நிகழ்ச்சியின் மூலம் ஆர்யாவிற்கு 16 பெண்களை பார்த்து ஒவ்வொரு கட்டங்களாக ஒவ்வொருவரையும் அகற்றி கடைசி மூன்று போட்டியாளர்கள் வரை கொண்டு வந்தது. உலகமே பார்த்த அந்த நிகழ்வில் பெண் வீட்டார் திருமண ஆடை எடுப்பது முதல் எல்லாமே காட்டப்பட்டது.


ஆனால் கடைசி நிமிடத்தில் தனக்கு யாரையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று நழுவி விட்டார். ஆர்யாவுக்கு எப்படி கல்யாணம் நடக்குதுன்னு நாங்களும் பாக்கறோம் என்கிற ரீதியில் பார்த்து கொண்டிருந்த பல பார்வையாளர்களையும் இந்த முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


அதில் அபர்ணதி ஆர்யா மீது தீராத காதல் கொண்டிருந்தார். தான் எலிமினேட் ஆனாலும் ஆர்யாவின் காதலை பெறுவேன் என்று கூறியிருந்த நிலையில் தான் கஜினிகாந்த் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! கஜினிகாந்த் திரைப்படம் மூலம் சந்தித்த சாயிஷா (sayisha)மற்றும் ஆர்யா அங்கிருந்து தங்கள் காதல் பயணத்தை தொடங்கினர். நீண்ட நாட்களாக ரகசியமாக வைத்திருந்த இவர்கள் காதல் வெளியே கசிந்தது. அதன் பின்னர் ஒரு சுபயோக தினத்தில் தங்கள் காதலைப்பற்றி வெளியே கூறியது இந்த ஜோடி.


கடந்த மார்ச் 9,10 தேதிகளில் இந்த திருமணம் நடந்தது. பல்வேறு பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர். திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் ஸாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !இன்ஸ்டாக்ராமில் தனது ஹனிமூன் படங்களை பதிவு செய்வது முதல் ட்விட்டரில் ஹப்ஸி ஆர்யாவை வாழ்த்துவது வரை சமூக வலைத்தளங்களில் சாயிஷா பிசியாக இருக்கிறார்.


இந்நிலையில்தான் சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு அனைவரையும் குழம்ப வைத்திருக்கிறது.


me + you = என்று கணித முறையில் அவர் அனுப்பிய பதிவினால்தான் இந்த குழப்பம். ஸ்மைலிக்களை சுமந்திருக்கும் அந்த பதிவில் தலையில் கிரீடம் அணிந்த பெண் உருவம் இருக்கிறது.


நீ சுய இன்பம் அனுபவித்ததைத்தான் உலகமே பார்த்து விட்டதே! - நடிகையின் பாட்டி தந்த அதிர்ச்சி !
 

 

 


View this post on Instagram


 

 

You + me= ❤️😍😘👰 @aryaoffl #nightout#hubzy#iloveyou


A post shared by Sayyeshaa (@sayyeshaa) on
இதை பார்த்த ரசிகர்கள் அது குழந்தை என்பதாக பாவித்து சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக வாழ்த்தி வருகிறார்கள். விவரமான சாயிஷா தனக்கு வரும் கமெண்ட்கள் மற்றவருக்கு தெரியாத வண்ணம் மறைத்து வைத்திருக்கிறார்.


திருமணமான இரண்டே மாதங்களில் சாயிஷா பதிவின் படி பார்த்தால் அதற்குள் அப்பா ஆகிறார் ஆர்யா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.


இது அவர் கர்ப்பமாக இருப்பதை குறிப்பிடும் போஸ்ட் தான் என்று அடித்து சொல்கின்றனர் அவரது ரசிகர்கள். உண்மை என்ன என்பது ஆர்யா சாயிஷா தம்பதிகளுக்கு மட்டுமே வெளிச்சம்.


ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.. !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.